தமது தாயக மக்களை தாயக பூமியல் மீள்குடியேற்றம் செய்யும் பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்க வேண்டும் – றிசாத் பதியுதீன்!

image

Irshad Rahumadullah

வன்னி மாவட்ட மக்களது வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற நான் அந்த மக்களது பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுக்கின்ற போது என்னை இனவாதியாகவும்,வடக்கு முஸ்லிம்களை ஏனைய சமூகத்தார் மத்தியில் பிழையானவர்கள் என்று காண்பிப்பதற்கு நாசகார சக்திகள் முனைவதாக குற்றம் சாட்டியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்தமது தாயக பூமியல் இந்த மக்கள மீள்குடியேற்றம் செய்யும் பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  முன்னெடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

சர்ச்சைக்குட்பட்டுள்ள மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி,கொண்டச்சி கிராம மக்களும்,பல்வேறு அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கத்தினது கவனத்தை ஈர்க்கச் செய்யும் வகையில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த  2 இலட்சம் கையொப்பம் பெறும் வேட்டையின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு முஸ்லிம்கள் இன்று வாழ்வா?சாவா? என்ற மன நிலையில் வாழ்கின்றனர்.கடந்த 25 வருட அகதி வாழ்க்கை அவர்களின் பல்வேறு எதிர்பார்ப்புக்களை சூன்யமாக்கிவிட்டது.இந்த நிழலையில் அனைத்தையும் இழந்த இந்த சமூகம் மீண்டும் தாம் வாழ்ந்த  பூர்வீக மண்ணில் வந்து மீள்குடியேறுகின்ற போது சில நாசகார சக்திகள் இந்த மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றனர்.

அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்திய சமாதானத்தால் இந்த வடபுல முஸ்லிம்கள் தமது தாயகத்துக்கு வர முடிந்தது.அந்த வகையில் அவருக்கு இந்த வடக்கு மக்கள் நன்றிகடன்பட்டவர்கள்.துரதிஷ்டம் இனவாதிகளின் கருத்துக்களுககு அவர் ஆட்பட்டதால் தான் தனது ஆட்சியினை இழக்க நேரிட்டது.

இன்று இந்த நாட்டில் மீண்டும் இனவாதிகள் தலைதுாக்குவதை அறியமுடிகின்றது.இது இந்த சமாதானத்துககு ஆரோக்கியமானதாக அமையாது.இந்த வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் சில  அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிடுவதாக அறிகின்றேன்.இந்த அறிக்கை என்பது எந்தளவுக்கு உண்மைகளை கொண்டது என்பதை எம்மால் ஊகிக்க முடியும்,இவ்வாறு இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு எங்கோ இருந்துவந்தவர்கள் அறிக்கைகளை கொடுக்க முடியுமென்றால் இந்த மறிச்சுக்கட்டியில்,பாலக்குளியில்,கரடிக்குளியில்,கொண்டச்சியில் பிறந்த மக்கள் தமது நியாயங்களை சுடடிக்காட்டி அறிக்கையொன்றினை சமர்ப்பிக்க தயாராகின்றனர்.இதனையும் பார்த்துவிட்டுத் தான் ஜனாதிபதி முடிவுகளை எடுக்க வேண்டும்.இது தான் நியாமானது மாறாக ஒரு தலைப்பட்ட அறிக்கைகளை ஏற்றுக்கொண்டு கருத்து தெரிவிப்பது குறித்து நாம் அவதானித்துள்ளோம்.

எது எவ்வாறாக இருந்தாலும் இந்த வடபுல முஸ்லிம்கள் ஒரு அங்குலத்தை கூட வில்பத்து காட்டுப்பகுதியினை அபகரிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்திவருகின்றோம்.இந்த நியாயங்கள் நிராகரிக்கப்படும் எனில்  அது இந்த நாட்டு முஸ்லிம்கள் இடத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதையும் என்னால் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.

Advertisements

Posted on 07/06/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. 1 பின்னூட்டம்.

 1. அன்பின் அமைச்சர் ரிசாத் அவர்களே!

