ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு நோபல் சமாதான பரிசு!

image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நோபல் சமாதான பரிசை வழங்குமாறு பரிந்துரைக்க சர்வதேச அமைப்பொன்று தயாராகி வருவதாக தெரியவருகிறது.

இன,மதவாதமில்லாத அமைதியான சகவாழ்வை இலங்கைக்குள் கட்டியெழுப்ப தேவை தீர்மானகரமான அரசியல் கடமைகளை நிறைவேற்றியமைக்காக ஜனாதிபதியை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க இந்த அமைப்பு தீர்மானித்துள்ளது.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் கடந்த ராஜபக்ச அரசாங்கம் வேண்டும் என்றே தாமதித்து வந்ததாக மேற்குலக மற்றும் இந்திய அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மகிந்த அரசாங்கம் ஊழலான பொருளாதார நடைமுறைகளை பின்பற்றியது. மகிந்த அரசாங்கத்தின் சர்வதேசத்துடனான செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அதிருப்தியடைந்து இருந்துடன் அவரது ஆட்சியை தோற்கடிக்க தீர்மானித்தாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இப்படியான தீர்மானகரமான அரசியல் சூழ்நிலையில், நாட்டின் இரு பிரதான கட்சிகளின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரது அரசியல் பங்கு சர்வதேச ஆய்வாளர்களின் கவனத்திற்கு உள்ளானது.

இந்த கூட்டு செயற்பாடு, தெற்காசியாவின் மிக நீண்டகால அரசியல் நெருக்கடியை நல்லிணக்கத்தில் முடிவுக்கு கொண்டுவர முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் முக்கியமான அரசியல் செயற்பாடாக கருதப்படுகிறது என ரந்திவ பத்திரிகை தெரிவித்துள்ளது.

Posted on 02/05/2015, in ஆரோக்கியம், உள்நாட்டு செய்திகள், சர்வதேச செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s