முஸ்லிம்களின் பள்ளிவாசல் உடைக்கும்போது அறிக்கைகூட விடாத முஸ்லிம் அமைப்புக்கள் வில்பத்து விவகாரத்தில் அக்கறை காட்டுவது ஆரோக்கியமான நகர்வுதான் மாகான சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார்!

கடந்த அரசாங்கத்தின் போது முஸ்லிம் சமூகத்திற்கு  எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டு தர்பார் கலை கண்டும் காணாதவர்கள் போல் இருந்த முஸ்லிம் அமைப்புக்கள் முஸ்லிம் எழுத்தாளர்கள் அனைவரும் வில்பத்து விடயத்தில் கரிசனைவுடன் செயல்படுவது பாராட்டவேண்டிய விடயமாகவேவுள்ளது என மத்திய மாகான சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் தெரிவித்துள்ளார் 

கண்டியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியதர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே உவைஸ் ஹாஜியார் இதனை தெரிவித்தார் 

அங்கு மேலும் கூறுகையில் 

எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலின் போது முஸ்லிம்கள் தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை தக்க வைத்துக்கொள்வதில் மிக கவனமாக இருக்க வேண்டியது மட்டுமின்றி ஒற்றுமைவுடனும் செயல்படவேண்டிவுள்ளது 

கட்சிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் சதிகள் தாராளமாகவே அரங்கேறும் எனவே முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற விடயங்களில் எமது தலைமைத்துவங்கள் கவனம் செலுத்தும் தருணமாகவே இது உள்ளது என்றார் 

எதிர் வரும் காலங்களில் நமது உரிமைக்காக பாராளுமன்ற பிரதிநிதிக்காக நாமே ஒன்று பட்டு செயல் பட முன்வர வேண்டும் என முஸ்லிம்களை வினயமாக கேட்டுக்கொள்வதோடு அதனை தொடர்ந்து தான் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கும் இந்த அழுத்தத்தினை முன்வைக்குமாறும் மக்களை கேட்டுக்கொள்வதாக உவைஸ் ஹாஜியார் மேலும் தெரிவித்தார் 

Posted on 08/06/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s