வில்பத்து விவகாரம் தொடர்பில் மைத்திரியின் முகமூடி கிழிந்தது!

-ஏ. எச்.எம்.பூமுதீன்

வில்பத்து தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ள கருத்து முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பாரிய கொந்தளிப்பை தோற்றிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ‘வில்பத்து மற்றும் மன்னார் பிரதேசங்களில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றியமையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மேற்படி கருத்தே முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பாரிய கொந்தளி;ப்பையும் ஆச்சரியத்தையுடம் தோற்றுவித்துள்ளது.

நாடு பூராகவும் உள்ள முஸ்லிம் சமுகத்தினர் ஜனாதிபதியின் மேற்படி கருத்துக்கு கடும் தொனியில் தமது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

மகிந்த – மைத்திரி இருவரும் ஒரே கொள்கை உடையவர்கள்தான் என்றும் அந்த இருவரும் முஸ்லிம் சமுகத்தை மாற்றுக் கண் கொண்டு பார்ப்பவர்கள் தான் என்றும், நம்பவைத்து முஸ்லிம்களை மைத்திரி ஏமாற்றிவிட்டார் என்றும் கடுமையாக தமது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

மகிந்த ஆட்சிக் காலத்தில் பொதுபலசேனா போன்ற ஒரு சில இனவாத குழக்களே வில்பத்து விவகாரத்தை தூக்கிப் பிடித்து இனவாதத்தை கக்கியது.

 எனினும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு பூரண ஒத்துழைப்பை மகிந்த அரசு வழங்கதுடன் மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் தமது தாயக பூமியில் மீளவும் குடியேறுவதற்கு எந்த வொரு ஆட்சசேபனையையும் தெரிவித்திருக்கவில்லை.

மன்னார் மாவட்டத்தின் சர்சைக்குரிய பகுதியாக தற்போது பேசப்படும் மறிச்சிக்கட்டி ,கண்டக்குளி ,பாலைக்குளி போன்ற பகுதிகளில் முஸ்லி;ம்கள் மீள் குடியேறவும் அவர்களுக்கு காணி ஒதுக்கி கொடுத்தும் அக்காணிகளில் வீடுகள் நிர்மானிப்பதற்கு அனுமதியையும் ஒத்துழைப்பையும் மகிந்த அரசு வழங்கியிருந்தது.

இதற்கு எதிர்மாறாக ஜனாதிபதி மைத்திரிபாலவே நேரடியாகவே   தற்பேர்து மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஏற்க முடியாது எனக் கூறியிருப்பது மன்னார் வாழ் முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை ஜனாதிபதியே மீறிவிட்டார் என்ற குற்றச்சாட்டை முஸ்லிம்கள் இன்று ஓரணியாக திரண்டு முன்வைக்க எத்தனித்துள்ளனர்.

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு சிங்கள இனவாதிகள் ஏற்படுத்திய தடை மற்றும் நாடு பூராகவும் உள்ள முஸ்லிம் சமுகத்தினருக்கு அதே சிங்கள இனவாதிகள் ஏற்படுத்திய துன்புறுத்தல்களே மகிந்த ஆட்சி கவிழ்வதற்கு காரணமாக இருந்ததுடன் மைத்திரி ஆட்சியும் தோற்றம் பெற்றது.

ஆனால் மைத்திரியின் ஆட்சியிலும் அதே இனவாதப்போக்கு அகலக் காலப்பதித்துள்ளது மட்டுமன்றி ஜனாதிபதியே நேரடியாக மீள்குடியேற்றத்திற்கு தடையான கருத்துக்களை கூறியிருப்பதும் இந்த அரசு தொடர்பில்  முஸ்லிம்கள் மத்தியில் பெரும் ஐயப்பாட்டையும் சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.

பொதுத் தேர்தல் ஒன்று விரைவில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் இக்காலக்கட்டத்தில் சிங்கள இனவாதப் போக்கு நாட்டில் மேலும் வலுப்பெற்று வருவது முஸ்லிம்களை தீவிரமான ஒரு தீர்க்கமிக்க முடிவுக்கு சிந்திக்கத் தூண்டுகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் இலத்திரணியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக நேரடி விவாதங்களிலும் கலந்து கொண்டு நேர்காணல்களையும் வழங்கி வில்பத்து தொர்பல் சிங்கள மத்தியில் இருக்கும் சந்தேகங்களை தீர்த்து பெம்பகுதியானோரை விழிப்படையச் செய்திருக்கும் இவ்வேளையில் ஜனாதிபதி மைத்திரியின் கூற்று மேலும் சிங்கள மத்தியில் இனவாத எண்ணத்தை தூண்டியுள்ளது.

Advertisements

Posted on 26/05/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. 1 பின்னூட்டம்.

 1. We muslims feel that we are disappointed of My3 hypocrazy on muslims’ issues. In North muslims case, he has neglected their needs and rights, and oppose their re-settlement even after 25 years of long suffering. Also he has ignored total muslims in 20th amendments, and other constitutional cases.

  but, he has taken very serious of a individual’s murder (although it has happened by her relatives) and set a seperate court and judgement for it while ignoring a communities burning issues and suffering!

  so, is this the “GOOD GOVERNANCE??” for this only the total muslims voted for him???

  DID HE FORGET THAT THE TURNING POINT FOR COLLOPSE / DEFEAT OF MAHINTHA’S ERA IS ONLY THE MUSLIMS?????

  IF SO, HE ALSO WOULD GET A GOOD LESSION LIKE MAHINTHA FROM THE MUSLIMS SOON!!!

  DEAR PRESIDENT MAITHIRI,

  DON’T FORGET MUSLIMS!! IF YOU FORGET MUSLIMS MEANS THAT YOU FORGOT YOUR PROMISES TO THE VOTERS, TO THE GOOD PEOPLE OF THIS COUNTRY!!!
  DON’T SPOIL YOUR GOOD IMAGE THAT IS IN OUR HEART!!!

  TAKE US SERIOUS! BECAUSE WE HAVE THE TRUTH!! THAT IS ALLAH WILL PUNISH THE WRONG PEOPLE AT ANY TIME!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s