ஜம்மியத்துல் உலமா செயலாளர் முபாரக் மௌலவியின் கையொப்பத்தில் ஒரு அவசர அறிவிப்புக் கடிதம்!

03a8c-acju

அஷ்ஷைஹு முபாரக் மதனி,

செயலாளர்,

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா

கொழும்பு.

2௦15/௦6/29

 

“ அன்பிற்குரிய முஸ்லிம்

சகோதரர்களே, பெரியார்களே !

அஸ்ஸலாமு அலைக்கும்

வரஹ்மதுல்லாஹி வாபரகாதுஹு

 

இன்று நாம் இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதொரு தேர்தலை முன்னோக்கி இருக்கின்றோம் என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள் .

கடந்த காலங்களில் நாம் சரியானவர்களை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பாததன் காரணமாக பட்ட கஷ்ட துன்பங்களை நீங்கள் அறிவீர்கள். அதேபோல் பாராளுமன்றம் அனுப்பியவர்களை கட்டுப்படுத்தி அவர்களை மார்க்க ரீதியில் வழிநடத்த முன்வராத காரணத்தால் எமது சமூகம் முகம்கொடுத்த சவால்களையும் பிரச்சினைகளையும் நீங்கள் அனுபவித்துள்ளீர்கள்.

முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் மீது தாக்குதல் தொடுத்தார்கள்.

பன்றியின் உருவத்தில் அல்லாஹ்வின் பெயர் எழுதி வீதி உலா வந்தார்கள்

முஸ்லிம்கள் ஹலாலான உணவை உண்ண அனுமதி மறுத்தார்கள்.

முஸ்லிம் வியாபார நிலையங்களை தீயிட்டு கொளுத்தினார்கள் ,

முஸ்லிம் பெண்களின் கண்ணியமான பர்தாவை எதிர்த்தார்கள்.

கிரீஸ் பேய் என்ற போர்வையில் முஸ்லிம் பெண்களின் மார்பில் கீறி அச்சுறுத்தினார்கள்.

பள்ளிவாயல்களுக்குள் பன்றியின் தலையை வெட்டி வீசி எமது புனிதமான வணக்கஸ்தலங்களை அசிங்கப்படுத்தினார்கள் .

கடந்த ரமளானில் பெண்களை வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள், முஸ்லிம் பெண்களோ ஆண்களோ இஸ்லாமிய ஆடை அடையாளங்களுடன் கூட்டம் கூட்டமாக வீதிகளில் உலாவர வேண்டாம் என்று அறிக்கை விடுமளவுக்கு நாங்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப் பட்டிருந்தோம்.

கடந்த ரமளானில் மூடப்பட்ட கொழும்பு கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் இந்த ரமளானிலும் மூடப்பட்டே உள்ளது.

இவை போன்ற இன்னும் எத்தனையோ நிகழ்வுகள் கடந்த ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது.

இந்த அநியாயங்கள் நடைபெறும்போது நாம் அல்லாஹ்விடம் உதவித்தேடி குனூத் நாசிலாவை ஓத முற்பட்ட போது, அதைகூட தடுத்து அச்சுறுத்தியது கடந்த அரசாங்கம்.

அதேவேளை முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அநியாயங்கள் நடைபெறும் போது, அமைச்சர்கள் அரை அமைச்சர்கள் உட்பட இருபத்திட்கும் மேற்பட்ட கலிமாச் சொன்ன முஸ்லிம் பிரதி நிதிகள் அவ்வரசாங்கத்தின் பங்காளிகலாக இருந்தார்கள். ஆனால் அவர்களில் சிலர் இவற்றை கண்டும் காணாதது போல் இருந்தார்கள், இன்னும் சிலர் தன்னாலான அளவு தனித்து போராடினார்கள். வேறு சிலரோ இவற்றுக்கு முஸ்லிம்கள் தான் காரணம், அரசாங்கம் அல்ல என்று அறிக்கை விட்டார்கள்.

ஆகவே எமது பலமான பிரதி நிதித்துவமே சமூகத்தின் பலஹீனத்திட்கு காரணமாகிப் போனது.

குறிப்பிட்ட இந்தக் காலத்தில் எமது ஜம்மியத்துல் உலமாவும் பல விமர்சனங்களுக்கு உள்ளானதை நாங்கள் அறியாமல் இல்லை.

ரிஸ்வி முப்திக்கு ஹலால் விடயம் மட்டுமா சமூதாய பிரச்சினை.?

இவ்வரசாங்கத்தின் முஸ்லிம்களுக்கெதிரான மற்ற பிரச்சினைகள், அநீதிகள் அவர் கண்ணுக்கு தென்படவில்லையா ?

குறைந்தது இவ்வநீதிகளுக்கு எதிராக ஒரு அறிக்கை கூடவாவிடமுடியாமல் உள்ளார்கள்.?

ஜிநீவாவிட்கு போய் இவ்வநியாயக்கார அரசாங்கத்திற்கு சார்பாக வக்காலத்து வாங்க முடியும் என்றால் ஏன் இப்போது இந்த அநியாயங்களை தட்டி கேட்க முடியாது.?

என்ற பல விமர்சன வினா அம்புகள் எம்மை நோக்கி பாய்ந்ததை நாம் அறியாமல் இல்லை.

குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வை பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் போது தான் அல்லாஹ் உங்களுக்கு அரியதோர் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தான். ஆம் அதுதான் கடந்த ஜனாதிபதி தேர்தல். மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் ஆட்சி செய்ய காலம் இருந்தும், ஒரு சாஸ்திரக் காரனின் மூலம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்ற சிந்தனையை அவ் அநியாயகார அரசனான மகிந்தவின் மனதில் ஏற்படுத்தி, தன் கையாலேயே தன தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்ள வைத்தான்.

