60 மாதங்களில் புதிய நாட்டை உருவாக்கும் ஐம்பெறும் வேலைத் திட்டம்!

image

ஜனவரி 8ம் திகதிக்கு முன்னர் இந்த நாட்டில் மோசமானதொரு குடும்ப ஆட்சியே இடம்பெற்றது. பொருளாதார நலன்கள் கிட்டிய நண்பர்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதற்கெதிராக மக்கள் குரல் எழுப்புவதை எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக அனைத்து சுதந்திரங்களையும் புதைத்து விடப்பட்டிருந்தது. கடும் அரசியல் அடக்கு முறையொன்றே கடைப்பிடிக் கப்பட்டு வந்தது.

போர் வெற்றியின் பலாபலன்கள் எதுவும் நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை இனங்களுக்கிடையே சந்தேகமும், நம்பிக்கையீனமுமே அதிகரித்துக் காணப்பட்டன. பொருளாதாரம், விவசாயம், கைத்தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகள் தொடர்பில் எந்தவிதமான திட்ட மிட்ட வேலைத் திட்டமும் முன்னெ டுக்கப்படவில்லை. நடைமுறைப்படுத்தப்பட்ட அன்றைய திடீர் கொள்கை காரணமாக அனைத்துத் துறைகளும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டன.

ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்றே உலகளாவிய மட்டத்தில் இலங்கை ஓரங்கட்டப்பட்ட ஒரு நாடாக மாறிப் போனது மிஷிஜி + சலுகை கிடைக்காது போய்விட்டது. மீன் ஏற்றுமதி தொடர்பில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்துச் சுமைக ளையும் சுமக்கும் நிலை மக்களுக்கே ஏற்பட்டது. நெடுஞ்சாலைகள், துறைமுகம், விமான நிலையங்கள், மாநாட்டு மண்டபங்கள், கோபுரங்கள் போன்ற அடிப்படை வசதிகள் அமைக்கப்படுவ தன் மூலம் நாட்டு மக்ளின் தேவைக ளுக்கப்பால் அதன் மூலம் உழைத்துக் கொள்ளும் குடும்ப ஆதிக்கத்தை வள ப்படுத்திக் கொள்வதாகவே காணப்பட்டது.

இது போன்ற மிகப் பெரிய வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதன் மூலம் நாட்டின் தாய்மார்கள், பிள்ளைகள் போஷனை குன்றி நோயாளிகளாக மாறும் நிலை ஏற்பட்டது. கற்ற கல்விக்குப் பொருத்தமானதொரு தொழிலை தேடிக் கொள்ள முடியாத நிலைக்கு இளைஞர்களும், யுவதிகளும் எதிர்காலம் குறித்து எதிர்பார்ப்புகள் சிதறடிக்கப்பட்டன. நாட்டின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கேட்க முடிந்தது வாழ்வதற்கு வழியில்லை என்ற வேதனைக் குரல்களே ஆகும். ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிரான நிலைப் பாட்டைக் கொண்டவர்கள் காலத்துக்குக் காலம் வெள்ளை வான்கள் மூலம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தோடு ராஜபக்ஷ ஆட்சியிலிருந்த காமலீலை கொண்ட வர்களுக்கு பெண்களின் கற்பை சூறையாடவும், உடல் ரீதியான இம்சைகளுக்கும் வரம் கிடைத்த வண்ணம் இருந்தது.

இந்த ஒழுக்கம் கெட்ட யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு ஜனவரி 8ம் திகதி நாட்டு மக்கள் ராஜபக்ஷ ஆட்சியை அடித்து வீழ்த்தி விட்டனர்.

சர்வாதிகார, குடும்ப ஆதிக்க மோச மான ஆட்சியின் முலம் கஷ்டங்களை எதிர்கொண்ட மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியமை மிக முக்கிமானதாக காணப்பட்டது. அதன் பிரகாரம் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அத் தியாவசிய உணவு பொருட்கள் பெற்றோல், டீசல் மண்ணெண்ணை போன்ற எரி பொருட்கள், சமையல் எரி வாயு உட் பட பலவகையான பொருட்களின் விலைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசு ஊழியர்களின் ஊதியத்தை 10000/- ரூபாவால் அதிகரிக்க முடிந்தது. குறைந்த வரு மானத்தைக் கொண்ட கர்ப்பிணி தாய்மாருக்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான போஷணை உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக் கொடுத்தோம். சமுர்த்தி நிவாரணம் அதிகரிக்கப்பட்டது. மோசடிக ளுக்கு சாதகமாக அமைந்த நிறைவேற்று அதி கார ஜனாதிபதியிடம் காணப்பட்ட அளவுக்கு மிஞ்சிய அதிகாரங்கள் கழ ற்றப்பட்டன. இலஞ்சம், ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்காக குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதற்காக புதிய பொறிமுறையொன்றை ஆரம்பித்தோம். பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலமடையச் செய்தோம், நல்லிணக் கத்தின் பக்கம் நாட்டை முன்னெடுத்து வருகின்றோம். இவ்வாறான நடவடிக்கை எடுக் கப்பட்டதையடுத்து புதிய பாரா ளுமன்ற மொன்றை அமைத்துக் கொள் வதற்கு நாட்டு மக்களுக்கு சந்தர்ப்பத்தை பெற்றுத் தருவதாக நாம் ஜனாதிபதி தேர்தலின் போது உறுதியளித்திருந்தோம்.

