ஐக்கிய தேசிய கட்சியின், அமைப்பாளராக ரவூப் ஹக்கீம்!

image

-நஜீப் பின் கபூர்

இந்தச் செய்தி மு.கா.தொண்டர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாகவும் ஹக்கீம் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவும் இருக்கும். அல்லது பேஸ்புக்கில் ஜப்னா முஸ்லிம் இணையத்தை திட்டடித் தீர்க்கலாம், நாகரீகமற்ற பின்னூட்டங்களை அனுப்பலாம்.

தலைவர் இப்படி ஒரு முடிவை எடுத்தாரா என்பது மு.கா.வினரது அதிர்ச்சிக்குக் காராணமாகவும், தலைவர் நல்ல முடிவைத்தான் எடுத்திருக்கின்றார் என்று ஹக்கீம் விசுவாசிகள் பூரித்துப்போக அவர் ஐ.தே.க. அமைப்பாளரானால்  பிழைத்துக் கொள்ளலாம் என்பது அவர்கள் நோக்கம்!

ஹக்கீம் தொடர்பாக நாம் ஏதும் கருத்துச் சொன்னால் அதற்கு ஆதாரங்கள் எங்கிருந்து கிடைத்தது? யார் இதனை எழுதியது என்றெல்லாம் அடிக்கடி ஊடகம் நடத்துகின்றவர்களிடத்தில் கேள்விகளை எழுப்புவது தொழிலாக இருந்து வருகின்றது. அதுபற்றி விளக்கமாக விரைவில் தகவல்களைச் செல்லலாம் என்று இருக்கின்றேன்.

இப்போது விடயத்திதுக்கு வருவோம். சில தினங்களுக்கு முன்னர் ஹெல உருமய நிசந்த வர்னக்குல சூரிய இப்படி ஒரு செய்தியைச் சொல்லி இருந்தார். 

மு.கா.சார்பில் தேர்தல் சீர்திருத்தக் குழுவில் அங்கம் வகிக்கின்ற நிசாம் காரியப்பர், வடிவமைக்கப்பட்டுள்ள சீர்திருத்தத்தை ஏற்றுக் கொள்வதாக அங்கு கூறுகின்றார்.

ஆனால் ஹக்கீமோ 20 தேர்தல் சீர்திருத்தம்  தொடர்பாக முரண்பாடான கருத்துக் கூறிக் காரியத்தைக் குழப்பிக் கொண்டிருக்கின்றார் அவர் ஏன் இப்படி நடந்து கொள்கின்றார் என்று புரியவில்லை என்பது அவர் கருத்தாக இருந்தது.

நேரடித் தேர்தல் என்றால் ஹக்கீமுக்கு ஒரு தொகுதி தேவை கிழக்கை நம்பி இருப்பது ஆபத்து என்பது அவர் கணிப்பு! எனவே கிழக்கிற்கு வெளியே ஒரு தொகுதியில் ஹக்கீமுக்கு அமைப்பாளர் பதவி வேண்டும். என்பது ஹக்கீமின் அரசியல் வர்த்தகத் தேவை!

எனவேதான் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் அமைப்பாளர் பதவியை ரணிலிடம் பெற்றிருக்கின்றார். அமைப்பார் என்ற சொல்லுக்கு இவர்கள் பொறுப்பாளர் என்று ஊடகங்களுக்குக் கதை சொல்ல வருகின்றார்கள்! அதற்கு விளக்கமும் வேறு பிரச்சனைகள் வந்தால் கொடுப்பார்கள்! 

ஆம் அமைப்பாளர் பொறுப்பாளர்…!

புதுக் கதை.!அவர்களது!

வேடிக்கை என்னவென்றால் கண்டியிலுள்ள கலகெதர தேர்தல் தொகுதிக்கு ஐ.தே.க. அமைப்பாளர் ஒருவரை நியமனம் செய்யாதாம்…! அந்த வேலையை ஹக்கீம்தான் பார்ப்பாராம்…! அப்படியானால் ஹக்கீம் எந்தக் கட்சி அமைப்பாளர் என்று  நாம் கேள்வி எழுப்புகின்றோம். மு.கா. அரசியல் உயர்பீடம் இந்த நிலைப்பாட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றது.

மு.கா. ஆதரவாளர்கள் இதுபற்றி என்ன சொல்லப்போகின்றார்கள். இப்படி மு.காவில் இருந்து கொண்டு ஹக்கீம் ஐ.தே.க அமைப்பாளர் பதவி ஏற்கும் போது தனித்துவம் என்ற மு.காவில் கூப்பாட்டுக்கு என்ன ஆகும்?

மறுபக்கத்தில் மு.கா.தலைவருக்கு ரணில் ஐ.தே.க. கலகெதர அமைப்பாளர் என்ற பதவி கொடுத்திருப்பது பற்றி ஐ.தே.க. முஸ்லிம் தலைவர்களின் நிலைப்பாடு என்ன?  

எமது இந்த விமர்சனத்திற்குப் பின்னர் கிழக்குக் கொந்தளிக்கும் போது நவமணி (05-07.06.2015) செய்தி தவறானது என்று ஹக்கீம் ஊடகப்பிரிவு குறிப்புச் சொல்லவும் நிறையவே வாய்ப்பு இருக்கின்றது?

இந்த கலககெதர என்பது ஹக்கீம் பிறந்த ஊராம்…!  1960 ஏப்ரல் 13ம் திகதி ஹக்கீம் நாவலப்பிடிய வைத்தியசாலையில் (ஊர் ஹபுகஸ்தலாலை- கொத்மலைத் தேர்தல் தொகுதி, நுரரெலிய மாவட்டம்) பிறந்தார் என்பதுதான் உண்மை. அமைப்பாளர் பதவிக்காக பிறப்பிடத்தைக் கூட …..! மாற்றிக் கொள்கின்றார்களே என்ன அரசியல் இது?

இத்தனைக்கும் கலகெதரத் தொகுதியில் உள்ள முஸ்லிம் வாக்குகள் 2000க்கும் குறைவனதே! அங்கு போய் இவர் எப்படி மு.கா.தலைவர் என்று  வேலை பார்க்க முடியும்?

அது அவர் அரசியல். மு.கா இதற்கு என்ன பதில் தர இருக்கின்றது என்று இனி பார்ப்போம். 

இதனால்தான் நாம் பல முறை தொடர்ச்சியாகச் சொல்லி வருகின்றோம். புதிய தேர்தல் திருத்தத்திற்கு அஞ்சுகின்ற முதல் நபர் ஹக்கீம்.  அடுத்தவர் ரணில் என்று!

-JFM

Advertisements

Posted on 07/06/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. 1 பின்னூட்டம்.

  1. வாழ்க தலைவா! வாழ்க வளமுடன்!!!

    இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை! பழைய ஒப்பந்தம் (2002) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது! அவ்வளவுதான்! புதிய தொகையும் சலுகைகளும் மீண்டும் கைமாரப்பட்டிருக்கும்! அல்லது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்! இதைத்தானே தலைவர் ஒவ்வொரு அரசியல் குலப்பன்களின்போதும் எதிர்பார்த்தது. அதுதானே தலைவரது “விசேட” வியூகம்! தான் ரணிலோடு சேரவும் வேண்டும், அதேநேரம் அதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையும் சரியாக அமையவேண்டும்,! இப்போது சரியாக அமைந்துள்ளது!

    நமது தலைவர் “கில்லாடி”தானே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s