வரலாற்றில், முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்த ஆட்சியாளர்களை அல்லாஹ் இவ்வாறு தன் கையாலேயே தன் தலையில் மண்ணை வாரிபோட்டுக் கொண்ட சந்தர்பங்களை நமக்கு படிப்பினையாக தந்துள்ளான்.

உங்களுக்கு தெரியும் தன் தலையில் செருப்பால் அடித்துக்கொண்டு அழிந்து போன நம்ரூதின் வரலாறு.

மௌலவி அவர்கள் இந்தக் கடிதத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை சற்று பார்க்கின்றேன். எல்லோருடைய முகத்திலும் சந்தோசம் கலந்த புன்சிரிப்பு, சிலர் வாயில் மாஷா அல்லாஹ் என்று முனுமுனுப்பு, இன்னும் சிலரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

மௌலவி தொடர்ந்தும் கடிதத்தை வாசிக்கின்றார்…….

நீங்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் பொறுமை காத்து அல்லாஹ்விடம் கையேந்தியதுடன் நின்றுவிடாமல், சந்தர்ப்பம் பார்த்து உங்கள் வாக்குகளை சரியாக பயன் படுத்தினீர்கள்.

அல்ஹம்துலில்லாஹ் இன்று அதன் பலனை நாம் அனுபவிக்கின்றோம்.

இந்த ரமளானில் நாம் தங்கு தடையின்றி எமது அமல் இபாதத்துக்களில் ஈடுபடுகின்றோம். எமது வியாபாரங்கள் இடையூறுகளின்றி நடைபெறுகின்றன. எமது பள்ளிவாயில்கள் தடையின்றி இயங்குகின்றன. எமது ஆண்கள் பெண்கள் இஸ்லாமிய ஆடை அணிகளுடன் சுதந்திரமாக வீதிகளில் பயணிக்கின்றார்கள்.

அன்பார்ந்த பெரியார்களே, சகோதரர்களே இப்போது நாம் விடயத்திற்கு வருவோம்.

நாம் இப்போது அனுபவிக்கும் மேற்சொன்ன உரிமைகள் சலுகைகள் நிரந்தரமாக எமக்கு கிடைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கடந்த அரசாங்கத்தினால் எமக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட பல விடயங்களுக்கு இன்னும் தீர்வு காணப் பட வேண்டியுள்ளது.

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம்

கிழக்கில் சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களின் 5௦௦ வீடுகள்

எமது முஸ்லிம் பாடசாளைகளின் வளப்பற்றாக்குறைகள் ஆசிரிய நியமனங்கள் ,  எமது இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்பு போன்ற இன்னும் பல விடயங்களில் நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் இன்னும் நிறையவே உண்டு. இவை எல்லாவற்றையும் விட இந் நாட்டில் மீண்டும் இனவாதம் மேலோங்கி, ஆட்சியை கைப்பற்றி எமக்கெதிராக செயல் பட துடிக்கும் இனவாத அரசியல் சக்திகளை நிரந்தரமாக தோல்வியுறச் செய்ய வேண்டியுள்ளது.

அதேபோல் எதிர்காலத்தில் எமக்கு எதிராக பிரச்சினைகள் சவால்கள் வரும்போது அதை உரிய முறையில் உரிய இடத்தில் தட்டிகேட்டு எமது சமூகம் தலை நிமிர்ந்து வாழ வழிசெய்ய வேண்டும்.

அப்படியானால் நாம் நடைபெறப் போகும் தேர்தலை மிக புத்தி சாதுரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.

நடைபெறப்போகும் பாரளுமன்ற தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெகுவாக பாதிக்கப் படவுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றார்கள், அதேவேளை இனிமேல் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தி பாராளுமன்றம் போகும் எமது பிரதிநிதிகள் கல்வி கற்றவர்களாகவும், மார்க்க அறிவு, இறையச்சம் கொண்ட சமுதாய பற்றுள்ளவர்களாகவும் இருக்க வேண்டிய தேவை தற்போது வெகுவாக உணரப்பட்டுள்ளது.

ஆகவே எந்தக் கட்சியானாலும் வேட்பாளர்களை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவாகிய நாமே தெரிவு செய்வோம் என்ற தீர்மானத்தை நாம் எடுத்துள்ளோம்.

இதை வாசிக்கும் போது ஜமாத்தார்கள் எல்லோரும் உணர்ச்சி பொங்க அல்லாஹு அக்பர் என்று ஒருமித்து குரலெழுப்பினார்கள்.

மௌலவி தொடர்ந்தும் வாசிக்கின்றார், “ஆகவே சகோதரர்களே

பெரிஎமது இந்த முயற்சிக்கு இயக்க கட்சி வேறுபாடுகளை மறந்து ஒத்துழைப்பு தருமாறு ஜம்மியா சார்பாக வேண்டிக்கொள்கின்றோம்

நன்றி வஸ்ஸலாம்

இவண்

அஷ்ஷைஹு முபாரக் மதனி,

செயலாளர்,

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா.

Advertisements

Posted on 06/07/2015, in உள்நாட்டு செய்திகள் and tagged . Bookmark the permalink. 2 பின்னூட்டங்கள்.

  1. Super idea moulavi, but when you select members from particular electrate, discuss and get the opion from public (particularly who would oppose the proposed or already elected one) but not from the people who are behind the politicians who are already in the field.

  2. இது எந்தளவு உண்மையான விடயம் என்பது சந்தேகமாகவே உள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s