அதன் பிரகாரம் 2015 ஜனாதிபதி தேர் தலின்போது நாட்டையும், மக்களையும் மீட்டெடுப்பதற்காக உங்கள் முன்வந்து அனைத்து அரசியல் கட்சி அமைப்புகள் மற்றும் அரசியல் அமைப்புகள் உள்ளிட்ட பல அணிகள் ஐக்கிய தேசியக் கட்சி களின் ஒன்றுபட்டு பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்களாணையை கோரி நிற்கின்றது. அதன் பொருட்டு நாம் ஐந்தாண்டுக்குள் ஐந்து அம்ச வேலைத் திட்டத்தை மக் கள் ஆணை கோருகின்றோம். இந்த 5 வருடங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் நிலையான நாட்டை அமைப்பதற்காக ஐந்து விதமான 60 மாதத் திட்டமாக ஐந்து விதமான வேலைத் திட்டத்தை முன்வைத்திருக் கின்றோம்.

இன்று முழு உலகும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலாசார சீரழிவுக்குள் சிக்கியுள்ளது. சூழல் பாதுகாப்பு இல்லாத, இயற்கையோடு முரண்பட்டுக் கொள்ளும் பேராசை பொருளாதாரம் காரணமாக இன்றைய உலகம் பேராபத்துக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு எதிர்காலம் குறித்த தூர நோக்கோடு நாம் அரசியல் பொருளாதாரக் கொள்கையை தயாரித்துக் கொள்ளவிருக்கின்றோம்.

இவ்விடயத்தில் எமது பிராந்திய மற்றும் பூகோள அமைப்புக்கமைய, இயற்கை வளங்கள், காலநிலை மனித உழைப்பு, உன்னதமான ஒழுக்க விழுமியம், சிறப்பு மிகு கலாசாரத்தையும் கவனத்தில் கொண்டு எமது உபாயங்களை தயாரிக்கவிருக்கின்றோம்.

எமது பொருளாதார நோக்கு சகலரும் வசதிபடைத்த சமூகம்

எமது புதிய பொருளாதார வேலைத் திட்டத்துக்கு அடித்தளமாவது அறிவுக் கமைவானதான போட்டித் தன்மை கொண்ட சமூக சந்தைப் பொருளாதாரமா கும். இது இடதுசாரி பொருளாதாரத்துக் கும் முதலாளித்துவ பொருளாதாரத்தை யும் விட முன்னேற்றம் கொண்ட மனித நேயம் கொண்ட பொருளாதாரமா கும். போட்டித்தன்மை சந்தைப் பொருளாதாரம். அரசாங்கத்தின் முழு நிருவாகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தும் பொதுமக்களுக்கு நியாயபூர்வமான சமூக நலன்களை பெற்றுக் கொடுப்பதை உறுதிப்படுத்தும். சமூகத்தின் இயலாமை முதுமை நிலை மற்றும் வேலைவாய்ப் பில்லாத மக்களுக்கு நலன்களையும், சூழல் பாதுகாப்பு தொடர்பான விசேட கவனமும் சமூக சந்தைப் பொருளாதாரத்தின் வழமையான இலட்சணமாகும். உத்தேச சமூக சந்தைப் பொருளாதாரம் வெளிப்படுத்துவது திறந்த பொருளாதாரத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தக்கூடியதான பொருளாதார ஜனநாயகமாகும்.

