வர்த்­த­மானி அறி­வித்­தலை உடன் வாபஸ் பெற வேண்­டும்!

Dinesh-Gunawardana
சிறிய கட்­சிகள் மற்றும் சிறு­பான்­மை­ கட்­சி­க­ளினால் நேற்று கொழும்பு பொர­ளையில் அமைந்­துள்ள என்.எம்.பெரே­ரா கலையரங்­கில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த விசேட ஊடகவியலாளர் சந்­திப்­பி­லேயே  இவ்வாறு கூட்­டாக வலி­யு­றுத்­தப் ­பட்­டது.

இந்­த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டில் லங்கா சம­ச­மா­ஜக்­கட்­சியின் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதா­ரண, ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு தேவ நாணக்­கார, இலங்கை தொழி­லாலர் கங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முத்துசிவ­லிங்கம்,சோச­லிச மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் ராஜா கொல்­லுரே மற்றும் ஈ.பி.டி.பி செய­லா­ளரும் எம்.பி­யு­மான டக்ளஸ் தேவா­னந்த ஜன­நா­யக மக்கள் காங்­கி­ரஸின் ஸ்தா­பக தலை­வரும் எம்.பி.யு­மான பிரபா கணேசன், சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு தேவ­நா­ண­யக்­கார,

Dinesh-Gunawardanaபுதிய தேர்­தல் முறை உள்­ள­டங்­கிய 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்­ச­ரவை அங்­கி­காரம் வழங்கியுள்ள நிலையில் குறித்த திருத்­தத்தில் சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்­சி­களை பாதிக்கும் சந்தர்ப்பங்கள் அதி­க­ளவு காணப்­ப­டு­கி­றது.

இவ்­வா­றான நிலையில் குறித்த திருத்­த­மா­னது வர்த்தமானியில் பிர­சு­ரிக்­கப்­பட்டு நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்ளும் முன்னர் சிறி­ய­கட்­சிகள் மற்றும் சிறு­பான்மை கட்­சி­களின் யோச­னை­களை அர­சா­னது கவனத்தில் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மா­னது.

ஜக்­கிய தேசி­யக்­கட்­சியின் செயற்­பா­டு­க­ளா­னது சர்­வ­தேச நாடுகளின் தேவைக்கு ஏற்­ற­வாறே எல்லா சந்தர்ப்­பங்­க­ளிலும் அமைந்­தி­ருக்­கின்­றது. அமெ­ரிக்­கா­வா­னது எப்­பொ­ழு­துமே தமக்கு ஏற்­ற­வ­கையில் ஆட்சியை கொண்டு நடத்தும் அரசை பிற­நா­டு­களிலி­ருந்து எதிர்ப்­பார்க்கும். அந்­த­வ­கை­யி­லான சுழற்சி செயற்­பா­டு­க­ளையே ஏனைய நாடு­க­ளுடன் முன்­னெ­டுக்கும் அந்த வகை­யி­லேயே இன்று எமது நாட்­டிலும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஜக்­கிய தேசி­யக்­கட்சி அர­சாங்­கத்தை அமெரிக்கா இயக்கு­கின்­றது.

இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு இந்த அரசு துணை­போ­வ­தனால் இன்று எமது நாடு பொரு­ளா­தார ரீதியாக பல்­வேறு வகையில் பின்­ன­டைவை எதிர்­நோக்கி வரு­கின்­றது. இவற்­றுக்கு முற்­றுப்­புள்ளி வைக்கவும் நாட்டில் இன­வாத செயற்­பா­டு­களை இல்­லா­தொ­ழிக்­க­வுமே சிறி­ய­கட்­சிகள் உட்­பட சிறுபான்மை கட்­சிகள் இன்று ஒன்­றி­ணைந்து செயற்­பட முன்­வந்­துள்­ளன. எதிர்­வரும் பொது தேர்­த­லில் சக்­தி­மிக்­கவரா­ன முன்னாள் ஜனா­தி­பதி மற்றும் தற்­போ­தய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலைமை­யி­லான ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின் சக்­தி­மிக்­க­தான அர­சாங்­கத்தை உரு­வாக்­குவோம் என்றார்.

