பிரே­ம­தா­சவின் மறை­விற்­குப்­பின்னர் அந்த இடத்தை நிரப்­பக்­கூ­டிய தலைவர் ஒருவர் எமக்கு தேவை!

image

இன, மத பேதங்­க­ளுக்கு அப்பால் சேவை­யாற்றி கொழும்பு வாழ் மக்­களின் மனங்­களில் குடி­கொண்­டுள்ள முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் மறை­விற்­குப்­பின்னர் அந்த இடம்பெறும் இடை­வெ­ளி­யா­கவே இருக்­கின்­றது. அந்த இடத்தை நிரப்­பக்­கூ­டிய தலைவர் ஒருவர் எமக்கு தேவை என தெரி­வித்த கொழும்பு மாந­கர சபை உறுப்­பி­னரும் கிராண்பாஸ் வடக்கு ஐக்­கிய தேசிய கட்சி அமைப்­பாள­ரு­மான ஆரி­ய­ரட்ன சந்­தி­யாகோ ,

இன, மத பேதங்­க­ளுக்­கப்­பால் மக்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல்­கொ­டுத்து வரும் மேல்­மா­காண சபை உறுப்­பி­னரும் மத்­திய கொழும்பு பிர­தான அமைப்­பா­ள­ரு­மான முஜிபுர் ரஹ்­மான அந்த இடத்தை நிரப்ப மிகவும் பொருத்­த­மா­னவர் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

கடந்த சனிக்­கி­ழமை கிராண்பாஸ் சென் ஜோசப் வீதிஇ  3 ஆம் ஒழுங்­கையில் இடம்­பெற்ற ஆத­ர­வா­ளர்கள் எழுச்சிக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்இ  மத்­திய கொழும்பில் நாம் அர­சியல் அநா­தை­க­ளாக இருக்­கின்றோம். எமது தொகு­தி தொடர்ச்­சி­யாக ஐக்­கிய தேசிய கட்சி ஆத­ர­வுத்­த­ள­மாக இருந்­தாலும் எமக்­கா­ன­தொரு பாரா­ளு­மன்ற பிர­தி­நிதி இல்­லாமல் இருக்­கின்றோம். 

1993  ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி ஆர் பிரே­ம­தா­சவின் மறை­விற்­குப்­பின்னர் மத்­திய கொழும்பு முழு­மை­யாக புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக 1994 ஆம் ஆண்­டுக்­குப்­பின்னர் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஆட்­சி­யொன்று நிலை­யாக உரு­வா­கா­மை­யினால் நாம் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ளோம். அத்­துடன் 2010 ஆண்டு தேர்­த­லின்­போது மத்­திய கொழும்­பி­லி­ருந்து ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் போட்­டி­யிட்­ட­வர்கள் தோல்­வி­ய­டைந்­தனர். இதனால் எமது பிர­தி­நி­தித்­து­வமும் இல்­லா­மல்­போ­யுள்­ளது. 

இன்று எமது வாக்­குகள் பணத்­தாலும் சன்­மா­னங்­க­ளி­னாலும் வாங்­கப்­ப­டு­கின்­றது. பணத்தைக் கொடுத்து வாக்­கு­களை பெற்­ற­பின்னர் அர­சியல் வாதிகள் எம்மை சந்­திக்க வரு­வதே இல்லை. இப்­படி நாம் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டி­ருக்­கிறோம். இந்­நி­லையில் ஆர். பிரே­ம­தா­ச­விற்கு பின்னர் மத்­திய கொழும்பில் ஒரு தலை­வரை உரு­வாக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

இதற்­காக நாம் இனஇ மத பேத­மின்றி செய­லாற்றக் கூடிய மத்­திய கொழும்பின் பிர­தான அமைப்­பா­ளரும் மேல்­மா­காண சபை உறுப்­பி­ன­ரு­மான முஜிபுர் ரஹ்­மானை அடுத்த பாரா­ளு­மன்­றுக்கு தெரிவு செய்ய வேண்டும். அவர் எமது சமூ­கத்தின் உரி­மை­க­ளுக்­காக போராடக் கூடி­யவர். 

தேர்தல் காலம் நெருங்­கு­வதால் பெரசூட் மூலம் சில அர­சியல் வாதிகள் வந்து வீடு தரு­வ­தாக சொல்­வார்கள். அந்த போலி வாக்­கு­று­தி­களை நம்ப வேண்டாம். அடுத்து வரும் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆட்­சியில் மத்திய கொழும்பில் எந்தவொரு அபிவிருத்தி இடம்பெற வேண்டுமானாலும் பிரதான அமைப்பாளர் முஜிபுர் ரஹமானின் மூலமாகவே இடம்பெறும். எனவே அவரை அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிசெய்ய நாம் முயற்சிப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  

Posted on 19/05/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s