திசை மாறிப் பயணிக்கும் பலகலைக் கழக மாணவர்கள்.!

image

ஒரு நாட்டில் புத்தி ஜீவிகளையும்,அறிவாளிகளையும் உருவாக்கி சமூகத்திற்கு எடுத்துக் காட்டானவர்களினை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கக்கக் கூடிய பல்கலைக் கழகங்களில் அன்று தொடக்கம் இன்று வரை நுழைக்கப்பட்டுள்ள அரசியலின் தாக்கம் பல் கலைக் கழக மாணவர்களின் பாதைகளினை திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன என்றே கூற வேண்டும்.அரசியல் வாதிகள் மாணவர்களினைத் தூண்டி கலகங்களினை உருவாக்கி சில விடயங்களினைச் சாதிக்க விளைகின்றனர்.இவ் அரசியல் விளையாட்டில் பல் கலைக் கழக மாணவர்களும் அகப்படுகின்றனர்.இவ் அரசியல் அட்டவணைச் செயற்பாடுகளில் பலகலைக் கழக மாணவர்களினை நுழைப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

சரி,பல் கலைக் கழக மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளிற்கு தீர்வு கிடைக்காதவிடத்து வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்ய முனைகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.வீதிகளில் இறங்கி தங்கள் கோரிக்கைகளினை சாதிக்க முனையும் இம் முறையினை அறிவாளிகள் கடைபிடிப்பார்களா? என்பது சந்தேகம்.படிக்காத பாமர மக்கள் செயற்படுவது போன்று நாட்டின் சட்ட திட்டங்களினை மதிக்காது அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களினை மாணவர்கள் முன்னெடுத்துள்ளார்கள்.இம் மாணவர்களின் செயற்பாடுகளினை கட்டுக் கோப்பிற்கு கொண்டு வர கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்து அடி தடி என்ற அறியாத மக்கள் போன்று பல் கலைக் கழக மாணவர்கள் செயற்பட்டுள்ளனர்.

இம் மாணவர்களினை அடித்து விரட்டுவது இலங்கையின் அறிவாளிகளினை ஒருமித்து ஒன்று கூட்டி அடிப்பதற்கு சமனானதாகும்.மாணவர்களின் செயற்பாடுகளினை கட்டுப்படுத்த வந்த பாதுகாப்பு படையினர்களினை இம் மாணவர்கள் தாக்குவதன் மூலம் எதைக் இம் மாணவர்கள் கண்டு கொண்டார்கள்? இது அறியாமையின் உச்ச கட்டம் என்றும் கூறலாம்.நாளை இதே கலாச்சாரத்தினை முன்ணுதாரமாகக் கொண்டு ஏனையோரும் கடைபிடிக்க எத்தனித்தால் நாடு எங்கே செல்லும்?

எனவே,இவ்வாறான பிரச்சினைகளினை ஊடகத்துறையின் பயன்படுத்தல்,இன்னும் எத்தனையோ வழிகள் மூலம் சாதிக்க முயன்றிருக்கலாம் அல்லவா..??இது தான் அறிவாளிகளின் செயற்பாடுகளும் கூட.மேலும்,தங்களது அறிவால் எதிர் கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தால் அதனை எதிர் கொள்ள ஆர்பாட்டங்கள் செய்ய சிந்திக்கலாம்.அவ் ஆர்ப்பாட்டங்கள் செய்யும் முறைமை எனையோரிற்கு படிப்பினையாக அமைய வேண்டும்.சுருக்கமாக சொல்வதென்றால் அகிம்சாவழிப் போராட்டங்களினை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும்.இவ் ஆர்பாட்டங்களில் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்காமை,நாட்டின் சட்ட திட்டங்களை மதித்தல்,பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்காமை போன்ற ஒழுக்க விழுமியங்கள் பேணப்படுதல் வேண்டும்.ஆனால் இன்று நடைபெறுபவை..??

அண்மையில் இரண்டு கோரிக்கைகளினை முன் வைத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் களம் இறங்கி இருந்தனர்.இதில் ஒன்று மஹாபோல புலமை பரிசில் பணத்தினைக் குறைத்தல்,தனியார் கல்வித் துறையின் ஊடுருவலைத் தடுத்தல் ஆகியனவாகும்.இதில் மஹாபொல பணத்தினை குறைக்கும் எச் செயலினையும் அரசு உத்தியோக பூர்வமாக அறிவிக்க வில்லை மேலும்,ஆதாரத்துடன் நிரூபிக்கும் அளவு தனியார் கல்வித் துறைக்கு இவ் அரசு முக்கியத்துவமும் வழங்கவில்லை.இப்படியான ஒன்றிற்கு அலறி மாளிகைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்ய எத்தனிப்பது அறிவுடமையான செயல் அல்ல.இது முற்று முழுதான அரசியல் காய் நகர்த்தல்கள் எனலாம்.

இவ் ஆர்ப்பாட்டம் செய்யத் தூண்டும் மாணவர்ககாண அடித்தளம் அரசியல் வாதிகளினால் இடப்படுகின்ற போதும் அது அரசியல் வடிவம் கொண்டு மாணவர்களிடம் செல்வதில்லை.காரணம்,இறுதி ஆண்டு மாணவர்களில் தலைவரிற்கு இதனை ஏவினால் அது அவர் செயலாக மாணவர்களினை சென்றடையும்.பகடி வதை நடைபெறும் காலப்பகுதியில் ஒரு செய்தி மாணவத் தலைவரிற்கு அறிவிக்கப்படும் போது அது மாணவர்களிடையே யார் இச் செய்தியினை வழங்கினார் என்பது மறைக்கப்பட்டு மிக அவசரமாக பரப்பப்படும்.இச் செயற்பாடும் இவ் ஆர்ப்பாட்டங்களிற்கான மிகப் பெரிய அடித்தளங்களினை வழங்குகிறது.மாணவர்களும் தனது ஆண்டு மாணவர்களுடன்,தனது சிரேஸ்ட மாணவர்களுடன் ஒத்துப் போக வேண்டும் என்ற நோக்காடும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் கலந்தும் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Advertisements

Posted on 13/04/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s