தனது சொந்த வாழ்க்கையில், றிசாத் பதியுதீன் சுமந்த கஷ்டங்கள்!

– முசலியில் இருந்து அபூ அஸ்ஜத்

நான் வில்பத்து காட்டுக்குள் 600 ஏக்கர் வாழைத்தோட்டம் வைத்திருப்பதாக பொய்களை அவிழ்த்துவிட்டு அரைவேக்காட்டுத்தன அரசியல் செய்பவர்கள் அதனை நிரூபித்துக்காட்டுமாறு சவால்விடுத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அல்hலாஹ்வின் மீது சத்தியமாகக் ஒரு கூறுகின்றேன்,ஒரு அங்குலமேனும் அரச காணிகளை நான் மன்னாரிலோ,வவுனியாவிலோ,முல்லைத்தீவிலோ பெற்றிருக்கவில்லை ,என பகிரங்கமாக தெரிவிப்பதாகவும் கூறினார்.
முசலி பிரதேச கல்வி மேம்பாட்டுக்கும்,வளர்ச்சிக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியுள்ள பங்களிப்பு அத்தோடு முசலியின் கல்விக்காக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டது தொடர்பில் அமைச்சரை பாராட்டும்; நிகழ்வொன்று முசலி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இதில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான்,பிரதி கல்வி பணிப்பாளர்கள்,காரிய நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அலிகான் ஷரீப்,முன்னாள் முசலி பிரதேச சபை தலைவர் உ;ளிட்ட உறுப்பி;னர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,துறை சார்ந்நதவர்கள்,அரச திணைக்கள உயர் அதிகாரிகள் என பெரும ; எண்ணிக்கையிலானவர்கள் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
மேலும் அiமைச்சர் றிசாத் பதியுதீன் தமதுரையில் –
1990 ஆம் ஆண்டு மன்னாரில் இருந்து நாம் வெளியேற்றப்பட்டு பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் புத்தளத்திற்கும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும் வந்து சேர்ந்தோம்,நானுஎனது குடும்பமும் அகதிகளாக வந்து கொத்தாந்தீவு என்னும் கிராமத்தினை வந்தடைந்தோம்.அங்கு வந்த எமக்கு அந்த மக்கள் அவர்களது பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலையினை தற்காலிக அகதி முகாம்களாக தங்குவதற்கு இடம் கொடுத்தனர்.அந்த அகதி முகாம் வாழ்;க்கை என்பது எவரும் அனுபவித்துக் விடக் கூடாது என்று சதாவும் சிந்திக்கும் ஒருவராக நான் இருக்கின்றேன்.திறந்த கட்டிடங்களுக்குள் துணிகளால் மறைத்துக் கொண்டு பல குடும்பங்கள் வாழ்ந்த நாட்களை இன்றும் எண்ணிப் பார்க்கின்றேன்.
நன் எனது வீட்டில் மூத்த பிள்ளை,எனக்கு கல்வி கற்கும் ஆர்வம் அதிகம் இருந்தது,நாங்கள் வந்து இறங்கிய கொத்தான்தீpல் அப்போது உயர் கல்வி பிரிவில் கணிதப் பாடமில்லாத நிலை,இந்த கல்வியினை கற்க நாம் 20 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள புத்தளத்திற்கே போக வேண்டும்.எம்மிடம் அன்றைய சூழலில் செலவு செய்து கல்வி  கற்க முடியாத நிலை காணப்பட்டது.அப்போது நான் கேள்விப்பட்டேன்,கொழும்பில் ஒரு அகதி முகாம் உள்ளதாக, என்னுடைய பெற்றோரிடத்தில் சொன்னேன்,நான் கல்வி கற்க வேண்டும்,கொழும்பில் இவ்வாறானதொரு முகாம் இருக்கின்றது அங்கு சென்று அங்கிருந்து கொண்டு கல்வியை தொடருமென்று என்து பெற்றோர்கள் உடன்பட்டனர்.