கடந்த புனித ரமழானில் நாம் ஏந்திய கரங்கள்,சிந்திய கண்ணீர்கள் வீண் போகவில்லை!

dr-inamullah

 

 

 

 

 

கடந்த புனித ரமழானில் நாம் ஏந்திய கரங்கள்,சிந்திய கண்ணீர்கள் வீண் போகவில்லை, எங்களால்,எண்களால் செய்ய முடியாவற்றை, எண்ணியும் நாம் பார்க்காதவற்றை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் நாம் அடைந்து கொண்டோம்.

இந்த ரமழானில் எமது துஆக்களும் ஏக்கங்களும் கண்ணீர்களும் நிச்சயமாக எமக்கும் இந்த தேசத்திற்கும் நல்லதனையே கொண்டு வந்து சேர்க்கும் என்ற நம்பிக்கை எம்மிடம் ஆழாமாக இருக்கின்றது.

கணக்கை யார் வேண்டுமானாலும் போடட்டும் விடையை எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லோருக்கும் சாதகமானதாகவே போடுவான், சிலவற்றை நாங்கள் வெறுக்கலாம் அதில் நிறையவே நன்மைகள் இருக்கும், சிலவற்றை நாங்கள் விரும்பலாம் அவற்றில் நிறையவே தீங்குகள் இருக்கலாம்.

அன்று எங்களிடமிருந்த எச்ச சொச்ச அரசியல் அதிகாரங்களும் பொய்யாகிக் போயின, காலம் சற்று கடக்குமுன்னர் அத்துணை நிறைவேற்று அதிகாரங்களும், ஆளணியும், படையணியும், அரியாசனமும் பொய்யாகிப் போயினவே..!

தர்பார் நாட்டில் நடக்க வேண்டும், அது காட்டில் நடந்தால் ஆபத்து அதிகமாகிவிடும், சூடு கண்ட பூணைகள் மீண்டும் அடுப்பங்கரை நாட மாட்டா என்று முன்னோரும் சொல்லிவைத்துள்ளார்கள்.

கசப்பானதும் இனிப்பானதுமான கடந்தகாலங்கள் எல்லாத் தரப்பினருடனும் எமக்கு இருந்திருக்கின்றன, அவர்கள் நம்மிடம் கற்றுக் கொண்டவையும், நாம் அவர்களிடம் கற்றுக் கொண்டவையும் அதிகமதிகம் இருக்கின்றன.

போராட்டமாய் கிளர்ந்தெழுந்து, சூதட்டாமாய் பரிணாமம் கண்டு, பின்னர் பிச்சை வேண்டாம் நாயைப் பிடியென சரணாகதியடைந்த நம் தனித்துவத் தாரகைகள் கொண்டுவந்த சாதனைகளை விட சோதனைகளே நம்மை பெரிதும் நட்டாற்றில் தவிக்க விட்டன – அங்கும் நிறையவே எமக்கு கசப்பான பாடங்கள் இருக்கின்றன.

களநிலை யதார்த்தங்களை மீறி அற்புதங்கள் நிகழ்த்த வேண்டும் என தலைவர்களிடம் நாம் முழுமையான விசுவாசம் கொள்ள முடியாது, அவர்களிடம் திட்டங்கள் பல இருக்கலாம்,திட்டங்கள் தீட்டுவதில் மகா வல்லவன் கட்டளைப்படியே அவர்கள் இதயத் துடிப்புக்கள் இயங்குகின்றன.

இயன்றவற்றை எல்லாம் இயன்றவரை நல்லவர்களாய் நாம் செய்த பின்னும் இயலாமைகளை உணர்கின்ற பொழுதே நாம் முழுமையாக எல்லாம் வல்ல, இயலாமைகள் எதுவுமற்ற ஏக இறைவனிடம் இன்னுமுள்ளவற்றை விட்டு விடுகின்றோம்.

சமயோசிதமாக, சாமர்த்தியமாக, சகிப்புத் தன்மையுடன், களநிலவரங்களை கையாண்டு அடுத்த சமூகங்களுடன் அந்நியோன்யமாக கைகோர்த்து எதிர் வரும் பொதுத் தேர்தல் களத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும், இன்ஷா அல்லாஹ்.

-Inamullah Masuhudin

Advertisements

Posted on 06/07/2015, in உள்நாட்டு செய்திகள் and tagged . Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s