லங்­கா சம­ச­மா­ஜக்­கட்­சியின் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திஸ்ஸ விதா­ரண இதன் போது கருத்து தெரிவிக்­கையில்,

புதிய தேர்தல் முறை உள்­ள­டங்­கிய 20 ஆவது திருத்­தச்­சட்­டத்­திற்கு அமைச்­ச­ரவை அங்­கி­காரம் வழங்கியுள்ள நிலையில் இவை ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தேவைக்கு ஏற்­ற­வாறும் ஒரு சிலரின் சுயநலனுக்­கா­க­வுமே சிறி­யக்­கட்­சிகள் மற்றும் சிறு­பான்மை கட்­சி­களின் பாதிப்பு தொடர்பில் அக்­கறை செலுத்­தாமல் அமைச்­ச­ரவை அங்­கி­காரம் பெறப்­பட்­டுள்­ளது.

20 ஆவது திருத்­தச்­சட்­டத்தில் சிறிய கட்­சிகள் மற்றும் சிறு­பான்மை கட்­சி­களின் யோச­னைகள் மிகவும் அவ­சி­ய­மா­னது அந்­த­வ­கையில் முத­லா­வது எமது யோச­னை­யா­னது ஒவ்­வரு வாக்­கா­ளர்­க­ளுக்கும் இரட்டை வாக்கு சீட்­டுக்கள் வழங்­கப்­பட வேண்டும். இதன் மூலம் ஒரு வாக்­காளர் ஒரு வாக்கு சீட்­டினை பயன்­ப­டுத்தி அந்த தொகு­தியில் போட்­டி­யிடும் தனக்கு விருப்­ப­மான வேட்­பா­ள­ருக்­கு தமது வாக்­கினை செலுத்த முடியும். இராண்­டா­வது வாக்கு சீட்­டைப்­ப­யன்­ப­டுத்தி வாக்­காளர் ஒருவர் தனக்கு விருப்­ப­மான கட்­சிக்கு தனது வாக்­கினை அளிக்கும் வகையில் அமைய வேண்டும்.

இந்த முறையே இன்று வளர்ந்து வரும் நாடு­க­ளான ஜேர்மனி, நியூஸி­லாந்து போன்­ற­வற்றில் ஜன­நா­யக ரீதியில் முன்­னெ­டுக்­கப்­படும் தோ்தல்­களின் போது கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது. இந்த முறையை பின்பற்றும் போது பாரா­ளு­மன்­றத்­திற்கு அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் பிர­தி­நி­தி­து­வப்­ப­டுத்தும் வகையில் தேசிய ரீதி­யா­கவும் தொகு­தி­வாரி அடிப்ப­டை­யிலும் உறுப்­பி­னர்­களை தேர்தெடுக்­கப்­ப­டுவர்.

இன்று எமது நாட்டில் மாவட்ட ரீதி­யாக சன­தொகை இரண்டு மடங்­காக அதி­க­ரித்­துள்­ள­தோடு மக்­களின் இடப்­பெ­யர்­வு­களும் அதி­க­ரித்த வண்ணம் உள்­ளது. அந்த வகையில் அனைத்து மக்­களை பிரதிநிதிப்படுத்தும் வகையில் பாரா­ளு­மன்­றத்­திற்கு பிர­தி­நி­தி­களை உள்­வாங்­கு­வது மிகவும் அவ­சியம்.

ஒரு நாட்டில் ஜன­நா­யக ரீதியில் அனைத்து மக்­க­ளுக்கும் ஏற்­ற­வா­றான சட்ட மூலங்­களும் திருத்தச்சட்டங்­களும் நடை­மு­றைப்­ப­டுத்த தவறும் பட்­சத்­தி­லேயே நாட்டில் இன­வா­தி­க­ளி­டையே இனவாத செயற்­பா­டுகள் மற்றும் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் தலை­தூக்­கு­கின்­றது. எனவே அவ்­வா­றான நிலை­மை­க­ளுக்கு மீண்டும் எப்­போதும் நாம் இட­ம­ளிக்க கூடாது.

