ஐக்கிய அரபு நாடுகளில் ஜுன் 15 முதல் செப்டம்பர் 15 வரை தொழிலாளிகளுக்கு பிற்பகலில் இரண்டரை மணிநேர ஓய்வு!

image

புனித ரமலான் நோன்பை முன்னிட்டு வரும்  ஜுன் மாதம் 15-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15 வரை நேரடியாக வெயிலின்கீழ் வேலை செய்யும் (கட்டுமானப் பணிகள், பெட்ரோல் கிணறு வெட்டுதல்) தொழிலாளிகளுக்கு பிற்பகலில் இரண்டரை மணிநேர ஓய்வு அளிக்குமாறு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கோடைக் காலத்தில் ரமலான் நோன்பு வருவதால், நேரடியாக வெயிலின்கீழ் தொழிலாளர்களுக்கு அனைத்து வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களும் இந்த இரண்டரை மணிநேர ஓய்வினை கட்டாயமாக வழங்க வேண்டும். அவசர வேலை நிமித்தமாக தொடர்ந்து பணிகள் நடைபெற வேண்டிய சூழ்நிலையில் தொழிலாளிகளுக்கு தேவையான குடிநீர், குளிர்பானம் போன்ற ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

கடந்த 11 ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் இந்த கட்டாய ஓய்வு அளிக்க தவறுபவர்களை கண்காணிக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு அளிக்கப்பட வேண்டிய நேரத்தில் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்துவது தெரியவந்தால் அந்நிறுவன உரிமையாளருக்கு 5 ஆயிரம் 50 ஆயிரம் திர்ஹம் அவரை அபராதம் விதிக்கப்படுவதுடன் தொழில் உரிமமும் ரத்து செய்யப்படும் என ஐக்கிய அரபு அமீரக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Posted on 31/05/2015, in ஆரோக்கியம், சர்வதேச செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s