அன்று TNLஇல் அஸ்ரப்; இன்று ஹிருவில் ரிசாத்!

image

-இவனா

உங்களுக்கு ஏலுமானால் எமது தொலைக்காட்சி அலுவலகத்திற்கு நேரடி நிகழ்ச்சியான  பலயவுக்;கு வருவீங்களா? நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர தயாரா? என ஹிரு தொலைக்காட்சியிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு எவ்வித சலனமும் இல்லாமல் அமைச்சர் ரிசாதின் பதில் நீங்க நேரத்தை சொல்லுங்கள் நான் வருகின்றேன். என கூறியதாக ஒரு தினசரி பத்திரிகையின் ஊடகவியலாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சி இன்று வியாழன் இரவு 10 மணி முதல் 12 மணி வரை ஹிரு தொலைக்காட்சியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் ரிசாதை அழைத்துள்ளது ஹிரு தொலைக்காட்சி. இந்நிகழ்ச்சியில் ரிசாதுடன் இன்னும் இருவர் அழைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த இருவாராமாக பௌத்த மக்களிடத்தில் இனவாதக் கருத்துக்களை ஹிரு பரப்பி வருகின்றது. முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான பின்னூட்டங்களை பௌத்த பிக்குகளுக்கு வழங்கி அவர்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பிவிட்டுள்ளது.

இதனால் 50 மேற்பட்ட பௌத்த பிக்குகள் கடந்த வாரம் அரச மரங்களை கொண்டு போய் முஸ்லிம்களின் பூர்வீக பிரதேசங்களில் நட்டுவிட்டு வந்துள்ளனர். இந்நிகழ்வு சிங்கள மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் மேலும் தப்பபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்கள் வில்பத்து வனாந்திரத்தை அழித்துள்ளதுடன் அடாத்தாக குடியேறியுள்ளார்கள் என்ற பின்னூட்டத்தை ஹிரு பரப்பி வருகின்றது. இவ் இனவாதக் கருத்துக்கள் இன்று பௌத்தர்களிடத்திலும் மிகவும் ஆழமாக பதிந்து விட்டது.

இதே போன்ற அச்சுட்டான பிரச்சினை தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் காலத்தில் தோற்றம் பெற்றதை நாம் மறந்திருக்க மாட்டோம்.

தீகவாபி பௌத்த விகாரைக்கு பல ஆயிரம் ஏக்கர் காணிகள் ஒதுக்குதல் தொடர்பில் பல கருத்து முரண்பாடுகள் மற்றும் எல்லைப் பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. தீகவாபி பௌத்த விகாரைக்காக பௌத்த பிக்குகள் முஸ்லிம்களின் பூர்வீக நிலங்களையும் உள்ளடக்கியதாக எல்லைக் கோடுகளை வரைந்தனர். இதனல் முஸ்லிம்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். தமது வாழ்வியல் தொடர்பிலும் இருப்பு தொடரிபிலும் அச்சம் கொள்ளலாயினர்.

அப்போது கிழக்கு முஸ்லிம்களுக்கு தோற்றம் பெற்ற அதே அச்சநிலை தற்போது வடக்கு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. எவ்வாறு தலைவர் அஸ்ரபின் காலத்தில் கிழக்கு முஸ்லிம்களின் காணிகள் பௌத்த இனவாதக் குழுக்களால் கையகப்படுத்த சூழச்சி நடந்ததோ அதே சதி தற்போது வடக்கு முஸ்லிம்களுக்கு நடைபெறுகின்றது. 

அக்காலத்தில் தலைவர் அஸ்ரபின் ஆளுமையும் தீவிரமான முன்னகர்வுகளும் முஸ்லிம்களின் உரிமைக்கான போராட்டமும் பௌத்த இனவாதிகளையும் சிங்கள அரசியல் வாதிகளையும்  அச்சம் கொள்ளவைத்தது. இதனால் சிங்கள அரசியல் தலைமைகளும் பிக்குகளும் அஸ்ரபுக்கு எதிராக இயங்க ஆரம்பித்தார்கள் .

