அவதானத்துடன் இருக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் இலங்கை “34” !

maxresdefault
உலகின் மிக நலிந்த நாடுகளின் பட்டியலை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அமைதிக்கான நிதியம்  குழ  வெளியிட்டுள்ளது.

178 நாடுகளிடையே நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 34 ஆவது இடத்தை பிடித்துள்ள இலங்கை அவதானத்துடன் இருக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக நலிவுற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் தென் சூடான் பட்டியலிடப்பட்டுள்ளது. இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களை முறையே சோமாலியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, சூடான் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. மிக உயர்ந்த நிலைபேண் தன்மை கொண்ட நாடாக பின்லாந்து தெரிவாகியுள்ளது.

அடுத்து சுவீடன், நோர்வே, டென்மார்க், லக்ஸம்பேர்க, சுவிஸ்ஸர்லான்ட் பேர்னற 14 நாடுகள் நிலைத்திருக்கும் நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன. வருடம் தோறும் இந்த ஆய்வைச் செய்துவரும் இந்த அமைப்பு அந்தந்த நாடுகளில் பல்வேறுபட்ட ஆய்வறிக்கைகள், சுட்டிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. –

Posted on 19/06/2015, in உள்நாட்டு செய்திகள், சர்வதேச செய்திகள் and tagged , . Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

பின்னூட்டமொன்றை இடுக