சவூதி செல்லும் பெண்களின் ஊதியத்தை ரூ.60 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் தலதா கோரிக்கை!

image

இலங்கையிலிருந்து சென்று சவூதி அரேபியாவில் தொழில் புரியும் பெண்களுக்கு ஆகக் குறைந்த சம்பளமாக ரூபா 60,000 வழங்கப்பட வேண் டும் என எதிர்பார்ப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறள கூறியுள்ளார்.

இலங்கையிலுள்ள அந்நாட்டு தூதுவரா லயத்துடன் ஏற்கனவே நடத்தியுள்ள பேச்சுவார்த்தையின் பேரில் இது தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று வருகை தரவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்நாட்டில் தொழில் புரியும் பணிப்பெண்கள் மாதமொன்று ரூபா 30,000 தொடக்கம் 35,000 சம்பளமாக பெறுவதாக கூறப்படுகின்றது. இந்தத் தொகை ஆகக் குறைந்தது ரூபா 60,000 ஆக இருக்க வேண்டும் என்பதே தமது கோரிக்கை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் தலதா அத்துக்கோறல, ரூபா 50,000ற்கும் 60,000ற்கும் இடைப்பட்ட தொகையாவது கிடைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் சவூதி அரேபிய குழுவுடன் அந் நாட்டில் இலங்கை பணிப் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும் பேசப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

சவூதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப் பெண்களாக அழைக்கப்படும் பெண்களுக்கு உள்நாட்டு முகவர்கள் ஊடாக எஜமான்களால் ஒரு தொகை பணம் கமிஷனாக வழங்கப்படுகின்றது. அந்த கமிஷன் தொகையில் முழுத் தொகையும் அநேகமாக பணிப் பெண்களுக்கு கிடைப்பது இல்லை என ஆட்களை திரட்டி கொடுக்கும் உள்ளூர் முகவர்கள் கூறுகின்றார்கள்.

-தினகரன்

Posted on 17/05/2015, in ஆரோக்கியம், உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s