இலங்கை பெண், டுபாயில் தற்கொலை!

image

டுபாய் ராச்சியத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக சேவையாற்றிய இலங்கை பெண்ணொருவர் துன்புறுத்தல் மற்றும் தொழில் தருனரின் வன்முறைகள் காரணமாக கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

இலங்கையிலிருந்து பல பணிப்பெண்களும், பணியாளர்களும் பொருளாதார நெருக்கடி காரணமாக வருமானம் ஈட்டுவதற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்றனர்.

எனினும், கடந்த காலங்களில் அவ்வாறான பணியாளர்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்தநிலையில், பொரேல்லையைச் சேர்ந்த 24 வயதான பெண்ணொருவர் கடந்த வருடம் வீட்டுப் பணிப்பெண்ணாக டுபாய்க்கு சென்றிருந்தனர்.

பின்னர் தாம் பணியாற்றிய வீட்டு உரிமையாளராலும், பெண்களாலும் தாக்கப்படுவதாகவும், வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தமது புதல்வி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கிடைக்கப் பெற்றதாக உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மரணித்த பெண்ணின் சடலம் நேற்று இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக hiru fm செய்திச்சேவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி முகாமையாளர் மங்கள ரண்தெனியவிடம் வினவியது.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக தமக்கு தகவல் கிடைக்கப் பெறவில்லை எனவும், எனினும், சம்பவம் பற்றி தீவிரமாக ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Posted on 26/04/2015, in உள்நாட்டு செய்திகள், சர்வதேச செய்திகள், வினோதம். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s