20ஆவது திருத்­தச்­சட்டம் என்­பது எமது நாட்­டிற்கு மிகவும் தேவை­யா­ன­தொரு சட்ட திருத்தம் இதனை மாற்­றி­ய­மைக்க மூன்றில் இரண்டு பெரு­பான்மை வேண்டும். அந்­த­வ­கையில் இந்த சந்­தர்ப்­பத்தை நாம் பயன்­ப­டுத்தி கொண்டு அனைத்து மக்­களின் பிர­தி­நி­தி­து­வங்­க­ளுக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­டா­த­வாறு தேர்தல் முறையில் மாற்றம் ஒன்றை கொண்டு வர முயற்­சிக்க வேண்டும். இது தொடர்பில் தொடர்ச்சியாக ஜனா­தி­பதி மற்றும் தேர்தல்கள் ஆணை­யா­ள­ருடன் பேச்­சு­வார்த்­தை­களை மேற்கொள்ளவுள்ளோம்.

ஈழ­மக்கள் ஜன­நா­யக்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்ளஸ் தேவா­னந்தா இதன் போது கருத்து தொிவிக்­கையில்,

புதிய தேர்­தல் முறையின் பிர­காரம் விருப்பு வாக்­கு­முறை அகற்­றப்­பட்டு தொகு­தி­வாக்கு முறை உள்­வாங்­கப்­ப­டு­வ­தனை நாம் வர­வேற்­கின்ற அதே­வேளை சிறி­யக்­கட்­சிகள் மற்றும் சிறு­பான்மை கட்­சி­களை இந்த திருத்­த­மா­னது எவ்­வா­றான சந்­தர்ப்­பத்­திலும் பாதிக்க கூடாது என்­பதில் நாம் உறு­தி­யா­க­வுள்ளோம்.

வடக்குஇ கிழக்கில் யுத்­தக்­கா­லப்­ப­தியில் பாதிக்­கப்­பட்ட தொகு­தி­களின் மீளாய்­வா­னது யுத்­தப்­பா­திப்­பு­க­ளுக்கு ஈடு­செய்ய கூடிய அளவு அமைய வேண்டும். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது வழ­மைப்­ப­போல எதிர்­வரும் தேர்தலை இலக்­கு­வைத்து செயற்­ப­டு­கின்­ற­து. இந்த அர­சா­னது தமிழ் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற தவ­றி­விட்­டது. கடந்­தக்­கால ஆட்­சியில் மக்­க­ளுக்கு நாம் பல்­வேறு செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்தோம் முன்­னைய அரசில் ஏதேனும் தவ­றுகள் நடந்­தி­ருக்­கும்­பட்­சத்தில் அத­னையும் நாம் எதிர்­கா­லத்தில் திருத்­து­கொள்ள தயா­ரா­கவே உள்ளோம். தொடர்ந்தும் இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ண­கத்தை ஏற்­ப­டுத்த செயற்­பட தயா­ரா­கவே உள்ளோம் என்றார்.

இலங்கை தொழி­லாளர் கங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முத்­து­சி­வ­லிங்கம் இதன் போது கருத்து தெரிவிக்­கையில்,

புதிய தேர்தல் முறை­மாற்­ற­மா­னது நடை­மு­றைக்கு வரும்­பட்­சத்தில் பெரும்­பாலும் சிறு­பான்மை மற்றும் சிறு­கட்­சி­களை விட பெருந்­தோட்ட மக்­களின் சார்பில் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வு செய்­யப்­படும் பிர­தி­நி­தி­து­வங்­க­ளையே அதி­க­ளவு பாதிக்­கின்­றது.

புதிய தேர்­தல் முறை­மாற்றம் கார­ண­மாக பெருந்­தோட்ட மக்­க­ளுக்­களின் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­து­வங்கள் பாதிக்­கப்­ப­டு­வது தொடர்பில் நாம் தொடர்ச்­சி­யாக ஜனா­தி­பதிஇ பிர­தமர் மற்றும் தோ்தல்கள் ஆணை­யா­ளர்­க­ளுக்கும் எமது யோச­னையை முன்­வைத்­துள்ளோம். ஆனால் இது­வரை இது தொடர்பில் எந்த கவ­னமும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் 20 ஆவது திருத்தம் பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்­டு­வ­ரும்­பட்­சத்தில் அதற்கு எவ்­வா­றான சந்­தர்ப்­பத்­திலும் ஆத­ரவு வழங்க போவது இல்லை என்றார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லா இதன் போது கருத்து தெரிவிக்­கையில்,

