இலங்கை வீரர்கள், மீட்புப் பணியாளர்களுடன் விமானம் கத்மண்டுவில் தரையிறக்கம்!

image

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பொருட்டு முப்படை வீரர்கள், மீட்புப் பணியாளர்கள், மற்றும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய முதலாவது குழு நிவாரணப் பொருட்களுடன் நேற்றுக்காலை நேபாளத்தின் தலைநகரான கத்மண்டுவை சென்றடைந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற விமானப் படைக்குச் சொந்தமான சி – 130 ரக விமானம் காலை 10.30 மணியளவில் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு சென்றடைந்ததாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் மைத்திரி டயஸின் தலைமையில் முப்படைகளைச் சேர்ந்த 156 அதிகாரிகள் மற்றும் வீரர்களை நேபாளத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவற்றில் 131 இராணுவத்தினரும் (12 அதிகாரிகள் 119 வீரர்கள்), 14 கடற்படையினரும் (1 அதிகாரி 13 வீரர்கள்), 11 விமானப் படையினரும் (1 அதிகாரி 10 வீரர்கள்) நான்கு மருத்துவ நிபுணர்களும் அடங்குவர். இவர்களில் முதற்கட்டமாக பெரும் தொகையான நிவாரணப் பொருட்களுடன் முப்படைகளைச் சேர்ந்த ஒரு தொகுதியினரும், நான்கு விசேட மருத்துவ நிபுணர்களும் நேற்று நேபாளத்தைச் சென்றடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நேபாளத்தில் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட 7.9 ரிச்டர்

image

அளவுடைய பாரிய நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங் களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்றுக்காலை இடம் பெற்றது.

முப்படைகளின் பேச்சாளர்களும் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் ஐயனாத் ஐயவீர மேலும் விளக்கமளிக்கையில்,

நேபாளத்தில் நேற்று முன்தினம் திடீரென் ஏற்பட்ட 7.9 ரிச்டர் அளவுடைய பாரிய நிலநடுக்கம் காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் பலியாகியும் மேலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் காயமடைந்தும் உள்ளனர். இந்நிலையில், இலங்கை 1957 ஆம் ஆண்டு தொடக்கம் நேபாளத்துடன் இராஜதந்திர உறவை பேணிவரும் நாடு என்ற வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான நேபாள துதுவர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைகளின் தளபதிகளின் பங்குபற்றுதலுடன் நேற்று முன்தினம் மாலையும் நேற்றுக் காலையும் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரை யாடல்கள் இடம்பெற்றன.

image

இதன்போது அந்நாட்டின் உடனடி தேவையின் நிமிர்த்தம் நிவாரண பொருட்கள் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்களுடன் 156 முப்படை வீரர்களை விசேட விமானம் மூலம் அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நிவாரண பொருட்களுடன் முதலாவது விமானம் கொழும்பிலிருந்து நேபாளத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றதுடன் காலை 10.30 மணியளவில் கத்மண்டுவை சென்றடைந்தது. மீட்பு பணியாளர்களுடன் 666 கிலோ எடை தண்ணீர் போத்தல்கள், 2 ஜெனரேட்டர்கள், 1882 கிலோ மருந்து வகைகள், 244 கிலோ உலர் உணவு பொதிகள், கூடாரங்கள் மற்றும் மீட்புப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பெரும் தொகையான உபகரணங்கள் என்பன கொண்டு செல்லப்பட்டன.

இதுதவிர முப்படையின் மீட்புக் குழுவில் மீட்பு பணிகளுக்காக விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட குழுவினரும் கொமாண்டோ படைப்பிரிவின் பொறியியல் மற்றும் பொறியியல் சேவை படைப்பிரிவினரும் இதில் அடங்குவதாக தெரிவித்தார்.

இதேவேளை, மீட்புப் பணிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முப்படைகளின் தளபதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளனர். இந்நிலையில், அங்கு அனுப்பப்பட்டுள்ள குழுவிற்கு பொறுப்பாக சென்ற மேஜர் ஜெனரல் மைத்திரி டயஸ் விடுக்கும் வேண்டுகோளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், நேபாளத்திற்குச் சென்று மனிதாபிமான மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள முப்படையினர் தொடர்ந்தும் தயார் நிலையில் உள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான சி – 130 ரக விமானம் முதற் தடவையாகவே கொழும்பிலிருந்து நேபாளம் நோக்கிச் சென்றுள்ளதாக விமானப் படையின் பேச்சாளர் வின்ங் கொமாண்டர் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

மேற்படி விமானத்தின் கெப்டனான ஸ்கொட்ரன் லீடர் மஹனாம மற்றும் வின்ங் கொமாண்டர் கிரிஷாந்த ஆகி யோர் 5 மணித்தியால பயணத்திற் குப் பின்னர் நேற்றுக் காலை 10.30 மணியளவில் கத்மண்டுவை சென்ற டைந்துள்ளதாக தெரிவித்த அவர், அந்த விமானம் நாடு திரும்பியவுடன் இன்று மீண்டும் புறப்பட்டுச் செல்லவுள்ளது என்றார்.

இதேவேளை, கடற்படையின் குழுவில் மருத்துவர்களும், நிவாரண உதவியாளர்களும் அடங்குவதாக கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

-தினகரன்

Advertisements

Posted on 27/04/2015, in ஆரோக்கியம், உள்நாட்டு செய்திகள், சர்வதேச செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s