நாங்கள் அங்கு சென்றோம்.அப்போது அங்கு அமைச்சராக இருக்கின்ற எம்.எச்.முஹம்மத் அவர்கள் முகாம் மக்களை பார்க்க வந்த போது பலர் பல்வேறு பிரச்சினைகளை சொன்னார்கள்,நான் அவரிடம் சென்று சேர் எனக்கு கல்வி கற்க ஆiசாயகவுள்ளது,என்னை கொழும்பு சாஹிரா பாடசாலையில் சேர்த்துவிடுங்கள் என்று அதற்கு அவர் சொன்னார் நாளை எனது செயலாளர் ஒருவரை அனுப்புகின்றேன்.அவரோடு இங்கு சென்று அந்த முயற்சிகளை செய்யுங்கள் என்று அதே போன்று பாயிஸ் என்கின்ற சகோதரர் வந்து என்னை அழைத்துக் கொண்டு போய்,இவர் ஒரு இடம் பெயர்ந்து வந்த மாணவன் கற்க ஆசைப்படுகின்றான்,அவருக்கு சந்தர்ப்பத்தை வழங்க முடியமா என்று கேட்ட போது,அது சாத்தியப்படாத ஒன்றாக இருந்தது,கற்பதற்கு,தங்குவதற்கு என பல செலவுகள் அது எம்மால் சுமக்க முடியாது என்பதை உணணர்ந்து கொண்டேன்,
இருந்த போதும் விpடா பிடியாக ஏதாவது  வகையில் உதவி கிட்டுமா என அங்குள்ளவரிடம் கேட்டேன்,அதற்கு அவர் இங்கிருக்கின்ற மாணவர்கள் தங்குமிடத்தின் பொறுப்பாளராக மன்னாரை சேர்ந்த ஒருவர் இருப்பதாக கூறப்பட்டது.உடனே அவரை தேடிப்  போனேன்ன,அவரது பெயர் அல்லா பிச்சை(இவர் தற்போது மௌத்தாகிவிட்டார்,அல்லாஹ் அவருக்கு உயர்ந்த சுவனத்தை வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்).அப்போது அவர் கூறினார் உங்களது நிலையில் உதவி செய்வது பெரிதும்,சிரமம் இருந்த போதும் இந்த பாடசாலை மாணவர்களை கல்வியில் போட்டித்தன்மைக்கு உள்ளாக்கும் வகையில் நாட்டில் உள்ள நன்கு படித்த 10 பேருக்கு பாடசாலையில் இலவசமாக கல்வி கற்க மற்றும் தங்குமிட வசதிகள் என்வை ஏற்படுத்தி கொடுக்கும் திட்டம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளார்கள்,அதற்கு நீங்களும் விண்;;ணப்பித்து பாருங்கள் என்று கூறி ஒரு படிவத்தையும் தந்தார்,நானும் அதனை நிரப்பி கொடுத்தோன்ஈஎன்னை போன்று 100 பேர்களுக்கும் அதிகமானவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றினார்கள்,அல்லாஹூத்தாஆலா எனக்கு அவனது உதவிக்கரத்தை நீட்டி 10க்குள் ஒருவராக என்னையும் ஆக்கினான்,படிப்பு முடிவடைந்த போது பர்சாலை நிர்வாகம் கோறியது இதே பாடசாலையில் ஆசிரியாக கடமையாற்ற உங்களுக்கு சந்தரப்பம் தருவதுடன்,சம்பளமும் தருவதாக,ஆனால் எனக்கு ஆசிரியர் பணி என்பது மிகவும் விருப்பத்துக்குரியது,அதே அதே போல் ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என்னபது எனது கனவாக இருந்தது,எனது குடும்பத்தின் நிலையினை கவனத்திற் கொண்டு ஆசிரிய பணியினை பொறுப்பெடுத்தேன்,
அதே போல் பல்கலைக்கழகத்துக்கும் விண்ணப்பித்திருந்தேன்,பல்கலைக்கழக அனுமதிக்கும் நான் தகுதி பெற்றேன்.அப்போது எனது தந்தையிடம் சொன்னேன்,நான் பல்கலைக்கழகம் சென்றால் இன்னும் கற்பதற்கு பணம் தேவைப்படும் குடும்ப நிலையினை கவனத்திற் கொண்டு பாடசாலை ஆசிரியனாகவே இருந்துவிடுகின்றேன் என்று,அதற்கு எனது இல்லை குடும்ப கதையினை நான் பார்க்கின்றேன்,உள்ளது இலட்சியத்தை நோக்கி பயணி என்று என்னை வழியனுப்பி வைத்தனர்.இவ்வாறு என்னுடன் வந்த 10 பேரும், பல்கலைக்கழக அனுமதி பெற்றனர்.