எனினும் அஸ்ரப் தான் கொண்டிருந்த உறுதிப்பாட்டில் எவ்வித தளர்வினையும் கொள்ளவில்லை. பிரச்சினை பெரியதோ சிறியதோ அதனை முன்னின்று முடித்துவைத்தார்.

இந்நேரத்தில் தான் அச்சங்கொண்டிருந்த இனவாதிகள் அஸ்ரபை தோற்கடிக்க தொலைக்காட்சி நேரடி விவாதத்திற்கு அழைத்தார்கள். அவ்வாறு அழைப்பு விடுத்தது TNL தொலைக்காட்சி ஆகும்.

அவ் அழைப்புக்கு எவ்வித சலனமும் அற்று துணிச்சலுடன் அஸ்ரப் சென்றார்.

அந்த நேரடி விவாதத்திற்கு தலைவர் அஸ்ரப் அவர்களும் சோம ஹிமியும் நேரடியாக கலந்துரையாடியதையும் விவாதம் செய்ததையும் யாரும் இலகுவில் மறந்து விட முடியாது. 

முஸ்லிம்கள் மீது இனவாதிகள் தொடுத்த குற்றச்சாட்டுக்களை களைந்ததுடன்  அஸ்ரப் அவர்கள் முஸ்லிம்களின் நிலைப்பாட்டையும் துணிச்சலுடன் எடுத்துரைத்தார்.

கிழக்கில் உருவான முஸ்லிம் தலைமையான தலைவர் அஸ்ரபுக்கு ஏற்பட்ட நிலைமை தற்போது வடக்கில் உருவாகியுள்ள ரிசாதுக்கு ஏற்பட்டுள்ளது. தலைவர் அஸ்ரபுக்கு அவ் இக்கட்டன சூழ்நிலையில் எப்படி நேரடி சிங்கள விவாத நிகழ்சிக்கு சென்றாரோ அவ்வாறு ஹிருவின் விவாத நிகழ்சிக்கு ரிசாத் செல்லவுள்ளார்.

இதே போன்று இன்னுமொரு சம்பவத்தை இங்கு குறிப்பிடலாம். சந்திரிக்காவின் அரசாங்கத்தில் கிங் மேக்கராக விளங்கினார் அஸ்ரப். தனக்கு பதவி பட்டாளங்கள் நாட்டில் உயர்ந்த அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்ட போதும் முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்பட்ட போது எவ்வாறு நடந்து கொண்டார். பேச வேண்டிய இடத்தில் பேசினார்.உரத்துக் குரல் கொடுத்தார்.

தலைவர் அஸ்ரபால் கப்பற்துறைமுகத்தில் முஸ்லிம்களுக்கு குறுகிய நாட்களுக்கு பல ஆயிரக்கணக்கான  தொழில் நியமனங்கள் வழங்கப்பட்டன. 

இது மாத்திரமன்றி கொழும்பு துறைமுகத்தில் தொழுவதற்கான ஒரு இடமும் அதனை பராமரிக்க ஒரு ஹாபிழையும் நியமனம் செய்திருந்தார். இந்நிகழ்வு இனவாதிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அச்சங்கொண்ட சில சிங்கள அரிசயல் வாதிகள் அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவுடன் முறையிட்டனர். இதன் தார்ப்பரியத்தை உயர்ந்த சந்திரிக்கா உடனே சில அமைச்சர்களுடன் ஒரு கூட்டத்தை கூட்டினார். இக்கூட்டத்திற்கு அஸ்ரப் அழைக்கப்பட்டு விளக்கம் கேட்டார் சந்திரிக்கா.

இதற்கு அஸ்ரப் அளித்த விளக்கம் அங்கிருந்த சிங்கள அரசியல் வாதிகளை துயில் கொள்ளவைத்தது. அஸ்ரபின் துணிச்சல் சந்திரிக்காவையே ஆட்டங்காண வைத்தது.