(1) பொருளாதாரத்தை முன்னேற்றும் வேலைத்திட்டம் பத்து இலட்சம் வேலைவாய்ப்பு

l இலங்கை மற்றும் கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையில் தற்பேது பெரியதொரு அபிவிருத்தி இடைவெளி காணப்படுகிறது. உயரிய அபிவிருத்தியை உருவாக்குவதன் மூலம் இந்த இடைவெளியை பூரணப்படுத்தி மேலதிக வேலை வாய்ப்புகள் 10 இலட்சத்தை உருவாக்குவதற்கும். வருமானத்தை அதிகரிப்பதற்கும் உறுதியான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

l இங்கு தேசிய சந்தை வாய்ப்பை விட விசாலமானதொரு சந்தை வாய்ப்பு இலங்கைக்கு தேவைப்படுகின்றது. மிஷிஜி + வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதனூடாக எமக்கு ஐரோப்பாவின் 50 கோடி மக்கள் தொகையை எமது சந்தையாக மாற்றிக்கொள்ள முடியும். மிஷிஜி + வரிச்சலுகை நாம் இழந்தது ஊழல் நிறைந்த ராஜபக்ஷ ஆட்சியிலாகும். அதற்குப் புறம்பாக கடற்றொழில் உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய முடியாத வகையில் தடை உத்தரவும் இடம்பெற்றது. தற்போது நாம் மேற்படி தடையை நீக்குவதற்கும் மிஷிஜி + ஐ மீண்டும் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். மிஷிஜி + வரிச் சலுகைக்குப் புறம்பாக அமெரிக்கா, இந்தியா, சீனா, சிங்கப்பூர், கிழக்காசியவினதும் மற்றும் சார்க் நாடுகளுடனும் வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களைக் செய்து கொள்வதனூடாக எமது உற்பத்திகளுக்கு மேலும் சிறந்த சந்தை வாய்ப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

l பொருளாதாரத்தை நவீன மயப்படுத்தல் மற்றும் பத்து இலட்சம் தொழில்வாய்ப்பு வேலைத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பாக கண்காணிப்பதற்காக தேவைப்படும் அதிகாரங்களை அரசுக்கு வழங்குவதற்குரிய அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் பாராளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்வோம். அந்த இலக்கை நோக்கி நெருங்குவதற்காக பொருளாதார அபிவிருத்தி பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்காக விசேட அபிவிருத்தி முகவர் நிலையத்தை அமைக்கவிருக்கின்றோம்.

உலக சந்தைக்குள் பிரவேசித்தல்

l இந்த பாரிய பூகோளச் சந்தைக்குள் நுழைவதன் மூலம் எமது உற்பத்திகள், சேவைகள், விவசாய மற்றும் கடற்றொழில் உற்பத்திகளுக்காக அந்த வர்த்தகச் சந்தையில் ஒரு பகுதியையாவது பெற்று க்கொள்ள வேண்டுமானால் இலங்கை பூகோள ரீதியில் போட்டித் தன்மையாக மாற வேண்டும்.

இதன் பிரகாரம் இலங்கை போட்டித் தன்மையை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு,

1. விவசாயிகள், சிறுகைத்தொழிலாளர்கள் மற்றும் சேவை வழங்குபவர்கள் உள் ளிட்ட சிறிய விவசாயிகளை வலைய மைப்புக்குள் உள்வாங்கி, மக்கள் நிறுவ னங்கள் மற்றும் கூட்டுறவு போன்ற கூடடி ணைந்த அமைப்புகளூடாக பூகோள வர்த்தக சந்தையுடன் இணைத்துக் கொள்ளவும்.

2. பூகோள ரீதியில் போட்டித்தன்மை கொண்ட வெளிநாட்டு கம்பனிகள் இலங்கையில் கைத்தொழில் மற்றும் வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்கு ஊக்கு வித்தல்,

3. கூடுதல் உற்பத்தி விரிவாக்கப்படுவதன் மூலம் உலகச் சந்தையை போட்டித் தன்மையுடன் வெற்றிகொள்ளத் தேவையான அனைத்து வசதிகளையும் இலங்கை வர்த்தக நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுக்கவும்,

4. பொருளாதாரத்தை டிஜிடெல் மயப் படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகளை ஏற் படுத்தி மிக விரைவான அபிவிருததியினூ டாக வருமானத்தை உயர் மட்டத்துக்கு அதிகரித்துக்கொள்ள இலங்கையால் முடியுமென நம்புகின்றோம்,

l விவசாயம். கடற்றொழில் மற்றும் சேவைகள் நவீனமயமாவதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தை உயிரூட்ட துரிதமான மற்றும் திட்டமிட்ட வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவோம். கிராமிய பிரதேச மற்றும் நகர்ப்புறங்களின் மைய பகுதிகளுக்கு இடையில் வருமான ரீதியிலோ. வாழ்க்கைத் தர மட்டத்திலோ முரண்பாடு காணப்படக்கூடாது.

