ஜே.வி.பி நிறுத்தியுள்ள வேட்பாளர்கள், குற்றச்சாட்டுக்கள் எதுவுமற்றவர்கள் – லால்காந்த!

image

ஜே.வி.பி மட்டுமே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சியாகும் என ஜே.வி.பி.யின்  கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு வேட்பு மனு வழங்குவதில்லை என்ற வாக்குறுதிகளை ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் நிறைவேற்றத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் ஜே.வி.பி கட்சி இம்முறை பொதுத் தேர்தலில் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எதுவுமற்றவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றமற்றவர்கள் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், குற்றவாளிகள், எதனோல் இறக்குமதியாளர்கள், ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் இரண்டு பிரதான கட்சிகளிலும் போட்டியிடுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஜே.வி.பி தனது வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Posted on 29/07/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s