மஹிந்தவின் குடியுரிமையும் பறிபோகும் – ராஜித!

image

புலி­க­ளுக்கு பணம் கொடுத்­தது நிரூ­பிக்­கப்­பட்ட பின்னர் மஹிந்த ராஜபக் ஷவின் பிர­தமர் கனவு மட்­டு­மல்ல, அவ­ரது குடி­யு ­ரி­மையும் பறி­போகும் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் இன்று மஹிந்த ராஜபக்ஷவின் காற்று தடைப்­பட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் காற்று வீச ஆரம்­பித்­துள்­ளது என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.

கொழும்பில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மகா­நாட்டில் உரை­யாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனா­ரத்ன இவ்­வாறு தெரி­வித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், 

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் மஹிந்த ராஜபக் ஷவின் காற்று வீசு­வ­தாக கூறி கடந்த காலங்­களில் அவர் பெயர் அர­சி­யலில் வியா­பாரம் செய்­யப்­பட்­டது. ஆனால் இன்று மஹிந்த காற்று செய­லி­ழந்து விட்­ட­தோடு அந்தப் பெயரை வியா­பாரம் செய்ய முடி­யாத வங்­கு­ரோத்து நிலை­மைக்கு முன்­னணி தள்­ளப்­பட்­டுள்­ளது.

இதனால் இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் புகைப்­படம் போடப்­பட்டு விளம்­ப­ரங்கள் பிர­சு­ரிக்­கப்­ப­டு­கின்­றன. மைத்­திரி யுகம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மென பிர­சாரம் செய்­கின்­றனர். மைத்­திரி புகழ்­பாட ஆரம்­பித்­துள்­ளனர்.

போதைப்­பொருள், எதனோல் வியா­பா­ரிகள் ஊழல் மோச­டிக்­கார கும்­பல்­களால் எவ்­வாறு மைத்­திரி யுகத்தை ஏற்­ப­டுத்த முடியும்? ஜன­வரி 8ஆம் திகதி ஏற்­ப­டுத்­தப்­பட்ட புரட்சி தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும்.

இறு­தி­யாக இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திலும் ஜனா­தி­பதி மைத்­திரி நாம் வெற்­றி­பெற தமது வாழ்த்­துக்­களை தெரி­வித்தார். தாஜுதீன் கொலை வழக்கு விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. முன்னாள் ஜனா­தி­ப­தியின் பாது­காப்பு பிரிவில் இருந்த மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அவர்கள் வாக்கு மூலம் வழங்­கி­யுள்­ளனர். தாஜு­தீனை ஏன் இவர்கள் கொலை செய்ய வேண்டும். இவர் கடத்­தப்­பட்ட வேனும் ஷிராந்தி ராஜபக் ஷவிற்கு சொந்­த­மா­னது. எக்­னெ­லி­கொ­ட காணாமல் போனது தொடர்பில் புலிகள் இயக்­கத்தின் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட உறுப்­பினர் ஒரு­வரும், இரா­ணு­வத்தில் ஒரு­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கடந்த காலங்­களில் இடம்­பெற்ற கொலை­க­ளுக்கு புலிப்­பெ­யரே பயன்­ப­டுத்­தப்­பட்­டது. அனைத்தும் புலிகள் கணக்­கி­லேயே சேர்க்­கப்­பட்­டது. பாது­காப்புத் துறையை சார்ந்­தவர் தொடர்பில் கார்ட்டூன் வரைந்­ததால் தான் எக்­னெ­லி­கொட கடத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

இன்று எம்மை கொலை செய்­வ­தற்கும் முன்னாள் புலி உறுப்­பினர் மற்றும் இரா­ணு­வத்­தினர் அமர்த்­தப்­பட்­டுள்­ளனர். எமக்கு மரண அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

பாதாள உலக கோஷ்­டி­க­ளு­டனும், புலி­க­ளு­டனும், இரா­ணு­வத்தில் சில­ரு­டனும் தொடர்­பு­களை வைத்­துள்­ளனர். அடிப்­ப­டை­வாத ஒரு பிக்கு குழுவும் இதில் உள்­ள­டங்­கி­யுள்­ளது. ஊழல் மோச­டிகள் குற்­றங்­களை மறைத்து தப்­பிக்­கவே மஹிந்த அர­சி­ய­லுக்குள் வந்­துள்ளார்.

புலி­க­ளுக்கு பணம் வழங்­கி­யது தொடர்­பாக விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டு­வ­ரு­கின்­றன. இது நிரூ­பிக்­கப்­பட்ட பின்னர் மஹிந்­தவின் பிர­தமர் கனவு மட்­டு­மல்ல, அவ­ரது குடி­யு­ரி­மையும் பறி­போகும். எதிர்­வரும் 18 ஆம் திக­திக்கு பிறகு மஹிந்­தவின் பல கதைகள் வெளி­வரும்.

எதிர்­வரும் 17ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு ஆட்­சியை வழங்க மக்கள் தீர்­மா­னித்து விட்­டனர் என்றும் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

Posted on 14/08/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s