நடைபாதையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க ‘அரபு மொழி’!

image

நமது பக்கத்து நாடான பங்களாதேஷில் ஒரு முக்கியமான மார்க்கெட் பகுதியின் சுவற்றில் சிறு நீர் கழிப்பதை வழக்கமாக சிலர் கொண்டிருந்தனர். மார்க்கெட் நிர்வாகம் பல முறை எச்சரிக்கை போர்டுகளை வைத்தும் ஒரு பலனுமில்லை. இது போன்ற பிரச்னை பல இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தும் ஒரு பயனும் ஏற்படவில்லை. அப்போது மத விவகாரங்களைக் கவனித்து வரும் ஒரு அதிகாரி சிறந்த யோசனை ஒன்றை சொன்னார். அதாவது ‘இங்கு சிறுநீர் கழிப்பது தடை செய்யப்பட்டள்ளது’ என்ற வாசகத்தை அந்தசுவற்றில் அரபி மொழியில் எழுதி வைத்து விடுவது என்ற யோசனையே அது. 

உலகின் பெரும்பாலான முஸ்லிம்கள் குர்ஆன் அரபி மொழியில் இறங்கியதால் அந்த மொழிக்கு தன்னையறியாமல் ஒரு மரியாதையை கொடுப்பர்.(ஆனால் இஸ்லாமிய பார்வையில் தேவ மொழி என்று ஒன்று இல்லை. உலக மொழிகள் அனைத்தையும் இறைவனே படைத்ததாக குர்ஆன் கூறுகிறது) இதனை விளங்கிய அதிகாரி இவ்வாறு வாசகங்களை மக்கள் சிறுநீர் கழிக்கும் இடங்களில் எழுதி வைத்து விடச் சொன்னார். அன்வர் ஹீசைன் என்ற அரசு அதிகாரி இது பற்றி கூறும் போது ‘அரபு மொழியில் எழுதி வைத்தவுடன் அது சிறந்த பலனை எங்களுக்குக் கொடுத்தது. அந்த இடங்கள் தற்போது மிகவும் தூய்மையாக உள்ளன. பல நாட்களாக எங்களுக்கு இருந்த பிரச்னையும் தீர்ந்தது’ என்கிறார். 🙂

நம் நாட்டில் பெரும் பஸ் நிறுத்தங்களில் நுழையும் போதே மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் நுழைகிறோம். குளிர் சாதனங்களோடு அமைந்த நிழற்குடைகளை வைக்கும் அரசாங்கம் சிறந்த கழிப்பிடங்களை கட்டி வைப்பதில்லை. சிறுநீர் கழிக்கும் இடங்களில் தண்ணீர் ஊற்றுவதற்கான வசதிகளையும் செய்து தருவதில்லை. அந்த இடங்கள் உப்பு படிந்து பார்க்கவே அறுவறுப்பாக உள்ளது. நாற்றமும் சகிக்கவில்லை. ஆண்களாவது பரவாயில்லை. பெண்கள் பாடு இன்னும் திண்டாட்டம். சிலர் சுத்தம் கருதி வெளியூர் சென்றால் கழிவறைகளை உபயோகிக்காமல் வீட்டில் வந்தே தங்களின் இயற்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். 

தற்போது பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தனது சிறுநீரை சேமித்து செடிகளுக்கு ஊற்றி சிறந்த விளைச்சலை பெற்றதாக கூறியுள்ளார். எனவே அரசு இது போன்ற சிறுநீர்கள் வீணாகாமல் சேமித்து வைக்க ஒரு அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். அல்லது பங்களாதேஷைப் போன்று மக்கள் புனிதமாகக் கருதுபவர்களின் படங்களை பொது இடங்களில் வைத்து விட்டால் பொது இடங்களில் சிறு நீர் கழிப்பதாவது குறையும். 

தகவல் உதவி
சவுதிகெஜட்

-சுவனப் பிரியன்

Advertisements

Posted on 12/05/2015, in சர்வதேச செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s