வெள்ளை வான் கடத்தல்காரர்கள் நால்வர் 10 வருடங்களின் பின் கைது!

image

வெள்ளை வான் ஒன்றில் மூலம் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்து விட்டு தலைமறைவாகிய 4 பேரை 10 வருடங்களுக்கு பின்னர் சிலாபம் பொலிஸ் நிலைய தீர்க்கப்படாத குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குளியாப்பிட்டிய –இலுக்ஹேன பகுதியை சேர்ந்த அப்புக்குட்டி தேவகே லலந்த என்ற 22 வயதான இளைஞர் 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

கொஸ்வத்த மீகஹாவெல பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்றிருந்த போது இந்த இளைஞர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை நடத்திய பின்னர், இந்த கொலை சம்பவம் தொடர்பாக அப்போது கொஸ்வத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட 5 பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கைது செய்திருந்தனர்.

இவர்களுக்கு எதிரான வழக்கு தற்போதும் சிலாபம் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. 5 பொலிஸ் அதிகாரிகளும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அப்போது உப பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய நபர் தற்போது மாரவில நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக கடமையாற்றி வருகின்றார்.

எவ்வாறாயினும் இந்த கொலையானது வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாக சிலாபம் பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத குற்றப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அவர்கள் அது குறித்து இரகசியமான விசாரணை ஒன்றை மேற்கொண்டு வந்ததுடன் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வென்னப்புவ – சிறிகம்பளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பிரதேசத்தில் நடந்த பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இக்கொலையுடன் கொலையுடன் 9 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்ட நபர்கள் கூறியுள்ளனர். அந்த நபர்களில் ஒருவர் மூன்று கொலைகளை செய்துள்ளார்.

மேலும் இரண்டு நபர்கள் வேறு கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனவும் அது சம்பந்தமாக அவர்கள் தற்போது விளக்கமறியலில் இருந்து வருவதாகவும் சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.

இதனை தவிர மேலும் இரண்டு சந்தேக நபர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளனர். இசை நிகழ்ச்சி ஒன்றை பார்ப்பதற்காக செல்ல தயாரான தன்னை, ஏனைய சந்தேக நபர்கள் அழைத்துச் சென்று இந்த கொலையை செய்ய தூண்டியதாகவும்,இது ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கொலை எனவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்திய வான் தற்போது இத்தாலியில் இருக்கும் சந்தேக நபர்களுக்கு சொந்தமானது எனவும் அவர்கள் சில கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களே மேற்படி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளிகள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேறு ஒருவரை கொலை செய்யவே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்ததாகவும்,எனினும் சந்தேக நபர்கள் தவறுதலாக 22 வயதான இளைஞனை கடத்திச் சென்று கொலை செய்துள்ளதாக 10 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலும் கூறியுள்ளனர்.

Advertisements

Posted on 02/05/2015, in உள்நாட்டு செய்திகள், வினோதம். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s