வீசி தோற்பார் என்றால் வழக்குத் தாக்கல் எதற்கு?

-சம்மாந்துறை ஆசிக் 

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் தோற்பார் எனக் கூறும் முகா – அவரை பாராளுன்றம் செல்ல அனுமதிக்கக் கூடாது என வழக்குத் தாக்கல் செய்துள்ளமை எதற்காக?

நியாயக பூர்வமான இந்தக் கேள்வி அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை மக்கள் மத்தியிலும் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களில் உள்ளவர்கள் மத்தியிலும் நேற்று முதல் எழுப்பப்பட்டு வருகின்றது.

உபவேந்தர் இஸ்மாயில் அவரது பதவியை இராஜிநாமா செய்யாமல் வேட்பாளராக குதித்துள்ளார்.

 என்று குற்றம் சுமத்தி நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் பிற்பாடே முகாவை நோக்கி முஸ்லிம்கள் இந்தக் கேள்வியை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

முகா எந்தவொரு கணமும் எதிர்பார்த்திராத வேளையில் அ.இ.ம.கா அம்பாறை மாவட்டத்தில் குதித்துள்ளமை முகாவுக்கு பாரிய சவாலையும் சரிவையும் ஏற்படுத்தியுள்ளது.

தனிக்காட்டு ராஜாவாக அம்பாறை மாவட்டத்தில் கோலோச்சி எவ்வித சேவையும் செய்யாமல் இந்த முறையும் எம்பியாகலாம் என்ற முகா தரப்பினரின் கனவு பகல் கனவாகிக் கொண்டிருக்கின்றது.

இதிலிருந்து தப்பித்து இழந்து போயிருக்கும் தமது செல்வாக்கை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக முகா தரப்பு பல்வேறு போலி மூட்டைகளை அவிழ்த்த வண்ணமுள்ளனர்.

அவற்றில் முதலாவது பொய் மூட்டைதான் வீசி இஸ்மாயில் தொடர்பான பொய்க் குற்றசாட்டு.

சிறநத் சிரேஷ்ட கல்விமானான வீசி இஸ்மாயில் – இவ்வாறான பிரச்சினை தனக்கு ஏற்படும் என்று தெரியாமலா வேட்பு மனுவில் கையெழுத்திட்டிருப்பார் என்பதை முதலில் முகா தரப்பினர் உணர்ந்து கொள்ள வேண்டும். அதுமட்டுன்றி முகாவிடம் அன்று காணப்பட்ட சட்டத்தரணிகள் குழுமத்தை விஞ்சிய சிரேஷ்ட சட்டத்தரணிகளைக் கொண்ட சட்டத்தரணிகள் குழுவொன்று இன்று அ.இ.ம.கா வில் சட்ட வழிகாட்டல் குழுவாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இவர்களால் மிக மிக நுணுக்கமாக அணு அணுவாக பரிசீலிக்கப்பட்ட பின்புதான் அ.இ.ம.கா வில் ஒவ்வொரு வேட்பாளர்களும் வேட்பு மனுவில் கைச்சாத்திட அனுமதிக்கப்பட்டனர். இதற்கொரு சான்றாக – அம்பாறை கச்சேரியில் அ.இ.ம.கா வேட்பு மனு தாக்கல் செய்த போது மேற்படி வீசி இஸ்மாயில் தொடர்பான குறித்த குற்றச்சாட்டை முன்வைத்து வேட்பு மனுவில் அவரது பெயரை நீக்குமாறு முகா வேட்பாளர் மன்ஸூரால் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த எதிர்ப்பு மனுவை அப்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி இந்தக் குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை, நியாயமும் இல்லை என அவ்விடத்திலேயே மறுதலித்து அவரது எதிர்ப்பு மனுவை நிராகரித்தார். 

அத்துடன் வீசி இஸ்மாயில் தாராளமாக போட்டியிடலாம் என்றும் அனுமதியும் வழங்கினார்.

இவ்வாறு உண்மை நிலை இருக்கத்தக்கதாக அந்த உண்மை நிலையை மக்கள் மத்தியில் மறைத்து மக்கள் மத்தியில் அ.இ.ம.காவுக்குள்ள செல்வாக்கை இல்லாதொழிக்கும் மயக்ககரமான ஒரு செயற்பாடாகவே முகா வின் இந்;த வழக்குத் தாக்கல் நோக்கப்பட வேண்டியதாக உள்ளது.

அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை எடுப்பார் கைப்பிள்ளைகளாக எப்போதும் நோக்கி வரும் கட்சியினதும் ஹக்கீமின் அடிமைத்தனத்திலிருந்தும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை மீட்பதே ரிசாத் பதியுதீனின் இன்றைய ஒரே இலக்கு. இந்த இலக்கு நிச்சயம் சாத்தியமாக உள்ளது  என்பதை உணர்ந்துள்ள ஹக்கீம், வீசி பாராளுமன்றம் சென்றால் தனது காதை அறுப்பேன் என்று கூறிய விடயமாகும்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை பொறுத்தவரை ஹக்கீமின் இந்த போலிப் பிரச்சாரங்கள் இந்த முறை எடுபடாது என்பதை மிகத் தெளிவாக உணர்ந்துள்ளனர்.

இன்று மருதமுனை சாய்ந்தமருது போன்ற பகுதிகளில் ஏற்பாடாகியுள்ள முகா வின் கூட்டங்களில் உரையாற்ற இருக்கும் ரவூப் ஹக்கீம், மேற்படி வீசி இஸ்மாயில் தொடர்பில் போலிக் குற்றச்சாட்டுக்களை மீண்டும் முழங்குவதுடன் இரண்டாம் கட்ட பொய்க் குற்றச்சாட்டொன்றையும் இன்று ஆரம்பித்து வைத்து விட்டு உடன் கண்டி புறப்பட்டு செல்வார் என்பதே இன்று அனைவரிடமும் உள்ள எதிர்பார்ப்புமாகும்.   

Advertisements

Posted on 31/07/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s