இலங்கையில் மிதிவெடிகளை அகற்ற கனேடிய அரசு தொடர்ந்தும் உதவுமாம்!

image

இலங்கையில் மிதிவெடிகளை அகற்ற தமது அரசு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்துள்ளது என்று கனேடிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இலங்கையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மிதிவெடியற்ற சுற்றுச் சூழலை உருவாக்குவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு கனடா தனது ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்கும்.

இந்த அறிவிப்பை, “மிதிவெடியகற்றும் செயற்பாட்டுக்கான உதவி மற்றும் மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தில்” வெளியிடுவதில் கனடா உயர்ஸ்தானிகராலயம் மகிழ்ச்சியடைகின்றது.

500இற்கும் மேற்பட்ட குடும்பங்களை மீளக் குடியமர்த்தக் கூடிய 1000 ஹெக்ரெயருக்கு மேற்பட்ட உயர் விளைச்சல் மிக்க விவசாயக் காணிகளை விடுவிக்க வசதிப்படுத்தும் வகையில், இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக மிதிவெடி ஆலோசனைக் குழுவின் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க கனேடிய அரசாங்கம் 850,000 டொலர்களை வழங்கவுள்ளது. மிதிவெடியினால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழும் இலங்கையர் பாதுகாப்பாக இருப்பதில் இந்நிதியுதவி முக்கிய பங்காற்றும்.

கனடா போன்ற பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்கப் பணிகள், உயிர்களைப் பாதுகாத்தல்,மீளத் திரும்புதலுக்கு வசதிப்படுத்தல் மற்றும் பாரபட்சமற்ற இத்தகைய ஆயுதங்களின் பாவனையை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்குடன் உரிய சர்வதேச கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளுதல் என்பவற்றை ஊக்கபடுத்துகிறது.

இந்தப் புதிய நிதியுதவியானது,முன்னாள் மோதல் பிரதேசங்களிலிருந்து பாரியளவிலான வெடிப்பொருள்களை அகற்றுவதில் வெற்றிகரமாகச் செயற்பட்ட மெக் மற்றும் ஹலோ டிரஸ்ட் போன்ற சர்வதேச மிதிவெடியகற்றும் அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமையினூடாக இலங்கையில் மிதிவெடியகற்றும் முயற்சிகளுக்கான கனேடிய அரசாங்கத்தின் பங்களிப்பு முன்னைய முக்கியத்துவத்தைக் கட்டியெழுப்பும். இது இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு மீளக் குடியமர்த்த உதவுவதாகவிருக்கின்றது.- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Posted on 04/04/2015, in உள்நாட்டு செய்திகள், சர்வதேச செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s