ஹெலிகளில் வலம்வரும் தேசியத் தலைவர்களே.?

image

-Inamullah Masihudeen

1999 ஆம் ஆண்டளவில் இடம் பெற்ற ஒரு படுகொலையுடன் தொடர்புபடுத்தி முன்னாள் காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் (நல்லாட்சி ஆதரவாளர்) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2005/25/12 கிறிஸ்மஸ் ஆரதனைகளின் பொழுது படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராரஜசிங்கம் அவர்கள் கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் நேற்று பாராளுமன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2009/01//08 அன்று படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க அவர்கள் கொலை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2000/09/16 ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் வபாஃத் ஆன முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவரது மரணம் விபத்து மரணமா அல்லது படுகொலையா ? என்ற விசாரணை யொன்றை அதிகாரத்தில் இருந்த அவரது துணைவியார் அவர்களோ கட்சிப் பிரமுகர்களோ இன்றுவரை கோரவில்லை.

என்றாலும், காணாமல் போனோர், படுகொலை செய்யப்பட்டோர் என சகலரதும் விவகாரங்கள் விசாரணைகளுக்கு வரும் இந்தக்கால கட்டத்தில் மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்களது மரணம் குறித்த ஒரு விசாரணையை நாம் கோரி நிற்பது காலம் கடந்த ஞானம் என்றாலும் கட்டாயமாகும்.

தலைவனுக்கே இந்தக்கதி ! என்று எதிர்கால சந்ததிகள் எமது கையாளாகாத் தனத்தை “பழிச் சொல்லை” பதிவுசெய்து வைத்து விடுவார்கள் அல்லவா ஹெலிகளில் வலம் வரும் தேசியத் தலைவர்களே..?

Advertisements

Posted on 09/10/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s