உலகையே வியப்பில் ஆழ்த்திய, புருனேய் நாட்டு மன்னருடைய, மகனின் தங்கத் திருமணம்!

image

புருனேய் (Brunei) நாட்டு மன்னர் தனது மகனின் திருமணத்தை தங்கத்தால் இழைக்கப்பட்ட அரண்மனையில், ஆடம்பரமாக நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். உலக பணக்கார குடும்பங்களில் ஒன்றான புருனேய் நாட்டு மன்னர், தனது 6 வது மகனான அப்துல் மாலிக் (Abdul Malik-31) என்பவருக்கு திருமணம் நிச்சயத்திருந்தார்.

இதனை தொடர்ந்து நேற்று புருனேய் தலைநகரில் உள்ள Istana Nural Iman அரண்மனையில்,உலகமே வியக்கும் வகையில் ஆடம்பரமாக இந்த திருமணம் நடந்துள்ளது. தங்கத்தால் இழைக்கப்பட்ட அரண்மனையின் மையத்தில் வைக்கப்பட்டிருந்த விசேஷ நாற்காலிகளை நோக்கி மணமக்கள் நடந்து வருகின்றனர்.

மணமக்கள் இருவரும் அணிந்திருந்த திருமண ஆடைகள், அங்கு கூடியிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தங்க ஆபரணங்களால் இளவரசரின் ஆடைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மேலும் வைரம், வைடூரியம், ரத்தின கற்கல், உள்ளிட்ட விலைமதிப்பற்ற ஆபரணங்களுடன் மணமகளான Haji Bolkiah(22) அரங்கிற்குள் வந்தார்.

மணமகள் அணிந்திருந்த வைரத்தால் செதுக்கப்பட்ட காலணிகள், காதணிகள் மற்றும் தங்க கொலுசுகள், விருந்தினர்களின் மனதை கொள்ளை அடிக்கும் விதமாக இருந்தது. இந்த திருமணத்தை அந்நாட்டு மன்னரான Hassanal Bolkiah, தனது மதச்சடங்குகளை உரிய முறையில் பின்பற்றி நடத்தி வைத்தார்.

இதில் மலேசிய நாட்டை சேர்ந்த அமைச்சர்கள், அரேபிய நாட்டு ஆளுனர் உள்ளிட்ட உலக முக்கிய தலைவர்கள் மற்றும் பணக்காரர்கள் பங்கேற்றனர்.

மேலும் அரண்மனையில் உள்ள சுமார் 1788 அறைகளும் தங்கத்தால் இழைக்கப்பட்டு விருந்தினர்களுக்கு தங்குவதற்காக வசதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

image

image

Advertisements

Posted on 13/04/2015, in சர்வதேச செய்திகள், வினோதம். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s