சர்ச்சையை கிளப்பியுள்ள முஜிபுர் ரகுமானின் மே தின ஊர்வலம்.!

image

முஸ்லிம் அரசியல்வாதிகள் தூர சிந்தனையுடன் நடந்துகொள்ளவேண்டும் அவர்களின்  நடவடிக்கைகள் பேரினவாதிகளை தூண்டி விடுவதாக இருந்து விடக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சி மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளர் பைரூஸ் ஹாஜியார் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது…

நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி  மேதின கொண்டாட்டங்களின் போது மே தின ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்ட மாட்டு வண்டியில் மாட்டின் தலையில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது.

குறித்த மாட்டு வண்டி மத்திய கொழும்பு இணை அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தது அந்த மாட்டு வணடியுடன் வந்தவர்கள் மத்திய கொழும்பு (மெத கொலம்ப) என்ற வாசகம் அடங்கிய டி சர்ட் அணிந்திருந்தனர் .

சிங்கள இணையங்களில் இவ்விடயம் தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளராகிய என்னையும் சிங்கள சகோதரர்கள் விமர்சித்துள்ளனர்.

அது மட்டுமில்லாமல் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட முஸ்லிம்களை வட்டமிட்டு புகைப்படங்களை பிரசுரம் செய்து முஸ்லிம்களை காரசாரமாக விமர்சித்துள்ளனர். மேலும் இவ்விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை பிரமுகர்கள் என்னிடம்  வினவுகின்றனர்.

இப்படியான அதிகப்பிரசங்கி செயற்பாடுகள் இனவாத செயற்பாடுகளை முன்னேடுப்பவர்களுக்கு தீனி போடுவதாக அமைவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த விடயத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை என்பதை நான் அவர்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளேன் .

மஹிந்த ராஜபக்ஷ எமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அவருக்கு ஐம்பத்து ஆறு லட்சம் மக்கள் வாக்களித்தனர் அவர்கலீல் பெரும்பனமையானவர்கள் சிங்களவர்கள் அவரை  நாம் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்ய எமக்கு சகல உரிமைகளும் உள்ளது ஆனால் அவரை நாம் இழிவுபடுத்தும் செயற்பாடுகளை செய்யமுற்படும் போது அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் இனவாதிகள் முஸ்லிம் சமூகத்தை விமர்சித்து எம்மீது சேறு வாரி இறைக்கின்றனர்..

கடந்த காலங்களில் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து சிக்கல்களை தோற்றுவித்தனர் இந்த விடயங்களை நாம் கவனத்தில் கொண்டு நடந்து கொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

image

Advertisements

Posted on 02/05/2015, in உள்நாட்டு செய்திகள், வினோதம். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s