கண்டி முஸ்லிம்கள் சார்பாக உவைஸ் ஹஜியாரை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆதரிப்பதென கண்டி மாவட்ட முஸ்லிம் வர்த்தகர் சம்மேளனம் ஏகமனதாய் தீர்மானம் !

 

கண்டி முஸ்லிம்கள் சார்பாக உவைஸ் ஹஜியாரை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆதரிப்பதென கண்டி மாவட்ட முஸ்லிம் வர்த்தகர் சம்மேளனம் ஏகமனதாய் தீர்மானம் நிறைவேற்றிவுள்ளது 

அண்மையில் கண்டி குஈன்ச் கொட்டலில் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் எஸ் எச் எம் பாரூக் தலைமைல் கூடப்பட்ட சம்மேளனத்தின் விசேட நிர்வாக குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக சம்மேளனத்தின் பொது செயலாளர் மொகமட் சாகுல் ஹமீது விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த அறிக்கையில் மேலும் கூறுகையில்
எதிவரும் பொதுத்தேர்தல் தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டத்தின் கீழ் நடைபெறும் இறுதியான போதுத்தேர்தலாகும் அடுத்து வரும் தேர்தல்கள் அரசியல் அமைப்பின் 20வது சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டு நடைபெறவுள்ளது என்பதாலும் அதனால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறித்த சிக்கல் நிலைகள் சம்பந்தமாக சந்தேகம் நிலவுவதாலும் நமது உரிமைகளை நாம் இனிவரும் காலங்களில் மிகவும் நிதானமாகும் ஒற்றுமையுடனும் செயல்பட்டு தீர்மானிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்
முஸ்லிம் தலைமைத்துவ கைரிளிப்பிலும் அரசியல் கட்சி நிறங்கள் என்று முஸ்லிம் சமூகம் கூறுபோடப்பட்ட காலம் மாறவேண்டும்
முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது என்பதையும் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் செயல்பட்டு தமது பிரதிநிதியை பெற்றுக்கொள்ள வேண்டிவுள்ளது
நடந்து முடிந்த மத்திய மாகான சபை தேர்தல் கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு சரியான பாடம் புகட்டிவுள்ளது என்பதையும் இங்கு நினைவுட்ட கடமைப்பட்டுள்ளேன்
முஸ்லிம்களுக்கு எதிரான பொது பல சேனாவின் காட்டு தர்பார்களுக்கு எதிராக எவரும் குரல் கொடுக்க வில்லை என்ற ஆதங்கத்துடன் முஸ்லிம்கள் இருந்தபோது  அந்த சந்தர்பத்தில் பொது பல செனவுக்கு எதிராக குரல் கொடுக்க முன் வந்த ஒரு தனி நபர் குறித்து முஸ்லிம் மக்கள் கவரப்பட்டும் அதன் காரணமாக கண்டி மாவட்டத்தில் மத்திய மாகான சபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் முஸ்லிம்களின் கவர்ச்சி வாக்கினால் வெற்றியும் கிட்டியது
ஆனால் இதுவரை அந்த வெற்றியின் பங்காளிகளான கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு கிடைத்தது எதுவுமில்லை
இதுவரை கண்டி முஸ்லிம்களின் கல்வி அபிவிருத்தி வர்த்தகம் குறித்து எந்தவிதமான அபிவிருத்தியும் சொல்லிக்காட்டும் அளவில் நடை பெறவில்லை
எனவே எதிவரும் தேர்தலில் கண்டி முஸ்லிம்கள் வேட்பாளர்களை இறக்குமதி செய்வதை விட்டும் சொந்த நலன் கருதி சமூகத்தை காட்டி கொடுக்கும் நபர்களிடமிருந்தும் கண்டி முஸ்லிம்களை பாதுகாக்க அனைவரும் முன்வரவேண்டும்
இந்த விடயம் குறித்து விரைவில் செய்தியாளர் மாநாடு கூட்டப்பட்டு முஸ்லிம் மக்களை எமது சம்மேளனம் தெளிவுபடுத்தும் என்றார்
Advertisements

Posted on 23/06/2015, in உள்நாட்டு செய்திகள் and tagged . Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s