நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை கொழும்பு குதிரைப் பந்தய திடலில்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டார் நிருவனமொன்றிற்கு கையளிப்பு ? 100 நாள் வேலைத் திட்டம்!

இஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய வெளிநாட்டு தூதரகத்தை, தனது நாட்டில் நிறுவியுள்ளது சுவீடன!

கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது உணர்ந்து கொள்ளும்? – ACJUவின் கடிதத்திற்கு SLTJ பதில்.!

இலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.!

அமீரகத்தில் வரும் வியாழன் (15 அக்டோபர் 2015) சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை !

பாபர் வீதி இந்து ஆலய விவகாரம் தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்!

ஹெலிகளில் வலம்வரும் தேசியத் தலைவர்களே.?

image

-Inamullah Masihudeen

1999 ஆம் ஆண்டளவில் இடம் பெற்ற ஒரு படுகொலையுடன் தொடர்புபடுத்தி முன்னாள் காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் (நல்லாட்சி ஆதரவாளர்) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2005/25/12 கிறிஸ்மஸ் ஆரதனைகளின் பொழுது படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராரஜசிங்கம் அவர்கள் கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் நேற்று பாராளுமன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2009/01//08 அன்று படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க அவர்கள் கொலை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2000/09/16 ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் வபாஃத் ஆன முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவரது மரணம் விபத்து மரணமா அல்லது படுகொலையா ? என்ற விசாரணை யொன்றை அதிகாரத்தில் இருந்த அவரது துணைவியார் அவர்களோ கட்சிப் பிரமுகர்களோ இன்றுவரை கோரவில்லை.

என்றாலும், காணாமல் போனோர், படுகொலை செய்யப்பட்டோர் என சகலரதும் விவகாரங்கள் விசாரணைகளுக்கு வரும் இந்தக்கால கட்டத்தில் மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்களது மரணம் குறித்த ஒரு விசாரணையை நாம் கோரி நிற்பது காலம் கடந்த ஞானம் என்றாலும் கட்டாயமாகும்.

தலைவனுக்கே இந்தக்கதி ! என்று எதிர்கால சந்ததிகள் எமது கையாளாகாத் தனத்தை “பழிச் சொல்லை” பதிவுசெய்து வைத்து விடுவார்கள் அல்லவா ஹெலிகளில் வலம் வரும் தேசியத் தலைவர்களே..?

ஆசிய ரக்பி 7s போட்டிகள் 10, 11 ஆம் திகதிகளில் கொழும்பில்!

அல் பாஸியத்துல் நஸ்ரியா மாணவி நூர் ஸப்ரினா இசாக் மேல் மாகாணத்தில் சாதனை!

MIZANZA Twenty15இன் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் நன்றிகள்.!

பேருவளை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் வழங்கும் #MIZANZA Twenty15!

image

பாடசாலையின் கல்வி, கலை, கலாசாரம், பாரம்பரியம், விளையாட்டு, அபிவிருத்தித் திட்டங்கள், மற்றும் நிர்வாகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக உடல், பணம் மற்றும் ஏனைய வழிகளில் ஒத்துழைப்பு வழங்குவது கல்லூரியில் படித்து வெளியேறிய மாணவர்களினது கட்டாயக் கடமையாகும். இவ்வாறு வெளியேறிய மாணவர்கள் ஒரு குழுவாக, அமைப்பாக கல்லூரியின் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பே பழைய மாணவர் சங்கம் ஆகும்.

வருடா வருடம் நடைபெறும் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படும் நிர்வாக உறுப்பினர்களுடன் அங்கத்தவர்கலும் கை கோர்த்து ஒரு தலைமையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் நம்முடைய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இவ்வருடம் (2015 இல்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள களியாட்டவிழா (MIZANZA Twenty15) ஏன் ஏற்பாடு செய்கிறார்கள் அதன் மூலம் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகம் எந்த வகையில் பயன் பெறுகிறார்கள் எவ்வாறு பயன் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது பற்றிய விடயங்களை மக்களுக்காக சமூக வலைத்தளம் மூலம் அல் ஹுமைஸரா வின் பழைய மாணவர் சங்க அங்கத்தவன் என்ற பெருமையோடு பகிர்ந்துகொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறேன்.

