“பௌத்த விகாரைகளில், மஹிந்த ராஜபக்சவின் சடலம்”!

சட்டமா அதிபர் திணைக்களம், காவற்துறை மற்றும் நீதிமன்றங்களில் சில தீர்மானங்கள் குறித்து தமக்கும் சிக்கல்கள் இருப்பதாக பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்களில் உள்ள சில அடிவருடிகள் காரணமாக இப்படியான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால், சில விசாரணைகள் தாமதமாகி வருகின்றன. மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படுகிறது எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தவராகி விட்டார். அவரது சடலத்தை விகாரைகளுக்கு எடுத்துச் சென்று அரசியல் செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ச போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே வெல்லும். நாங்கள் தேர்தலை கண்டு பயப்படவில்லை.

அதேவேளை கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் சில அபிவிருத்தித் திட்டங்களில் பெறப்பட்ட தரகு பணம் பலமிக்க நாடுகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளன. இதனால், இந்த பணத்தை இலங்கைக்கு திரும்ப கொண்டு வருவதற்காக அமெரிக்கா, ஜேர்மனி போன்ற பலமிக்க நாடுகளின் உதவியை பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

யார் என்ன குற்றச்சாட்டை சுமத்தினாலும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவுமே மக்கள் வாக்களித்தனர். 100 நாட்களில் எந்த அரசாங்கமும் செய்யாத பணிகளை நாங்கள் செய்துள்ளோம். ஜனாதிபதி துரிதமாக நாடாளுமன்றத்தை கலைப்பார் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Posted on 19/06/2015, in உள்நாட்டு செய்திகள், வினோதம் and tagged , . Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s