”இம்தியாஸ் பார்க்கீர் மார்க்கார், மீண்டும் ஏமாற்றப்பட்டார்” !

image

-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் நட்சத்திர  பிரச்சாரகராக விளங்கும் இம்தியாஸ் பார்க்கீர் மார்க்கார் மீண்டும் ஏமாற்றப்பட்டு, அவருக்கு துரோகம் இழைக்கபட்டுள்ளதாக  அறியவருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலான தேசியப் பட்டியல் தயாரிக்கப்பட்ட போது இம்தியாஸ்  பார்க்கீர் மார்க்காரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் இம்தியாஸின் பெயர் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக அறியமுடிகிறது.

தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்த வேளையில் இம்தியாஸை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, கரு ஜெயசூரிய மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக தேசியப் பட்டியல் வழங்குவதாக உறுதியளித்திருந்தனர். அதன்படி அவரது பெயரும் தேசியப் பட்டியலில் உள்ளீர்ப்பு செய்யப்பட்டிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் இம்தியாஸின் பெயர்  சேர்க்கப்படவேயில்லை.

இதற்கு யார் காரணம் என இம்தியாஸ் பார்க்கீர் மார்க்கார் நேரடியாக இதுவரை பதில் கூறவில்லை.

இருந்தபோதும் அவர் வழமை போன்றே ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக உழைத்து வருவதாக  தகவல் கிடைத்தது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடுத்தபடியாக இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அதிகளவு பிரச்சாரங்களில் பங்கேற்று உரையாற்றியது இம்தியாஸ். 

கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேதாஸா தன்னை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சுருக்கிக்கொண்ட நிலையில் இம்தியாஸே  முழுமூச்சாக பிரச்சாரங்களில் பங்கேற்றுள்ளார். பொதுவாக தேர்தல் மேடைகளில் எவரேனும் உரையாற்றும் போது, கட்சித் தலைவர் மேடையேறினால் உரையாற்றுபவரின் பேச்சு இடைநிறுத்தப்படும். எனினும் இம்தியாஸ் உரையாற்றும் வேளைகளில் ரணில் மேடையேறினால், இம்தியாஸ் தனது பேச்சை நிறுத்துமிடத்து இல்லை இல்லை பேச்சை எனக்காக நிறுத்த வேண்டாம் தொடரும்படி பலமுறை ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாகவும், ரணில் விக்கிரமசிங்கவும் இம்தியாஸின் பேச்சை அமைதியாக இருந்து செவிமடுப்பதாகவும அறியக்கிடைத்தது.

இவ்வாறே தேர்தல் பிரச்சார மேடைகளில் சிங்கள கடும்போக்காளர் என வர்ணிக்கப்படும் சம்பிக்க ரணவக்க கூட, இம்தியாஸின் பேச்சை ஆர்வத்துடன் செவிமடுக்கும் ஒருவர் என கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார மேடைகளில் இம்தியாஸ் இன ஐக்கியம், தேச நலன், சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து பேசிவருவது அவரை ஒரு நட்சத்திர பேச்சாளராக்கியுள்ளது.

தனது சொந்த செலவிலும், நண்பர்களின் வாகனங்களில் சென்றும் ஒவ்வொரு மாவட்டம்தோறும் ஐக்கிய தேசியக் கட்சிக்காக பிரச்சாரங்களில் ஈடுபடும் இம்தியாஸிற்கு, அண்மையில் கரு ஜெயசூர்யவிடமிருந்து 2 இலட்சம் ரூபா பணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த பணத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு செலவிடுமாறும் கூறப்பட்டுள்ளது. இருந்தபோது அந்தப் பணத்தை திருப்பியனுப்பியுள்ள இம்தியாஸ், தனது சொந்த செலவிலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்காக பரச்சாரங்களில் ஈடுபட்டுவருகிறார்.

இதுவரை  பல நூற்றுக்கணக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரங்களில் அவர் பங்கேற்றுள்ளார். இன்னும் பல பிரச்சாரங்களிலும் அவர் பங்கேற்றகவுள்ளார். 

மஹிந்த ராஜபக்ஸ இம்தியாஸின் விட்டுக்குச் நேரடியாக சென்று, தம்முடன் இணையுமாறு அழைப்பு விடுத்தும், இதுவரை பல்டி அடிக்காமல் கட்சிக்காக நேர்மையான முறையில்  உழைக்கும் இம்தியாஸ் பார்க்கீர் மார்க்கார் தேசியப் பட்டியலிருந்து இறுதி நேரத்தில் தூக்கபட்டதன் மர்மம் யாருக்கும் புரியும்???

image

image

Advertisements

Posted on 10/08/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s