மஹாராஷ்டிரா தேர்தல்: முதன்முறை போட்டியிட்ட முஸ்லிம் கட்சி சாதனை!

image

இந்தியாவின் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பு இரண்டு ஆசனங்களை வென்று சாதனை படைத்துள்ளது. 

இந்த அமைப்பின் சார்பில் அவுரங்கபாத் மத்திய தொகுதியில் போட்டியிட்ட இம்தியாஸ் ஜலீல் மற்றும் பைகுல்லா பகுதியில் போட்டியிட்ட வாரிஸ் யூசுப் பதான் ஆகியோர் பலம் வாய்ந்த பாரதீய ஜனதா கட்சி மற்றும் இந்து தீவிரவாத அமைப்பான சிவசேனா சார்பில் போட்டியிட்ட பிரபல வேட்பாளர்களை படுதோல்விக்கு உள்ளாக்கியுள்ளனர்.

ஹைதராபாத் நகர பாராளுமன்ற உறுப்பினரான ஆசாதுத்தீன் தலைமையிலான இந்த கட்சி 24 தொகுதிகளில் மஹாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்துவ தீவிரவாதிகளால் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் மின்னல் வேக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இவரது கட்சிக்கு மஹாராஷ்டிர முசிம் பகுதிகளில் பாரிய ஆதரவு காணப்பட்டது.

இந்த கட்சி போட்டியிட்ட அநேகமான தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்ததுடன் மூன்று தொகுதிகளில் மிகவும் அற்ப வாக்கு வித்தியாசத்தில் ஆசனங்களை தவற விட்டது. இந்த் கட்சி தேர்தலில் வாக்குகளை பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆசனங்களை வென்றமை பெரும் ஆச்சரியத்தை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது. தமது அரசியல் நடவடிக்கைகளை விஸ்தரிக்க உள்ளதாக கட்சியின் தலைவர் அசாதுத்தின் அறிவித்துள்ளார். இது ஆரம்பம் மட்டுமே என பத்திரிகையாளர்களுக்கு அவர் கருத்து வெளியிட்டார்.

தேர்தல் வெற்றி கட்சி ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பில் ட்விட்டரில் கருத்து வெளியிட்ட ஆதரவாளர் ஒருவர் “இந்த இரண்டு ஆசனங்களும் எமது பலம், மஹாராஷ்டிரா முஸ்லிம்களின் குரல் பாராளுமன்றில் ஒலிப்பதை இது உறுதி செய்யும்” என தெரிவித்துள்ளார்.

Posted on 21/10/2014, in சர்வதேச செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

பின்னூட்டமொன்றை இடுக