எகிப்தின் முன்னாள் ஜனா­தி­பதி முஹம்­மது முர்­ஸிக்கு மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்பட்டது.

image

எகிப்தின் முன்னாள் ஜனா­தி­பதி முஹம்­மது முர்­ஸிக்கு இன்று மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எகிப்­திய வர­லாற்றில் ஜன­நா­யக முறைப்­படி மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட முத­லா­வது ஜனா­தி­ப­தி­யாக கரு­தப்­படும் முர்ஸி ஒரு வருட ஆட்­சிக்­கா­லத்தின் பின்னர் 2013 ஜூலை 3 ஆம் திகதி  இரா­ணுவ சதிப்­பு­ரட்சி மூலம் பதவி கவிழ்க்­கப்­பட்டார்.

இத­னை­ய­டுத்து எகிப்தின் இரா­ணுவத் தள­ப­தி­யா­க­வி­ருந்த அப்துல் பத்தாஹ் அல் ஸிஸி அந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகப் பொறுப்­பேற்­ற­துடன் முர்ஸி உட்­பட முஸ்லிம் சகோ­த­ரத்­துவக் கட்­சியின் நூற்றுக் கணக்­கான முக்­கிய தலை­வர்கள் கைது செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டனர்.

அத்­துடன் முர்­ஸியின் ஆட்­சிக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­முறை கலந்த நட­வ­டிக்­கை­க­ளின்­போது1400 பேர் கொல்­லப்­பட்­ட­துடன் ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் கைது செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டனர்.

முர்ஸி மீது மூன்று பிர­தான குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்ள நிலையில் ( வெளி­நா­டு­க­ளுக்­காக உளவு பார்த்­தமை மற்றும் 2011 இல் முபா­ரக்­கிற்கு எதி­ரான கல­வ­ரத்தின் போது சிறை­யி­லி­ருந்து தப்பிச் சென்­றமை ,ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை கொலை செய்த குற்­றச்­சாட்டு தொடர்­பி­லேயே இன்­றைய தினம் மரண தண்­டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது என தெரியவருகிறது.

Posted on 16/05/2015, in சர்வதேச செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s