இதே போன்ற நிலைமைதான் கடந்த வருடம் மகிந்தவின் ஆட்சியில் இடம்பெற்றது. முஸ்லிம் பள்ளிவாசல் உடைக்கப்படுவதை உடன் நிறுத்த வேண்டும் என முஸ்லிம் தலைவர்கள் மகிந்தவிடம் கோரிக்கை விடுத்தனர். விடயம் சற்று ஆழமாக போவதை உணர்ந்த மகிந்த சில முக்கிய அமைச்சர்களுடன் முஸ்லிம் தலைவர்களையும் அழைத்தார்.

அங்கு பள்ளி உடைப்பு தொடர்பில் உரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் சம்பிக்க ரணவக்க முஸ்லிம்கள் தொடர்பில் மிகவும் பிழையான கருத்துக்களை குறிப்பிட்டு வந்ததுடன் பொய்யான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார். ஏனைய முஸ்லிம் தலைவர்கள் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க அருகில் ஜனாதிபதி இருப்பதையும் பொருட்படுத்தாத ரிசாத் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சம்பிக்கவுக்கு மிகவும் காட்டமாக பதில் வழங்கினார்.

இதனை அவதானித்த ஜனாதிபதி மகிந்த ரிசாதை நோக்கி கைநீட்டி  நீ ஒரு முஸ்லிம் இனவாதி என ஆக்ரோசத்துடன் முஸ்லிம்களுக்கு எதிராக பேச ஆரம்பித்தார். ஜனாதிபதியினால் முஸ்லிம்களுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை பார்த்திராமல்  ரிசாத் எதிர்த்து கதைக்க மகிந்த மிகுந்த ஆத்திரத்துடன் தான் இருந்த கதிரையை இழுத்து ரிசாதுக்கு தூக்கி அடிக்க முனைந்த சம்பவம் அமைச்சர்களிடத்தில் பெரும் பதற்றத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

எப்படி ஜனாதிபதி சந்;திரிக்காவுக்கு அஸ்ரப் பேச  வேண்டிய இடத்தில்  பேசினாரோ அதோ போன்று ரிசாத் மகிந்தவுக்கு பேசினார்.

மேற்கூறிய இரண்டு சம்பவங்களும்; முஸ்லிம்களால் இலகுவில் ஒரு போதும் மறக்க முடியாது.

இதற்கு பிரதான காரணம் துணிவு முஸ்லிம்கள் தொடர்பான அக்கறை, தலைமைத்துவ பண்பு, சதா முஸ்லிம்கள் தொர்பான சிந்தனை போன்றவையே.

இங்கு நாம் இன்னுமொரு விடயத்தை குறிப்பிடலாம் கிழக்கு முஸ்லிம்களுக்கு தொழில் வாய்ப்பையும் முஸ்லிம் ஏழை இளைஞர்களுக்கு கொழும்பையும் காட்டியவர் தலைவர் அஸ்ரப் தான். தொழில்வாய்ப்புக்களை வாரி வழங்கினார். அதே போன்றுதான் வடக்கில் ரிசாத் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள தொழில் வாய்ப்புக்களும் முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கான போராட்டமும்.

ஆக முஸ்லிம்களின் உரிமைகளுக்காக கிழக்கில் உருவான அஸ்ரப் வடக்கில் உருவான ரிசாத் இரண்டு பேரின் அரசியலை உற்று நோக்கினால் இருவரின் பயணம் ஒரு இரயில் தண்டவாளமாகவே உள்ளது. இருவரின் நகர்வுகள் முஸ்லிம்களின் உரிமையை வெல்தனை இலக்காக கொண்டுள்ளமை தெளிவாகின்றது.

நாம் விரும்பியோ விரும்பாவிட்டாலோஒரு விடயத்தை அரசியல் ஆதரவுத்தளத்திற்கு அப்பால் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் அது வட கிழக்கில் உள்ளவர்களுக்கே போராட்டமும், துணிச்சலும், தலைமைத்துவ ஆளுமையும் இருக்கும் என்பதை.

Advertisements

Posted on 21/05/2015, in ஆரோக்கியம், உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s