நாட்டில் பரவி வருவது பறவைக் காய்ச்சல் அல்ல இன்புளுவென்ஸா ஏ. எச்.என். காய்ச்சலேயாகும்!

image

தற்போது நாட்டின் பல பிரதேசங்களிலும் பதிவாகின்ற புதுவிதக் காய்ச்சலானது பறவைக் காய்ச்சல் அல்ல என்று சுகாதார அமைச்சின் நோய் பரவுதல் தடுப்பு பிரிவு பணிப்பாளர் டொக்டர் பபா பலிகவர்தன நேற்றுத் தெரிவித்தார். தற்போது பதிவாகின்ற காய்ச்சல் இன்புளுவென்ஸா ஏ. எச்.என். காய்ச்சலேயாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இன்புளுவென்ஸா ஏ. எச். என். காய்ச்சலை முழுமையாகக் குணப்படுத்தி விட முடியும். அதற்குத் தேவையான மருத்துவ வசதியை எமது மருத்துவ கட்டமைப்பு கொண்டிருக்கின்றது. இக்காய்ச்சலைச் சரியான முறையில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கான வசதியை எமது மருத்துவ ஆராய்ச்சி நிலையம் கொண்டிருக்கின்றது. அவ்வசதிகளை மேலும் வலுப்படுத்து வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள் ளோம்.

அதேநேரம் எந்தவொரு நோய்த் தொற்றையும் 24 மணி நேரத்தில் சரியான முறையில் உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய வசதியும் இங்குள்ளது. அத்தோடு இந்நோய்க்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான சகல மருந்து பொருள் வசதிகளும் அனைத்து பிரதான வசதிகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை இந்நோய் பரவுவதைத் தவிர்த்தல், அதிலிருந்து பாதுகாப்பு பெறுதல், சிகிச்சை பெறுதல் தொடர்பாக பொதுமக்களை அறிவூட்டுதல் போன்ற நடவடிக்கைகளும் விரைவில் ஆரம் பிக்கப்படவுள்ளன.

முடிந்தவரை மக்கள் கூடும் இடங்க ளுக்குச் செல்லுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், பயணங்களிலிருந்து வீடு திரும்பியதும் சவர்க்கார மிட்டு கை கழுவிக் கொள்ளுமாறும் காய்ச்சல், தடிமல், இருமல், தொன்டை தொற்று போன்றவாறான அறிகுறிகளை கொண் டிருப்பவர்கள் தாமதியாது அருகிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கோ அல்லது தகுதி மிக்க டொக்டர்களையோ அணுகி சிகிச்சை பெறுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

-தினகரன்

Posted on 26/05/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s