மைத்திரி தலைமையில் நடைபெற்ற சுதந்திர கட்சி மே தினத்தில், நிறைவேற்றப்பட்ட 5 முக்கிய தீர்மானங்கள்!

image

நல்லாட்சியில் பெற்றுக்கொண்ட சர்வதேச ஒத்துழைப்பை பாதுகாக்க வேண்டுமென ஸ்ரீல. சு. கட்சி மே தின விழாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இந்த மேதின விழாவில் மேலும் 05 பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டன.

இலங்கையில் சமாதானம். நல் இணக்கம் உருவாவதை தடுப்பதற்காக செயற்படும் சர்வதேச சக்தியை சரியாக இனம்கண்டு அதனைத் தோற்கடிக்கவும் கடந்த மூன்று மாதங்களாக சர்வதேச ஒத்துழைப்பை சரியான பாதையூடாக இலங்கைக்கு பெற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுற்றி ஒன்றிணைத்து பெற்ற சர்வதேச ஒத்துழைப்பை பாதுகாக்க இலங்கை சுதந்திர அடிமையற்ற அரசாக முன்செல்ல இலங்கை மக்கள் ஒன்றுசேர வேண்டுமென இப்பிரேரணையின் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள மக்கள் பூமியதிர்வு காரணமாக எதிர்கொண்ட அழிவுகளுக்காக அனுதாபம் தெரிவிக்கிறோம்.

அவர்களின் சேமநலன்களுக்காக வழங்கக்கூடிய சகல உதவி ஒத்தாசைகளையும் வழங்க பிரேரிக்கிறோம். என மற்றைய பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுகத்துக்குத் தேவையான பொருத்தமான ஒரு புதிய பொருளாதார வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அந்த வேலைத்திட்டம் உற்பத்தி துறையைப் பலமூட்ட வேண்டும்.

வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டுமென பொருளாதாரம் தொடர்பான இப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19ஆவது அரசமைப்பு திருத்த பிரேரணையை நிறைவேற்ற அரசியல் தலைமைத்துவம் வழங்கிய ஜனாதிபதிக்கு மக்களின் கெளரவத்தையும் நன்றியையும் தெரிவிக்கிறோம். இதில் ஒத்துழைத்த அரசியற் கட்சிகள். பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைப்புக்கள். மதத் தலைவர்கள். அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.

20 ஆவது திருத்தத்தையும் நிறைவேற்ற ஆதரவளிப்போம் என மற்றைய பிரேரணை கூறுகிறது.

அரசியல் பிரேரணையில் ஸ்ரீ. ல. சு. கட்சியை மையப்படுத்திய சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து ஐ. தே. கவையும் முற்போக்கு சக்திகளையும் எந்தவொரு தேர்தலிலும் தோற்கடித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிலையான ஆட்சியை உருவாக்க சகல சந்திகளும் ஒன்றிணைய வேண்டுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Posted on 02/05/2015, in ஆரோக்கியம், உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s