நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை கொழும்பு குதிரைப் பந்தய திடலில்!

image

நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை
இன்ஷாஅல்லாஹ் நாளை டிசம்பர் 2ம் திகதி பி.ப. 6.00 மனிக்கு கொழும்பு குதிரைப் பந்தய திடலில் அமைந்துள்ள விளையாட்டுத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெறும்.

“தேசிய ஒற்றுமையும் சகவாழ்வும்” என்ற தொனிப்பொருளில் பேராசிரியர் சரத் விஜேசூரிய அவர்களால் சிங்கள மொழியில் நிகழ்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பேராசிரியர் சரத் விஜேசூரிய அவர்கள் பெரும்பான்மை சமூகத்தவர் மத்தியில் மிகவும் பிரபலமான ஆளுமையெனினும் எமது சமூகத்தினர் இவர் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதன் காரணமாக அவர் பற்றிய ஓர் சிறிய அறிமுக குறிப்பொன்றை இடுவது சிறந்தது எனக் கருதுகின்றோம்.

பேராசிரியர் சரத் விஜேசூரிய அவர்கள் தனது பாடசாலைக் கல்வியை மினுவங்கொட நாலந்தா கல்லூரியில் பெற்றுக் கொண்டதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழியியற் துறையில் விஷேட கலைமாணிக் கற்கை நெறியில் முதல் வகுப்பில் சித்தி அடைந்து அங்கு விரிவுரையாளராக நியமனம் பெற்றதுடன் தனது பட்டப் பின்படிப்பையும் அங்கேயே தொடர்ந்தார்.

பின்னர் அவரது சேவையையும் திறமைகளையும் பாராட்டி கொழும்பு பல்கலைக்கழகத்தினால் சிங்கள மொழியியற் பீட பேராசிரியர் என்ற பதவி நிலையும் வழங்கப்பட்டது.

பேராசிரியர் சரத் விஜேசூரிய அவர்கள் ஒரு கல்வியியலாளர் மட்டுமன்றி சமூக ஆர்வலரும் கூட.கடந்த ஆட்சி மாற்றத்தின் போது, காலம் சென்ற மாதுலுவாவே சோபித தேரர், தம்பர அமில தேரர், ரத்தண தேரர் ஆகியோருடன் இனைந்து மஹிந்த அரசுக்கு எதிராக முன்னனியில் இருந்து போராடியவர்.

சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக பெரும்பான்மை சமூகத்தவர் மத்தியில் அச்சமின்றி குரல் கொடுப்பவரும் தேசிய ஒற்றுமைக்காக மிகவும் தூய்மையாக உழைக்கக் கூடியவருமாவார்.

எனவே இம்முறை நளீம் ஹாஜியார் ஞாபகர்த்த பேருரையை நிகழ்த்துவதற்கு பேராசிரியர் சரத் விஜேசூரிய அவர்களே மிகவும் பொறுத்தமானவரும் தகுதியானவரும் என நாம் கருதுதினோம்.

அன்புடன் அழைக்கின்றோம்..!
இன்ஷா அல்லாஹ் கட்டாயம் வந்துடுங்கோ…
இவ்வன்னம்
ஏற்பாட்டுக் குழு.

றாபிதா அந்-நளீமிய்யீன்
(ஜாமியாஹ் நளீமியாஹ் பழைய மாணவர் அமைப்பு)

Advertisements

Posted on 01/12/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s