நாட­ளா­விய ரீதியில் வாழும் முஸ்லிம் மக்­களை பிர­தி­நி­தி­து­வப்­ப­டுத்தும் வகையில் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் 20 பேர் உள்­வாங்­கப்­ப­டு­கின்­றனர். இவ்­வா­றான நிலையில் புதிய தேர்தல் முறை மாற்றம் கார­ண­மாக இதில் முஸ்லிம் மக்கள் பொிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த திருத்தத்திற்கு பெரும்பாலான முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பினையே தெரிவிக்கின்றனர். ஜக்கிய தேசியக்கட்சி சுயநலனின் அடிபடையிலேயே செயற்படுகிறது.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெரும்பான்மை பலம் உடைய ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு பாராளுமன்றத்தை கலைக்கும் காலம் வரை ஆட்சியை கொண்டு நடத்த இடமளிக்க வேண்டும் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் இதன் போது கருத்து தெரிவிக்கையில்,

20 ஆவது திருத்தம் எந்த வடிவில் தயாரிக்கப் பட்டுள்ளது என்­பது தொடர்பில் கூட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு தெரியாது அந்த வகையிலேயே ஜக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கம் ஆட்சி செய்து வருகின்றது.

இந்த ஆட்சியின் செயற்பாடுகள் மக்களுக்கு ஏற்தொன்றாக கருத முடியாது எனவே ஜக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க எதிர்வரும் பொது தேர்தலில் சிறியகட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தற்போதய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சக்திமிக்கதான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆட்சி ஒன்றை உருவாக்க செயற்பட வேண்டும் என்றார்.-vk

இணைப்பு 2

வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்பட்­டுள்ள 20ஆவது திருத்தச் சட்­டத்தை அர­சாங்கம் உட­ன­டி­யாகவாபஸ் பெற வேண்டும் என சிறு­பான்மை மற்றும் சிறி­ய­ கட்­சிகள் ஏக­ம­ன­தாக தீர்­மா­னித்­துள்­ளன.

fiமேலும் ஜன­நா­யக விரோ­த ­மான இந்த திருத்­தத்தை அர­சாங் கம் வாபஸ்­பெறாவிட்டால் நாடு­த­ழு­விய ரீதியில் போரா­டு­வ­தா­கவும் தீர்­மா­னித்­துள்­ளன. வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­களின் விசேட கலந்­து­ரை­யாடல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸ­லாமில் நேற்று நடை­பெற்­றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நகர அபி­வி­ருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்­ச­ரு­மான ரவுப் ஹக்கீம் தலை­மையில் நடை­பெற்ற இந்த கலந்­து­ரை­யாடல் முஸ்லிம் காங்­கிரஸ், மக்கள் விடு­தலை முன்­னணி, தேசிய ஐக்­கிய முன்­னணி, ஈ.பி.டி.பி, நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி, நவ­சி­ஹல உறு­மய, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு கூட்­டணி, இலங்கை சோச­லிச கட்சி, புதிய தொழி­லாளர் முன்­னணி, ஜன­நாய தேசிய மக்கள் காங்­கிரஸ், ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆர். யோக­ராஜன் மற்றும் பல கட்­சிகள் கலந்து கொண்­டி­ருந்­தன.

தேர்தல் முறைமை மாற்றம் குறித்து ஆராய்­வ­தற்­காக ஏற்­க­னவே இந்த கட்­சிகள் கொழும்பில் பல தடவைகள் கூடி தங்­க­ளது தீர்­மா­னங்­களை ஜனா­தி­பதி மற்றும் அர­சாங்­கத்­திடம் தெரி­வித்­தி­ருந்­தன.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­ப­டுள்ள 20 ஆவது திருத்தச் சட்­ட­மூலம் சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­களின் ஜன­நா­யக உரி­மையை மீறு­வ­தா­கவே உள்­ளது என தெரி­வித்தே இந்த சந்­திப்பு கலந்­து­ரை­யாடல் நேற்று நடை­பெற்­றது.

