ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திலேயே முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது  –  உவைஸ் ஹாஜியார் !

image

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திலேயே முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது  – 
உவைஸ் ஹாஜியார் 
முஸ்லிம்களின் பாதுகாப்பும் வர்த்தக முன்னேற்றமும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் மட்டுமே தங்கிவுள்ளது  என மத்திய மாகான சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் தெரிவித்தார் 
பாராளுமன்ற பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கையில்  ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக மேற்கொள்ளும் பிரசார நடவடிக்கையில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே உவைஸ் ஹாஜியார் இதனை தெரிவித்தார் 
கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் போட்டியிடும் அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்லவை ஆதரித்து மடவாளை நகரில் திறந்து வைக்கப்பட்ட  தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே உவைஸ் ஹாஜியார் இந்த கருத்தை முன் வைத்தார் 
அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்லவின் பாததும்பற அமைப்பாளர் டாக்டர் எம்.எ.எம்.ஹனீப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உவைஸ் ஹாஜியார் மேலும் கூறுகையில் 
கடந்த அரசாங்கத்தின் போது முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ வில்லை முஸ்லிம்களின் சொத்துக்கள் வர்த்தகம் மத வாளிப்பாடுகள்  போன்ற அனைத்துமே அச்சுறுத்தலாகவே இருந்தது 
இதனை தட்டிக்கேட்க எந்த முஸ்லிம் அரசியல் தலைமைத்துவமும் முதுகெலும்புடன் செயல்பட வில்லை 
முஸ்லிம்கள் பாதிக்கப் படும் போது அரசின் பங்காளியாக தமது பதவியை பாதுகாப்பதட்காக வாய் மூடி மௌனியாகவே இருந்தனர் 
முஸ்லிம்கள் பாதிக்கப் பட்ட போது முஸ்லிம்கள் குறித்து பாராளுமன்றில் குரல் கொடுத்த ஒரு பெரும்பான்மை சமூகத்தின் அரசியல் தலைமைத்துவம் இந்த அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்லதான் 
இவர் பாராளுமன்றில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து பேசும் போது பாராளுமன்றில் முஸ்லிம் தலைவர்கள் இருக்க வில்லை என்பதையும் கவலையுடன் கூறத்தான் வேண்டும் 
எனவே நாம் முஸ்லிம்கள் நன்றிவுள்ளவர்களாக செயல் பட வேண்டும் எதிவரும் தேர்தலில் நாம் வாக்களிக்கும் போது எமது சமூகத்தின் அடையாளமாக முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிக்கத்தான் வேண்டும் இருந்து நாம் அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல போன்ற இனவாதமற்ற முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போது நமது தலைவர்கள் கண் மூடி வாய் மூடி இருக்கும் போது எமக்காக குரல் கொடுத்த லக்ஷ்மன் கிரிஎல்ல போன்றவர்களுக்கு வாக்களிக்க மறந்து விடக்கூடாது என்றார் உவைஸ் ஹாஜியார் .

Advertisements

Posted on 05/08/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s