பாராளுமன்ற உறுப்பினர்களை 255 ஆக அதிகரிக்க ஏற்பாடு ?

image

தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட்டு  விகிதாசார முறையை இரத்து செய்யும் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிகையை 255 ஆக அதிகரிக்கவும் தீர்மாணிக்கப் பட்டுள்ளதாக தெரியவருகிறது

தொகுதி வாரியாக 160 பாராளுமன்ற உறுப்பினர்களும் 22 மாவட்டங்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் 70 உறுப்பினர்களும் தேசிய பட்டியல் மூலமாக 20 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட உள்ளனர்

20 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் 5 பெண்களை நியமிக்க வேண்டியது கட்டாயமாகும்.இந்த தேர்தல் முறை மாற்றத்தை 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமாக பாராளுமன்றத்தில் சமர்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இது சம்பந்தமாக இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

அதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார இடம்பெரபோகும் பாராளுமன்ற தேர்தலை தற்போது உள்ள முறையிலேயே நடாத்த வேண்டும் தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படவேண்டும் ஆனால் அதை உடனடியாக செய்வதில் பல பிரச்சினைகள் உள்ளன என தெரிவித்துள்ளமை இங்கு குறிபிடத்தக்கது .

தற்போது நடைமுறையில் இருக்கும் விகிதாசார முறை சிறுபான்மை ,மற்றும் சிறு கட்சிகளுக்கு ஓரளவு வாய்ப்பான தேர்தல் முறை என்று கருதப்படும் அதேவேளை உத்தேசிக்கப் படும் தொகுதிவாரி தேர்தல் முறைமை சிறுபான்மை ,மற்றும் சிறு கட்சிகளுக்கு பாதகமானது என்பது சுட்காட்டத்தக்கது.

Posted on 28/03/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s