  முதலில் இந்த பௌத்த இனவாதத்தின் முஸ்லிம்கள்மீதான காழ்ப்புணர்வின் பின்னணியை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இதன் உண்மையான சூத்திரதாரி “ஹெலஉறுமய” சம்பிக்கவேயாகும். அவரே முதன்முதலில் அநாகரீக தர்மபாலாவின் கோசத்தை மீண்டும் முழங்கியவரும் புலிகளுக்கெதிரான மகிந்தவின் யுத்த முடிவுக்கு காரணமானவரும், ஆட்சேர்ப்பு செய்தவரும் மஹிந்த குடும்பம் உட்பட அனைத்து பௌத்த சிங்களவர்களுக்கும் மதவாதத்தை விதைத்தவரும், முதன்முதலில் (பொதுபலசென உருவாக முன்பே) அல்-குரானையும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் விமர்சித்தவரும். (இது கிட்டத்தட்ட 2005-2007 என நினைக்கிறேன்.) இஸ்லாத்தின் மீதான வெறுப்பிற்கு அவர்கூறிய காரணம்… ஒரு (கண்டி, அல்லது அந்த மாகாணத்தை சேர்ந்த) முஸ்லிம் யுவதி ஒரு பௌத்த இளைஞனோடு ஓடியபோது அந்த ஜோடியை தண்டிக்க முஸ்லிம் சகோதரர்கள் தேடியபோது.. அந்த யுவதி இந்த சம்பிக்கவிடம் புகலிடம் கோரி இஸ்லாத்தை கொச்சைப்படுத்திய விடயமாகும். இது சம்பிக்கவின் இஸ்லாத்திற்கு எதிராக வெளியிடப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை நான் வாசித்துள்ளேன்.

  எனவே, அவர் தனது பரிவாளங்களோடு மகிந்தவுக்கு வலது கையாக நின்று இனவாதத்தை, மதவாதத்தை கொண்டுசென்று முஸ்லிம்களை குறிவைத்தார். அதில் வெற்றியும் கண்டார். அதேநேரம் அவருக்கு தான் நாட்டின் தலைவராக எதிர்காலத்தில் வரவேண்டும் என்ற நப்பாசையும் இருந்தது. அது சாத்தியப்படாது என்ற நிலையிலேயே…. அதோடு மகிந்தவின் ஆட்சிக்கும் ஆப்பு விழப்போகிறது என்ற ஊகம் தெளிவானதால்.. அதைவிட்டுவிட்டு எதிரணியோடு கூட்டுச்சேர்ந்து மைத்திரியின் வெற்றியில் பங்கெடுத்தார். அதனால், அப்போது மகிந்தவுக்கு எப்படி ஆசானாக இருந்து காதில் ஊதிக்கொண்டிருந்தாரோ அப்படியே இப்போது மைத்திரியின் காதிலும் ஊதிக்கொண்டிருப்பது தெளிவாகின்றது. அதற்கு தெளிவான ஒரு உதாரணம், அண்மையில் (அரசியல் சார்ந்த) முஸ்லிம்கள் இல்லாத ஒரு அரசியலமைப்பு குழுவொன்றை உருவாகியமையும், அதற்கு சம்பிக்கவே “ஜனாதிபதியின்” பிரதிநிதியாக உள்ளமையும்.

  இவ்வாறே வடமுஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கும் ஆரம்ப காலத்தில் இவரே பிரச்சினையாகவும், உங்கள் அரசியல் தலைமைக்கு எதிராகவும் இருந்துள்ளார் என்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன்.

  ஆக, தற்போது இவரது ஆலோசனையின் (அல்லது ஆதிக்கத்தின்) அடிப்படையிலேயே மைத்திரியும் (தானும் முஸ்லிம்கள் மீது ஒரு காழ்ப்புணர்ச்சி கொண்டவர் என்ற ரீதியில்—ஆதாரம் அவரது முன்னால் அரசியலும் முஸ்லிம்கள் விடயத்தில் அவரது மௌனமும், பொலன்னறுவையில் அவரது முஸ்லிம்கள் மீதான புறக்கணிப்பும்) உங்கள் வடபுல முஸ்லிம்கள் விடயத்தில் நீங்கள் எவ்வளவோ உண்மைகளை புரியவைத்தும் அவர் தனக்கு நிலையை மாற்றிக்கொள்ளாமல் உங்களையும் வடக்கு முஸ்லிம்களையும் குற்றவாளியாக கருதுவதும் காட்டட முனைவதும்….. இதற்கு நமது சந்தர்ப்பவாத துரோக அரசியல்வாதிகள் துணைநிற்பதும் தெளிவானதும் வேதனையானதுமாகும்.

  உண்மையில் மைத்திரி முஸ்லிம்கள் விடயத்தில் கரிசினை கொண்டவரல்ல…. மாறாக முஸ்லிம்கள் மீது நல்லபிப்ராயம் கொண்ட ராஜித சேனாரத்ன, சந்திரிக்கா போன்றவர்களே இந்த ஆட்சியில் உண்மையாக நடக்கக்கூடியவர்கள்.

  எனவே, நீங்கள் உங்கள் அரசியலை மைத்திரியை நம்பாது, மிக நிதானமாகவும், அதேநேரம் தைரியமாகவும் முடிந்தால் சந்திரிக்காவோடும், ராஜிதவோடும் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதோடு இனிமேலும் முஸ்லிம்கள் விடயத்தில் அணுகவேண்டியுள்ளது….. உண்மையில் முஸ்லிம்கள் விடயத்தில் இப்போது மைத்திரியும் ரணிலும் ஒன்றுதான்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s