எந்த விடயத்தை இங்கு நான் சொல்லவருகின்றேன் என்றால் வறுமையினையும்,இயலாத்தன்மையினையும் காரணம் காட்டி கல்விக்கு ஒரு போதும் தடைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று இன்று எமது சமூகத்திற்கு தேவையானது கல்வி,கற்றவர்கள் உருவாக்கப்பட வேண்டும்,அவரக்ள் இந்த சமூகத்தில் ஆளுமை கொண்டவர்களாக இருக்க வேண்டும்,அதரற்காக வேண்டி இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மையப்படுத்தி சில கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளேன்.இது தொடர்பில் கலந்துரையாடல்களை செய்துவருகின்றோம்.இன்று என்மீது அபாண்டங்களை சுமத்துகின்றனர்,நான் முசலியின் கல்வியை சீரழிப்பதாக,இந்த அபாண்டங்களை சுமத்துகின்றவர்கள் இந்த கல்விக்கு எதை செய்திருக்கின்றார்கள் என கேட்க விரும்புகின்கின்றேன்.நாடடில் உள்ள பலபாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தினார்கள்,அது கேள்விபட்டு நான் கல்வி அமைச்சரிடத்திலே இந்த முசலி பாடசாலையினையும் தேசியபாடசாலையாக  பிரகடனப்படுத்துமாறு அதற்கான அமைச்சரவை பத்திரமொன்றினை விசேடமாக போடச் செய்தேன்,அதுமட்டுமல்ல மஹிந்தோதய ஆய்வு கூடங்கள் ஆயிரம் பாடசாலை திட்டங்களுக்குள் இந்த முசலி பாடசாலையினையும் உள்வாங்கச் செய்தேன்.அதே போல் இந்த பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளோம் இவ்வாறு எனது பணிகளை செய்து கொண்டு போகின்ற போது சிலர் வம்புக்கு வீண்பேச்சுக்களை சந்திகளிலும்,சாக்கடைகளிலும் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.எமது இந்த மாணவர்கள் உயர் நிலையினை அடைந்து கொள்ளகூடாது,
அடைந்துவிட்டால் தமக்கு சவாலாகிவிடுவார்கள் என பிரதேசவாதம் கொண்டவர்கள் இவ்வாறான பொறுப்பற்ற விசமத்தனமான கதைகளை கட்டவிழ்த்துவிடுகின்றனர்.இவர்களது செயற்பாடுகளை இறைவன் நன்கறிவான் அதற்கு போதுமான கூலிகளை வழங்கக்கூடியவன்,
இந்த நாடடின் அரசியில் பேசக்கூடிய ஒருவராக இன்று நான் மாற்றப்பட்டுள்ளேன்.சிங்கள மக்கள் என்மீது கோபம் கொள்ளும் அளவுக்கு இனவாத பிரசாரங்கள் கோலோச்சம் ஏறியுள்ளது.தனிந்தோறும் சிங்களன ஊடகங்கள்,குறிப்பாக சிங்கள வானொலிகள் எனக்கு எதிராகவும்,இந்த வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராகவும் செய்துவருகின்ற பிரசாரங்கள் ஒருபுறம் என்னை பாதித்துள்ளது.அது மட்டுமல்லாமல் எமது மக்களின் பாதுகாப்புக்கு மேலும் ஒரு பாராளுமுன்ற உறுப்பினர் இருந்தால் சிறந்தது என எண்ணி இந்த பிரதேசத்தை சேர்ந்த ஹூனைஸ்; பாருக் அவர்களை பாராளுமன்ற உறுப்பினராக கொண்டுவந்தோம்,அவரை கொண்டுவருவதற்கு இந்த மக்கள் செய்த தியாகங்கள் அளப்பறியது.துரதிஷ்டம் ஒரு கூட்டறவு கடையில் போடப்பட்ட பெயர் தொடர்பில் இந்த மக்களின் ஆணiயினை மீறி இன்று தான் தோற்றாலும் பராவாயில்லை,இந்த றிசாத் பதியுதீன் வென்றுவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்துவருகின்ற அனர்த்தங்கள் ஏரளாம்.
குறிப்பிட்ட ஒரு ஊடகத்தினை கொண்டு வந்து எனக்கு எதிராக தனிப்பட்ட ரீதியிலும்,இந்த மக்களின் மீள்குடியேற்றத்தை காட்டிக் கொடுக்கும் வகையிலும் செயற்பட்டுவருகின்ற விடயங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளது.ஏன் இவர் இந்த அநியாயத்தை செய்கின்றார்.அரசியல்வாதி என்றால் அவர்கள் இந்த மக்களுக்கு பணியாற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும் உண்டவீட்டிற்கு இரண்டகம் செய்யும் நிiலையினை நாம் எதிhக பேசச் செய்யும் அளவுக்கு இந்த வடக்கு முஸ்லிம்களின் காடடிக்கொடுப்புக்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்ற விடயத்தினையும் நாம் அறியாமல் இல்லை.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பலமான அமைச்சினை கொண்டிருந்தோம்,அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களுடன் இருந்த நெறுக்கத்தால் இந்த வடக்குக்கு எதையெல்லாம் கெண்டுவர வேண்டுமோ அவற்றை முடியுமான வரை கொண்டுவந்தோம்,இலங்கையில் பல மீனவ துறைமுகங்களை அரசு அமைக்க திட்மிட்டது.அப்போது சிலாவத்துறையில் ஒரு மீனவ துறைமுகம் அமைக்கப்பட ணேவ்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்தினேன்,அதற்கு உடடியாக அனுமதி வழங்கப்பட்டது.அண்மையில் அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்து இதனi துரிதப்படுத்துமாறு வேண்டினேன்.இதற்கான நிதி கிடைக்கப் பெற்றுள்ளதகாவும் வெகுவிரைவில் இந்த பணி ஆரம்பிக்கப்படும் என்று உத்தரவாத் அளித்துள்ளார்.
