யெமன் அரசை பாதுகாக்க சவ+தி கூட்டணி ஹவ்திக்கள் மீது தொடர்ந்து வான் தாக்குதல்!

image

ஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் பலி

சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி யெமனில் ‘pயா ஹவ்தி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது இரண்டாவது நாளாக நேற்றைய தினமும் வான் தாக்குதல்களை நடத்தியது. கிளர்ச்சியாளர்களுடன் போராடும் யெமன் ஜனாதிபதி அப்த்-ரப்பு மன்சூர் ஹதி சவ+தி தலைநகர் ரியாதை சென்றடைந்துள்ளார்.

தேவையான காலம் வரை ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் மீதான வான் தாக்குதல் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று மேற்படி கூட்டணியின் பேச்சாளர் பிரிகேடியர் அஹமது அல் அசிரி குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்போதைய சூழலில் தரைவழியாக படைகளை அனுப்பும் திட்டம் இல்லை என்றும் அவ்வாறான சூழலுக்கு துருப்பினர் தயாராகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ரியாத் நகரை வந்தடைந்த ஜனாதிபதி ஹதி, வார இறுதியில் நடைபெறும் அரபு லீக் கூட்டத்தில் பங்கேற்க அங்கிருந்து நேராக எகிப்து செல்ல திட்டமிட்டுள்ளார்.

கிளர்ச்சியாளர்கள் இரு தினங்களுக்கு முன் ஜனாதிபதி ஹதியின் அடைக்கல நகராக இருந்து வந்த தெற்கில் அதெனை நோக்கி முன்னேறி யதை அடுத்து அவர் எங்கிருக்கிறார் என்பது உறுதியான முதல் சந்தர்ப்பமாக இது அமைந் தது. யெமன் தலைநகர் சனாவை கிளர்ச்சியா ளர்கள் கைப்பற்றியதை அடுத்து ஜனாதிபதி ஹதி கடந்த மாதம் அங்கிருந்து தப்பிவந்து அதென் நகரில் அடைக்கலம் பெற்றதோடு அதனையே தலைநகராகக் கொண்டு இயங்கி வந்தார்.

சவ+தி அரேபியா நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு தொடக்கம் 10 கூட்டணி நாடுகளுடன் சேர்ந்து யெமன் மீது மீண்டும் வான் தாக்குதல்களை நடத்தியது.

இந்த கூட்டணி நாடுகளில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸிலைச் சேர்ந்த ஐந்து நாடுகள் அடங்கும்.

யெமனின் ஹதி அரசை பாதுகாக்க எடுக்க வேண்டிய எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க இந்த கூட்டணி தயாராக இருப்பதாக அமெரிக்காவுக்கான சவ+தி தூதுவர் அதல் அல் ஜ{பைர் வொ’pங்டனில் இருந்து குறிப்பிட்டார். கடந்த செப்டெம்பர் தொடக்கம் ஹவ்திக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலைநகர் சனாவில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.

யெமனில் மக்கள் போராட்டத்தின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அலி அப் துல்லாஹ் சலாஹ்வுக்கு விசுவாசமான இரா ணுவப் பிரிவின் முகாம் மீது சவ+தி கூட்டணி தாக்குதல் நடத்தியுள்ளது. சலாஹ் ஹவ்திக்க ளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று சவ+தி அரேபியாவின் எல்லையில் இருக்கும் ஹவ்திக் கிளர்ச்சியாளர்களின் கோட் டையான சாதாவிலும் வான் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதன்போது இராணுவப் பிரிவொன்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதில் அதென் நகரில் இருக்கும் அல் அனத் விமானத்தளம் மற்றும் நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய நகரான தாயிஸில் இருக்கும் தாரிக் விமானத்தளம் ஆகியவற்றின் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடு கின்றன.

தலைநகரில் வியாழனன்று நடத்தப்பட்ட வான் தாக்குதல் களில் குறைந்தது ஆறு குழந் தைகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள் ளது. இந்த குண்டு மழையால் 18 பேர் கொல்லப்பட்டதாக ஹவ்திக்கள் முன்னர் குறிப்பிட்டி ருந்தனர்.

வான் தாக்குதலுக்கு எதிராக தலைநகரில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த வான் தாக்குதல்களுக்கு சவ+தி அரேபியா 100 யுத்த விமானங்களை பயன்படுத்தியுள் ளது.

ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன், குவைட், கட்டார், ஜோர்தான், மொரோக்கோ மற் றும் சூடான் ஆகிய நாடுகள் இந்த வான் தாக்குதல்களில் கூட்டணி சேர்ந்துள்ளன. மறுபுறம் ஹவ்திக்களுக்கு எதிரான தரைவழி நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டால் அதில் பங்கேற்க தயாராக இருப்பதாக எகிப்து, ஜோர்தான், சூடான் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உறுதி அளித்துள்ளன.

இந்த நடவடிக்கைக்கு பொருள் மற்றும் உளவு உதவியை வழங்கி வருவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த கூட்டணி ஒரு பரந்த யுத்தத்திற்கு தூண்டும் வகையில் இருப்ப தாக ஹவ்தி தளபதி ஒருவர் எச்சரித்துள்ளார்.

பிராந்தியத்தின் ‘pயா சக்தியாக இருக்கும் ஈரான் ஹவ்திக்கள் மீதான தாக்குதலை உடன் நிறுத்தும்படி சவ+தி அரேபியாவை வலியுறுத் தியுள்ளது.

எனினும் ஹவ்திக்களுக்கு ஈரானே நிதி மற்றும் பயிற்சி உதவிகளை வழங்குவதாக சுன்னி ஆதிக்க நாடான சவ+தி குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் ஈரான் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. ஹவ்திக்களுக்கு எதிரான தாக் குதலுக்கு ஆதரவளிப்பதாக துருக்கி ஜனா திபதி ரிசப் தய்யிப் எர்துகான் குறிப்பிட்டுள்ளார். சவ+தி ஆரேபியா மற்றும் வளைகுடா நாடுகளை ஈரான் எரிச்சலூட்ட ஆரம்பித்திருப்பதாக எர்துகான் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

யெமனில் பிராந்திய நாடுகள் தலையிட் டிருக்கும் நிலையில் கூட்டுப்படையின் தாக்குதல் ஆரம்பமானது தொடக்கம் மசகு எண்ணெய்யின் விலை 6 வீதத்தால் உயர்ந்துள்ளது.

Posted on 28/03/2015, in சர்வதேச செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s