இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்பதை கண்டிக்கிறேன் – சிங்களமொழி வானொலியில் முபாரக் மௌலவி!

image

இலங்கையை பொறுத்த வரை சம்பிரதாயபூர்வமான முஸ்லிம்கள், ஏனைய முஸ்லிம்கள் என இரண்டு பிரிவினர் இல்லை என முஸ்லிம் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டர்.

நெத் எப் எம் சிங்கள மொழி வானொலிக்களித்த செவ்வியிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முபாறக் மௌலவி மேற்படி வானொலிக்களித்த பேட்டி வருமாறு:

கே: இலங்கையில் உள்ள தவ்ஹீத், ஜமாஅதே இஸ்லாமி போன்றவை தீவிரவாதிகள் என்றும் ஏனைய முஸ்லிம்கள் சம்பிரதாயபூர்வ முஸ்லிம்கள் என்றும் சொல்லப்படுவது பற்றி?

பதில்: தவ்ஹீத், ஜமாஅதே இஸ்லாமி போன்றவை தீவிரவாத இயக்கங்கள் அல்ல. அத்துடன் இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் சம்பிரதாயபூர்வமான முஸ்லிம்கள்தான். இங்கே யாரும் தீவிரவாதிகள் அல்ல. இவர்களுள்  தவ்ஹீத், ஜமாஅதே இஸ்லாமி என்பன இஸ்லாத்தை கற்ற கூட்டத்தினர். உதாரணமாக பௌத்த மக்கள் மத்தியிலும் படித்த பௌத்தர்கள் சாதாரண பௌத்தர்கள் என உள்ளதை காணலாம். சாதாரண பௌத்தர்கள் பௌத்தத்தை தாம் கேள்விப்பட்டது போன்று எடுத்துக்கொள்கின்றனர். படித்த பௌத்தர்கள் தாம் படித்தது போன்று வழிபடுகின்றனர். இந்த இரண்டு சாராருக்குமிடையில் முரண்பாடு ஏற்படுவதையும் நாம் காண்கிறோம். இது இயற்கையும் கூட. முஸ்லிம்கள் மத்தியிலும் இஸ்லாத்தை படித்த முஸ்லிம்கள் படிக்காத முஸ்லிம்கள் என்ற பிரிவே உண்டு.

முன்னர் வாழ்ந்த முஸ்லிம்கள் இஸ்லாத்தை அதன் அடிப்படைகளை கற்காமல் பாரம்பரிய வழியில் அதனை பின்பற்றினார்கள். தற்போது அவர்கள் இஸ்லாத்தை படித்து பின்பற்றுகின்றார்கள். அவ்வாறான படித்த மக்கள் உருவாகுவதற்கு மேற்படி இயக்கங்களும் பிரதான காரணமாகும்.

கே: இஸ்லாமிய பயங்கரவாதிகளான ஐ எஸ் இயக்கத்தில் இலங்கையை சேர்ந்த ஒருவர் இணைந்து மரணமானதாக செய்திகள் வந்தன. இது பற்றி உங்கள் கருத்து?

ப. முதலில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்ற சொற்பிரயோகத்தை நான் வன்மாயாக கண்டிக்கிறேன். ஐ எஸ் இயக்கத்தை சேர்ந்தோர் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்களின் பயங்கரவாத செயல்களை இஸ்லாத்துடன் சம்பந்தப்படுத்தக்கூடாது. உதாரணமாக இலங்கையில் போராடிய விடுதலைப்புலிகளில் கணிசமானோர் இந்துக்களாவர். ஆனாலும் அவர்களின் பயங்கரவாத நடவடிக்கையை யாரும் இந்து பயங்கரவாதம் என அழைக்கவில்லை. அதே போல் நமது நாட்டில் 80 களில் நிலவிய ஜே வி பி ஆயத போராட்டமும் பயங்கரவாத சூழ்நிலையையே தோற்றுவித்திருந்தது. அவர்கள் அனைவரும் சிங்கள பௌத்தர்கள். அதற்காக அவர்களின் பயங்கரவாதத்தை யாரும் பௌத்த பயங்கரவாதம் என அழைக்கவில்லை. ஆக ஐ எஸ் என்பது தனி ராஜ்யத்துக்காக போராடும் அமைப்பினர். அவர்களின் செயற்பாடுகள் பல இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை.

   அத்துடன் இலங்கை நபர் ஒருவர் ஐ எஸ்ஸில் இணைந்து கொல்லப்பட்டதாக செய்திகள் கூறின. ஆயினும் அவை இன்னமும் சரியான முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆகவே உறுதிப்படுத்தப்படாத விடயத்தை நாம் தூக்கிப்பிடிக்க முடியாது.

கே: பாகிஸ்தானிலிருந்து காதியானிகள் இலங்கை வந்துள்ளதாகவும் அவர்கள் பள்ளி கட்டுவதாகவும் இவர்களால் சம்பிரதாயபூர்வ முஸ்லிம்களுக்கு இடைஞ்சல் எனவும் சொல்லப்படுகிறது. இது பற்றி?

ப: காதியானிகள் என்போர் முஸ்லிம்கள் அல்ல என்பதே எமது அகில இலங்கை ஜம்இய்த்துல் உலமாவின் தீர்ப்பாகும். அத்துடன் பாகிஸ்தான் அரசும் அவர்களை முஸ்லிம்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அவர்கள் முஹம்மது நபியை இறுதித்தூதர் என்பதை மறுத்து இந்தியாவில் பிறந்த மீர்சா குலாம் என்பவரை நபியாக ஏற்றுக்கொள்கின்றனர். இதனால் அவர்கள் தமக்கு அறபு பெயர்கள் வைத்திருந்த போதும் முஸ்லிம்கள் அல்ல என்பதே எமது உறுதியான கருத்தாகும்.

அவர்களில் சிலர் இலங்கைக்கு அகதிகளாக வந்ததாக நானும் கேள்விப்பட்டேன். அவர்களால் முஸ்லிம் மக்களுக்கு இடைஞ்சல் ஆயின் அது பற்றி இலங்கை அரசும், முஸ்லிம் விவகார அமைச்சம் அவசியம் தலையிட்டு அவர்களை கட்டுப்படுத்த வேண்டும். 

Advertisements

Posted on 08/08/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s