அதே போல் ஆசிரிய நியமனங்கள்.சமூர்த்தி நியமனங்கள்,உள்ளிட்ட இன்னும் எத்தனையோ ஆயிரக்கணக்கான நியமனங்களை எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது வழங்கியுள்ளோம்.இந்த நியமனங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கும்,நிறுவனங்களுக்கும் சென்று தகுதியற்றவர்களுக்கும்,கல்வி தகைமை அற்றவர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொய் பரப்புரையினை செய்கின்றனர்.உங்களை பார்த்து கேட்கின்றேன் நீங்கள் நியமனம் பெற தகுதியற்றவர்களா ? என.
இந்த அரசியல் வாழ்வில் என்னைவிட வேதனையுமு;,துன்பமும் அடைந்த ஒருவன் இருக்க முடியாது என நினைக்கின்றேன்.எந்த பணியினை மக்களுக்கு செய்ய முற்பட்டாலும்,அன்று சில தமிழ் அரசியல்வாதிகள் எதிர்த்துவந்தனர்.இன்று அவர்களுடன் எம்மில் உள்ளவர்களும் சேர்ந்து இதனை செய்கின்றனர்.
முஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் இருந்து பெரும்பான்மை உறுப்பினர்களுடன்,மைத்திரபால சிறிசேன அவர்களை ஆதரிக்க நாம் எடுத்த முடிவு என்பது மதில் பூணைகளாக இருந்த அரசியல் வாதிகளுக்கு சின்ம சொற்பனமாகியது.பதவிகளை மற்றும் இலக்காக   கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளை போலல்ல நாங்கள்,எமது மக்களுக்கு கவசமாக எம்மை தியாகம் செய்துவருகின்றோம்.இரவு பகல் பாராது,குடும்ப சந்தோசங்களுக்கு அப்பால் சமூகம் என்ற சிந்தனையுடன் செயற்படும் எம்மை நோக்கி ஏன் இந்தக் கூட்டம் தாக்குதலை நடத்துகின்றது ,தனது சகோதரியின் மரணம் தொடர்பிரல்  ஞபாகப்படுத்திய அமைச்சர்(கண்ணீர்; விட்டார்) பணத்துக்காக நாம் புதிய அரசில்; இணையவில்லை,சில தலைமைகளும்,தனி நபர்களும் தலைக்கென பல கோடிகளை விலைப் பேசி சென்றார்கள் என்பதையும் மறைக்கமுடியாது.
இந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை யாரெல்லாம் தடுக்க நினைத்தார்களோ,அவர்களுக்கு இன்று இந்த முசலியில் உள்ள தகவல்களை பிழையாக கூறுபவர்கள் யார் என்பதை நீங்கள் அறியாமல் இல்லை.நீங்கள் தலைமைத்துவத்துக்கு தகுதியானவர்கள் என்று மக்கள் நினைத்தால் அதனை வழங்குவார்கள்,அதற்காக தலைவர்களாக வரவேண்டும் என்பதற்காக போலி படோடோபங்களை காட்டி அதனை வலிந்து பெற்றுக் கொள்ளும் மன நிலையில் இருந்து விடுபடுங்கள்,எமது மக்கள் கடந்த 25 வருடங்களாக இழந்து போனவற்றை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றார்கள்,தாயக பூமியில் இரந்து வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்துடன் வாழ்கின்றார்கள்,இவ்வாறான வாழ்வா,வெளியேற்றமா? ஏன.ற சுழிக்குள் சுத்திக்கொண்டிருக்கின்ற போது இதில் குளிர்காய நினைப்பது என்பது எந்தளவுக்கு மோசமானதாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்ளவிரும்புகின்றேன்.
ஆசிரியர்களுக்கு பொறுப்பிருக்கின்றது இந்த சவாலை எதிர் கொள்ள,நீங்கள் செய்கின்ற பணி மகத்துமிக்கது.நீங்கள் கல்வி போதிக்கும் ஒவ்வொரு பிள்ளையும் உங்களது பிள்ளைகளுக்கு சமமானவர்கள் என கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன் கல்விக்கு உயிர் கொடுத்தவர்கள் மரணிப்பதில்லை என்றும் கூறினார்.
Advertisements

Posted on 19/06/2015, in உள்நாட்டு செய்திகள் and tagged . Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s