களுத்துறையில் களமிறங்கவுள்ள முன்னாள் அமைச்சர் இம்தியாஸ்?

wpid-wp-1420572403782.jpeg

 

 

 

 

எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அவரை நெருங்கிய வட்டாரங்கள் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தின் கோரிக்கைக்கு இணங்கவே அவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

ஒரு தடவை மாத்திரமே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருப்பேன் என தான் வழங்கிய உறுதிமொழிக்கிணங்க, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ், கடந்த 2004ஆம் நேரடி அரசியலிலிருந்து ஓய்வுபெற்றார்.

எனினும் பல்வேறு தரப்பினர் அரசியலில் நுழையுமாறு அவரிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவமும் நேரடி அரசியலில் நுழையுமாறு முன்னாள் அமைச்சர் இம்தியாஸை அழைத்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

எவ்வாறாயினும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் இது மேற்கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக களுத்துறை மாவட்டத்தில் தன்னை போட்டியிடுமாறு கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தன்னிடம் கோரிக்கை விடுத்தார். அத்துடன் தான் போட்டியிட்டால் நடுத்த மக்களின் வாக்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கும் எனவும் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.

எனினும் பேருவளை தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் இணை அமைப்பாளர்களான ஜயந்த அபேயகுணவர்தன மற்றும் இப்திகார் ஜெமீல் ஆகியோர் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என நான் கூறியுள்ளேன். அவர்கள் இருவரினதும் பூரண சம்மதமின்றி நான் ஒரு போதும் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என தெரிவித்துள்ளேன்.

இந்த விடயம் எமது கட்சித் தலைவருக்கு மிக இலகுவானது என மலிக் சமரவிக்ரம பதலளித்ததுடன் நீங்கள் போட்டியிடுவதற்கு இவர்கள் இருவரினதும் ஆதரவினை கட்சித் தலைவர் பெற்றுத் தருவார் என அவர் பதலளித்துள்ளார். இதற்கு மேலதிகமாக சிங்கள மற்றும் முஸ்லிம் என்று இருவர் பேருவளை தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இன, மத வேறுபாடின்றி ஒருவரே அமைப்பாளராக இருக்க வேண்டும். அதற்கமை தன்னை பேருவளை தொகுதியின் பிரதான அமைப்பாளராக நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளேன். எனினும் இதுவரை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை” என்றார்.

Advertisements

Posted on 03/07/2015, in உள்நாட்டு செய்திகள் and tagged . Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s