ஒவ்வொரு வருடமும் பாடசாலையின் நிர்வாகத்தினால் வேண்டுகோள்கள் முன்வைக்கப்படுகின்ற அதேநேரம் எம்மாலும் பல குறைபாடுகள் அடையாளம் காணப்படுகின்றன. எனவே நாம் அவைகளை நிவர்த்தி செய்வதற்கான நிதியினை திரட்டிக் கொள்ளும் முகமாக ஒரு பிரதான நிகழ்வாக இந்த MIZANZA எனும் கலை நிகழ்வை மிகவும் சிறப்பாக திட்டமிட்டு ஏற்பாடு செய்துவருகின்றோம்.

இதன் மூலமாக பெறப்படுகின்ற நிதியினால் அந்த வருடத்திற்கான செலவீனங்களை ஈடு செய்துகொண்டு மேலும் அதில் ஒரு பகுதியினை பாறிய எதிர்கால திட்டங்களை நோக்காகக் கொண்டு ஒதுக்கியும் வருகின்றோம். அத்தோடு எமது கல்லூரி அதிபரினதும் ஆசிரியர்களினதும் தூர நோக்காகக் கொண்ட பல வினைத்திறன் மிக்க பாறிய செயல்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் எமக்கு நிதி தேவைப்படுகின்றது.

1918ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலை இன்னும் சில ஆண்டுகளில் தனது 100ஆவது ஆண்டை பூர்த்தி செய்ய உள்ளது. அந்த நூற்றாண்டு விழாவுக்கு முன்னால் வளம் மற்றும் திறன் ரீதியான தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, எமது சமூகத்துக்கு சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற ஆளுமைத் திறன் உள்ள நல்ல பிரஜைகளை/மாணவர்களை வெளியாக்குகின்ற இலங்கையில் ஒரு முன்மாதிரியான பாடசாலையாக எமது அல் ஹுமைஸரா தேசிய பாடசாலையை உருவாக்க வேண்டும் என்பது பாடசாலையில் கல்வி கற்று வெளியேறிய எமது (பழைய மாணவர் சங்கத்தின்) பிரதான நோக்கமாகும்.

இவ்வாறான தேவைகளை நிவர்த்தி செய்வதட்கான நிதியினை திரட்டுவதில் கடந்த பல ஆண்டுகளில் ஒரு சில சந்தர்ப்பங்களில் பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம் மற்றும் கல்லூரி நிர்வாகம் பல சிறமங்களை எதிர்கொண்டது. இவ்வாறான சிரமங்களை குறைத்துக்கொள்ள கடந்த 3 வருடங்களாக இந்த MIZANZA வை ஏற்பாடு செய்து ஒரு பாரியளவிலான நிதியை திரட்டிக்கொள்ள முடிந்தது. திரட்டிய இந்த நிதி மூலம் பாடசாலையின் கல்வி, கலை, கலாசாரம், பாரம்பரியம், விளையாட்டு மற்றும் ஏனைய தேவைகளை நிவர்த்திசெய்வதட்காக பயன்படுத்தி பல வெற்றிகளையும் அடைந்து வந்திருக்கிறோம். கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பாடுசெய்த இந்த நிகழ்வில் பல சவால்களுக்கு மத்தியிலும் நம்முடைய பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவர்கள் வெற்றிகரமான முறையில் நடத்தி முடித்தனர்.

இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் 2015 செப்டம்பர்  18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு கல்லூரி பழைய மாணவர் சங்கம் தனது முழு முயற்சியுடன் ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இந்த நிகழ்வினை (MIZANZA twenty15) வெற்றிகரமாக நடாத்த ஏற்பாட்டுக் குழுவுக்கு ( Humaisara OBA அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்துக்கு) ஊர் மக்களாகிய உங்கள் அனைவரதும், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அபிவிருத்திச் சங்கத்தினதும் பூரண ஒத்துழைப்பை வழங்கி பாடசாலையின் வெற்றிக்கு உதவுமாறு ஏற்பாட்டுக் குழு சார்பாக தயவாய் வேண்டிக் கொள்கிறேன்.

