ரிஷாதுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியிருப்பதாக நாம் சொன்ன போது எம்மை இனவாதிகள் என்றார்கள் ஆனால் இன்று முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அவர் வாயாலே …

image

-அஷ்ரப் ஏ சமத்

அமைச்சர் ரிஷாதுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியிருப்பதாக  அப்போது நாம் சொன்னபோது எம்மை இனவாதிகள் என்றார்கள் ஆனால் இன்று முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அவர் வாயாலே ஊடக மாநாடு வைத்து கூறியிருக்கிறார் என பொது பல சேனா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் இம்முறை ஒரு முஸ்லிம் வேட்பாளரை (டாக்டர் ஷாபி ) மட்டுமே ஐக்கிய தேசிய கட்சி களமிறகக்கியுள்ளது.இது அமைச்சர் ரிஷாத்தின் சூழ்ச்சி என வடமேல் மாகாண முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா நேற்று நடத்திய ஊடக மாநாட்டில் குற்றம் சுமத்தியிருந்தார். முன்னதாக டாக்டர் ஷாபியை போட்டியிட அனுமத்திப்பதாக இருந்தால் என்னை நீக்கிவிடவும் என ரிஸ்வி ஜவஹர்ஷா தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் அதனால் தான் அவரின் பெயரை தான் நீகியதாகவும்  குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி குழு தலைவர் அமைச்சர் அகில விராஜ் குறிப்பிட்ட வீடியோ  வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் நேற்று கொழும்பில் ஊடக மாநாடு ஒன்றை நடத்திய வடமேல் மாகாண முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா அமைச்சர் ரிசாத் சூழ்ச்சி செய்து தன பெயரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டதாக குற்றம் சுமத்தியதுடன் அமைச்சர் ரிஷாத் அவரின் சகோதரர்கள் மனைவி என அவரது குடுப்பத்தார்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் காணிகள் சொத்துகளை வைத்திருப்பதாக குற்றம் சுமத்தி இருந்தார்.

இந்த ஊடக மாநாடு சிங்கள மொழியில் நடத்தப்பட்டிருந்தால் சிங்கள ஊடகங்கள் அதனை முண்டியடித்துக்கொண்டு நேற்று வெளியிட்டன இந்த நிலையில் அமைச்சர் ரிஷாதுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியிருப்பதாக  அப்போது நாம் சொன்னபோது எம்மை இனவாதிகள் என்றார்கள் ஆனால் இன்று முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அவர் வாயாலே கூறியிருக்கிறார் என பொது பல சேனா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பான விமர்சன பதிவுகள் பொதுபல சேனாவுக்கு ஆதரவான முகநூல் பக்கங்களில் வெகுவாக வெளியிடப்பட்டுள்ளன.

Posted on 12/08/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. 1 பின்னூட்டம்.

  1. இனவாதிகளுக்கு தூபமிடும், துணைபோகும் “நயவஞ்சக” முஸ்லிம் (பெயர்தாங்கி)களுக்கு அல்லாஹ்வின் கடுமையான சாபம் உண்டாகட்டும்!! நயவஞ்சகர்களை அல்லாஹ் வெளிக்காட்டும் சந்தர்ப்பங்களில் ஒன்றாக, இந்தத்தேர்தலும் அமைந்துவிட்டது! உண்மை முஸ்லிம் விசுவாசிகளே…விழித்துக்கொள்ளுங்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s