98 வீதம் முஸ்லிம்களை கொண்ட நாட்டில், அரபு பெயர்களுக்கும், சிறுவர்கள் பள்ளிவாசலுக்கும் செல்ல தடை – ஹிஜப் அணியும் பெண்கள் விலைமாதர்கள்!

image

98 வீதம் முஸ்லிம் சனத்தொகை  முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மத்திய ஆசிய நாடான தஜகிஸ்தானில் குழந்தைகளுக்கு அரபு மொழியில் பெயர் வைப்பதை தடை செய்யும் சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ளது.

தஜகிஸ்தானில் ஏற்கனவே முஸ்லிம் ஆண்கள் தனது தாடியை மழிக்க கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதோடு, சிறுவர்கள் பள்ளிவாசலுக்கு செல்ல தடை மற்றும் ஹிஜhப் அணியும் பெண்கள் விலைமாதர்களாக அரசியல் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தவிர அங்கு சுயாதீன பள்ளி வாசல்கள் மூடப்பட்டு வெளிநாடுகளில் இஸ்லாமிய கல்வி பயிலும் மாண வர்களுக்கு நாடு திரும்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரபு மொழியில் உச்சரிக்கப்படும் பெயர்களை தடை செய்ய சட்டமூலம் கொண்டுவரும்படி தஜகிஸ்தான் ஜனாதிபதி எமோமலி ரஹ்மொன் பாராளுமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

“இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின் பதிவு திணைக்களங்கள் உள் நாட்டு கலாசாரத்திற்கு அந்நியமான பெயர்களை பதிவு செய்யாது” என்று அந்நாட்டு நீதித் திணைக்கள அதிகாரி ஜலோலித்தீர் ரஹிமான் குறிப்பிட்டுள்ளார். எனினும் சட்டமூலம் நிறை வேற்றப்பட்ட பின்னர் பிறக்கும் குழந் தைகளுக்கு மாத்திரமே இது நடைமுறைப்படுத்தப்படும்.

98 வீதம் முஸ்லிம் சனத்தொகை கொண்ட தஜகிஸ்தானில் கடந்த 70 ஆண்டு சோவியட் ஆட்சியின் தாக் கத்தால் அங்கு நாத்திக அரசே ஆட்சியில் இருந்து வருகிறது.

Posted on 12/05/2015, in சர்வதேச செய்திகள், வினோதம். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s