எம்மால் கடந்த ஆண்டுகளில் செய்யப்பட்ட, செய்து கொண்டிருக்கின்ற வேலைத்திட்டங்கள்

#Education
1. GCE O/L extra classes & seminars (2010, 2011 & 2012)
2. Grade 5 scholarships classes (2010, 2011 & 2012)
3. Volunteers teachers monthly salary (2011 & 2012)
4. Educational equipments (science lap) donated to school
5. Daily news paper to school

#Sports
1. Foot balls & other relevant equipments (2012)
2. Foot ball team coach monthly payment (2010 – 2012)
3. Volley ball court (2012)
4. Volley balls & other relevant equipments (2012)
5. Annual inter house athletic meet expenses (2010 – 2013)
6. High jump mattress renovation

#Developments
1. Computer lab renovation & Addition of 20 computers to computer lab (2014)
2. Watcher room renovation
3. Banner display frame in front of School
4. Main hall entrance renovation
5. Teachers locker for staff room

#Functions
1. Annual prize giving expenses
2. Prefect day & Prefect training camp expenses
3. Teachers day & Children’s day expenses
4. Principal fair-well day expenses
5. Teachers fair-well day expenses
6. Tamil day, English day & Muharram day expenses
7. Award ceremonies for Scholarships, O/L & A/L best performers, university selected students

இவ்வாறான தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும், செலவீனங்களுக்காகவும் பயன்படுத்தி வருகின்றோம்.

எதிர் வரும் வருடங்களில் செய்யவேண்டியுள்ள சில வேலைத்திட்டங்கள்

1. Educational competition week
2. Forum development project
3. School sports development programs
4. Seminars for O/L & A/L students
5. Completed ground & garden
6. Modernized canteen
7. Parking facilities for students & teachers
8. New name board & School logo block in front of school
9. Completed sound system
10. Systematic electricity power supply
11. Well equipped sports room
13. Students hostel renovation
14. High tech database developments & documents maintains systems
15. Junior library

16. சகல விதமான கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் பாடசாலை நிர்வாகத்தின் வேண்டுகோள்களுக்கு ஒத்துழைத்தல்.

17. விஷேட வகுப்புக்களை நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நடாத்துதல்.

18. சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வெளியேறும் மாணவர்களது உயர்தர கல்விக்கு வழி நடாத்துதல், ஆலோசனை கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல் மற்றும் புலமைப்பரிசில்களை பெற்றுக் கொள்ள வழி வகுத்தல்.

அத்தோடு வருடாந்தம் எமது நிதியிலிருந்து கீழ் காணும் துறைகளுக்கு

1. Education 50%

2. Sports 20%

3. Development 20%

4. Other expenses 1 0%

என்ற அடிப்படையில் செலவு செய்ய உத்தேசித்துள்ளோம்.

எனவே இவ்வாறான செலவினங்களை ஈடு செய்து கொள்வதற்காக சிறந்த ஒரு நிதி திரட்டும் நிகழ்வாக நாம் இந்த MIZANZA வை நடாத்துகின்றோம்.

இந்த நிகழ்வை வெற்றிகரமானதாக நடாத்த பழைய மாணவர்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி பாடசாலையின் வெற்றிக்கு உதவுமாறு தயவாய் வேண்டிக்கொள்கிறோம்.

அத்தோடு மேட்குறிப்பிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு உங்களால் முடிந்த பங்களிப்பை நல்குமாரு வேண்டிக்கொள்கிறோம்.

நன்றி,

-Media Team
(OBA Humaisara)

மைத்திரியின் கடிதத்தை மீண்டும் பிரசுரிக்க வேண்டாம் – தடை விதித்த மகிந்த!

17ம் திகதி கிடைக்கும் மக்கள் கருத்திற்கு தலைகுனிவேன் – மைத்திரிக்கு பதில் கடிதம் அனுப்பிய மஹிந்த!

மைத்திரியால் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்ட 7 பேரும், பதவியை ஏற்க தயாரில்லை!