இந்தக் கலந்­து­ரை­யா­டலின் இறு­தியில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்­களை அமைச்சர் ரவுர் ஹக்கீம் தெரிவிக்கையில்,

20 ஆவது திருத்தச் சட்­டத்தை நாங்கள் எல்­லோரும் ஏக­ம­ன­தாக எதிர்ப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம் , அத்துடன் 20 ஆவது திருத்தச் சட்­ட­மூலம் புரண ஒத்­தி­சைவு இல்­லாமல் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரித்­ததன் மூலம் எமது அடிப்­படை ஜன­நா­யக உரி­மையை பறித்­தி­ருப்­பதை நாங்கள் கண்­டிக்­கின்றோம். அர­சாங்கம் இதனை உட­ன­டி­யாக வாபஸ் பெற வேண்டும்.

இரட்டை வாக்குச் சீட்டு முறை உட்­பட எமது பல வித­மான திருத்­தங்கள் முழு­மை­யாக நிராகரிக்கப்பட்டுள்­ளன. எந்த அடிப்­ப­டையும் இல்­லாத ஒரு­த­லைப்­பட்­ச­மாக ஒரு சில கட்­சி­களை பாதுகாக்கும் வகையில் கொண்­டு­வ­ரக்­கூ­டிய தோ்தல் திருத்­த­மா­கவே இதை நாங்கள் பார்க்­கின்றோம்.

மேலும் இது தொடர்­பாக எமது தீர்­மானம் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால மற்றும் பிர­தமர் ரணில் விக்கி­ர­சிங்­க­வுடன் கலந்­து­ரை­யா­டி­யதன் பின்னர் 20 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு எதி­ரான போராட்டத்தை நாட்டு மக்கள் முன் எடுத்துச் செல்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம்.

தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ­க­ணேசன் இங்கு கருத்து தெரி­விக்­கையில்,

20 ஆவது திருத்தம் தொடர்­பாக சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சிகள் பல திருத்­தங்­களை முன்­வைத்­தன. என்­றாலும் அர­சாங்கம் எமது எந்­த­வொரு கருத்­தையும் உள்­வாங்­காமல் தான்­தோன்­றித்­த­ன­மாக அவசரமாக இதனை வர்த்­த­மா­னியில் பிர­சு­ரித்­ததை நாங்கள் கண்­டிக்­கின்றோம். இது சகல சிறிய கட்சிகளையும் அழித்­து­விட்டு் பெரிய இரண்டு கட்­சிகள் மாத்­திரம் நாட்டை ஆள வேண்டும் என்­ப­தற்­காக கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாகும். எனவே அர­சாங்கம் இதனை உட­ன­டி­யாக வாபஸ் பெற வேண்டும் இல்லாவிட்டால் தேசி­ய­ரீ­தியில் சகல இன மக்­க­ளையும் ஒன்று சோ்த்து மாபெரும் ஆர்ப்­பாட்­டத்தை நாடுபு­ரா­கவும் கொண்டு செல்வோம்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­கு­மார திஸா­நா­யக்க கூறு­கையில்,

தற்­போது முன்­வைக்­கப்­பட்­டுள்ள 20 ஆவது திருத்தச் சட்­ட­மூலம் எமது நாட்டின் ஜன­நா­ய­கத்­தையோ நாட்டு மக்ளின் உரி­மை­க­ளையோ மற்றும் ோ நாட்டு மக்ளின் உரிமைகளையோ மற்றும் அரசியல் கட்சிகளின் உரிமைகளையோ பாதுகாப்பதற்கு போதுமானதாக இல்லை. வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் எந்த வகையிலும் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தமாக அமையப்போவதில்லை. சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஆழமாக ஆராய்ந்து இதனை திருத்தி அமைக்க வேண்டும்.

எனவே அரசாங்கம் இந்த சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றார். தேசி­ய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத்­சாலி மற்றும் சிறி­­துங்க ஜய­சூ­ரிய ஆகி­யோரும் இங்கு கருத்து தெரிவித்தனர்.

 

Posted on 19/06/2015, in உள்நாட்டு செய்திகள் and tagged . Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s