ஆசிய ரக்பி 7s போட்டிகள் 10, 11 ஆம் திகதிகளில் கொழும்பில்!

image

-றிஷ்வின் இஸ்மத்

ரக்பி உலகக் கிண்ண போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் அதே நேரம், ஆசிய ரக்பி 7s போட்டிகள் எதிர்வரும் 10, 11 ஆம் திகதிகளில் (சனி, ஞாயிறு ) கொழும்பு குதிரைப் பந்தையத் திடல் – சர்வதேச ரக்பி மைதானத்தில் பகலிரவு போட்டிகளாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. 12 ஆடவர் அணிகளும், 8 மகளீர் அணிகளும் உள்ளடங்களாக 20 அணிகள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளன. இவற்றில் ஆடவர்களுக்கான முதல் சுற்றுப் போட்டிகள் 4 பிரிவுகளில் குழுநிலைப் போட்டிகளாக நடைபெறவுள்ளன. முதல் சுற்றுப் போட்டிகளுக்காக மகளீர் அணிகள் இரண்டு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன.

ஆண்களுக்கான பிரிவுகள்

A பிரிவு  : ஜப்பான் (நடப்பு சம்பியன்), ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீன-தாய்ப்பே (தைவான்).
B பிரிவு : இலங்கை, மலேசியா, பிலிபைன்ஸ்
C பிரிவு : ஹொங்காங், சீனா, கஸகஸ்தான் ( கஸகஸ்தான் – பங்குபற்றல் உறுதி செய்யப்படவில்லை)
D பிரிவு : தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து.

பெண்களுக்கான பிரிவுகள்

W பிரிவு : ஹொங்காங், ஜப்பான், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான்
X பிரிவு : சீனா, கஸகஸ்தான், சிங்கப்பூர், இலங்கை.

போட்டிகள் சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 7.30 மணிவரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிமுதல் மாலை 7.30 மணிவரையும் நடைபெறும். ஞாயிறு மாலை போட்டிகளைத் தொடர்ந்து பரிசளிப்பு வைபவமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ஆடவர் அணி : தனுஷ்க ரஞ்சன், கயான் வீரரத்ன, காஞ்சன ராமநாயக்க, சுதர்ஷன முதுதந்திரி, ஸ்ரீநாத் சூரியபண்டார, ஷெஹான் பத்திரன, சந்துன் ஹேரத், துலாஜ் பெரேரா, ரிச்சர்ட் தர்மபால, பாஸில் மரிஜா (அணித்தலைவர்), அனுருத்த வில்வர, நைகல் ரத்வத்த.  

தென்னாபிரிக்காவில் பிறந்த, இங்கிலாந்து 7s அணியின் முன்னாள் வீரரான 28 வயது மத்திவ் டர்னர், அணியின் பயிற்சியாளராகவும், ரொஹான் சிந்தக நாணயக்கார அணியின் முகாமையாளராகவும் செயற்படுகின்றனர்.

போட்டிகளுக்கான பார்வையாளர் அனுமதி இலவசம் என்று இலங்கை ரக்பி உதைப்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

இலங்கை ஆடவர் அணி சனிக்கிழமை பிற்பகல் 2.20 மணிக்கு பிலிப்பைன்ஸ் அணியை எதிர்த்து தனது முதல் போட்டியில் களமிறங்குகின்றது. இலங்கை 7s ரக்பி அணியின் தலைவராக பாஸில் மரிஜா வழிநடாத்தும் கடைசிப் போட்டித் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Posted on 09/10/2015, in விளையாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s