இலங்கைக்குள்ளும், பிராந்திய நாடுகளி லும் இடம்பெறும் துரித நகர மயமாதலால் உருவாகக்கூட விளைவுகள் எதிர்காலத்தில் உணவுக்காக மிகவும் கூடுதல் கேள்வி எழக்கூடும். ஏற்பட இந்தச் சந்தர்ப்பத்தின் மூலம் பயனைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இலங்கையில் கிராமிய பொரு ளாதாரத்தை தயார்படுத்தல் வேண்டும்.

பொருளாதார அபிவிருத்தி பாரிய வலயங்கள் 45

அரசாங்கம் நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் பொருளாதார அபிவிருத்தி பாரிய வலையங்களை நிறுவும். கிழக் காசியாவில் உள்ள நாடுகளில் காணப்படும் அபிவிருத்தி வலயங்களில் அடிப்படை வசதிகளுக்கும் சேவைகளுக்கும் நிகரான அடிப்படை வசதிகளையும் சேவைகளையும் இந்த பாரிய வலயங்களிலும் ஏற்படுத்துவோம். இதன் மூலம் உற்பத்திக் கைத்தொழில், தொழில்நுட்பம். விநியோகச் சேவை, விவசாயம், சுற்றுலாத்துறை போன்றவற்றுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தெடுத்து தேசிய பொருளாதாரத்தை பூகோள ரீதியில் உயர்வான போட்டித்தன்மை கொண்ட தரத்துக்கு கொண்டுவரக்கூடியதாக இருக்கும். உயர்ந்த சம்பளத்துடனான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிக் கொள்ள முடியும். அதேபோன்று பாட சாலை, மருத்துவமனை போன்று பொது அடிப்படை வசதிகளையும் அபிவிருத்தி செய்வோம். இதுவரையில் அபிவிருத்தி வலயங்கள் 45 அடையாளம் காணப் பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி பாரிய வலயங்கள் 11

l அம்பாந்தோட்டை : கப்பல் தயாரிப்பு உட்பட உற்பத்திக் கைத்தொழில்

l ரைகம் : பாவனையாளர் மற்றும் புதிய தொழில்நுட்ப உற்பத்தி

l மகாஓயா : உற்பத்திக் கைத்தொழில்

l திருகோணமலை : உற்பத்திக் கைத்தொழில்

l வன்னி : உற்பத்திக் கைத்தொழில்

l கொழும்பு வான் மற்றும் சமுத்திர மத்திய நிலையம் விநியோக சேவை

l கொழும்பு நகர கேந்திரம் : வர்த்தக மற்றும் நிதி சேவை வசதிகள்

l கண்டி : தகவல், விவசாய தொழில்நுட்பம். வேறு தொழில்நுட்ப கைத்தொழில்

l காலி : தகவல் தொழில்நுட்பம், வேறு தொழில்நுட்ப கைத்தொழில்

l யாழ்ப்பாணம் : தகவல், விவசாய தொழில்நுட்பம் வேறு தொழில்நுட்பக் கைத்தொழில்

l கிளிநொச்சி : உற்பத்திக் கைத்தொழில்

மாணிக்கம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதிக்கான இலங்கை மத்திய நிலையமொன்றையும் நிறுவவுள்ளோம்.

சுற்றுலா அபிவிருத்தி பாரிய வலயம்

l பெந்தோட்டையிலிருந்து மிரிஸ்ஸவரை தெற்கு சுற்றுலா வலயம் (தெத்துவ உட்பட)

l கலாசார முக்கோண சுற்றுலா வலயம் (கண்டி உட்பட)

கைகளை வீசி பணத்தை செலவிடக்கூடிய வசதிபடைத்த உல்லாசப் பயணிகளை குறைந்தது 7 நாட்களுக்காவது இந்த வலயங்களுக்குள் வந்து தங்கிச் செல்லக்கூடிய விதத்தில் உல்லாசப் பயணிகளை கவரக்கூடிய உயர்ந்த வசதிகளையும். சேவைகளையும் பெற்றுக்கொள்ளும் விதத்தில் இந்த வலயங்களை அபிவிருத்தி செய்வோம்.

l இயற்கை வளம், வனப்பகுதி, ஆறு, குளங்கள், வன விலங்குகள், வன வளம் உள்ளிட்ட வனவளங்களை உல் லாசப் பயணிகளை கவரக்கூடிய விதத் திலும் இலங்கையின் கலாசார மரபுரிமைகள் ஒழுக்க விழுமியங்களுக்கமையவும் அமைத்து ஊக்குவிக்கப்படும்.

-தினகரன்

Advertisements

Posted on 26/07/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s