அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கராத்தே ராஜா.!

image

தமிழ் திரைப்பட நடிகரான
கராத்தே ராஜா அவர்கள்
இஸ்லாத்தை தழுவியதாக
நேற்றைய தினம் செய்தி
வெளியிட்டிருந்தது .

அந்த செய்தியை அறிந்த மக்கள்
மகிழ்ச்சியை வெளிப்படுத்தி
அவருக்காக
பல்லாயிரக்கணக்கான மக்கள்
துஆ செய்தனர்.

இதற்கிடையில் அவர்
இஸ்லாத்தை ஏற்கவில்லை
என்று மறுபுறம் அவதூறு
ஒன்றும் பரவியது.

அதனைதொடர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத அவரை
தொலைபேசி வாயிலாக
தொடர்பு கொண்டு
கேட்டபோது.

இஸ்லாத்தின் கொள்கைகள்
என்னை ஈர்த்து விட்டதால் ஏக
இறைவன் ஒருவனே என்றும்,
இறைத்தூதர் நபிகள் நாயகம்
என்றும் நான் முழு மனதார
ஈமான் கொண்டு இஸ்லாத்தை
ஏற்றுக்கொண்டதாகவும் 5
நாட்களாக 5 வேளை
தொழுகையில் ஈடுபட்டு
வருவதாகவும் தெரிவித்தார்.

அதை ஏன் பகீரங்கமாக
அறிவிக்காமல் உள்ளீர்கள் என்று
கேட்டபோது.

இஸ்லாத்தை ஏற்பது என்பது
முழு மனதோடு ஈமான்
கொள்வது மட்டுமே, அது ஓர்
சடங்கு சம்பிரதாயம் அல்ல அதை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியாக
ஆக்கவிரும்பவில்லை என்று
கூறினார்.

இருவிதமான கருத்துக்கள்
மக்கள் மத்தியில் பரவுவது
முறையல்ல, அதை
தெளிவுப்படுத்துவது
உங்களுடைய கடமை என்று நாம்
அவரிடம் கூறினோம்.

தாம் தற்போது
கொடைக்கானலில் இருப்பதால்
சென்னைக்கு சென்று
முறையாக அறிவிப்பதாக
கூறினார்.

இந்நிலையில் கொடைக்கானல் FM சார்பாக கராத்தே ராஜா அவர்களை இன்று காலை 10.30
மணியளவில் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக கேட்டுள்ளார்கள், அவர்களிடம் தாம் இஸ்லாத்தை தழுவி விட்டதாக இன்று கராத்தே ராஜா அவர்கள் பகீரங்கமாக அறிவித்து
அவதூறுகளுக்கும் சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.

அவரது முகத்தில் என்ன ஒரு
சந்தோசம்… எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே….

-நன்றி : யாசர் அரபாத், மாவட்டத்
செயலாளர், இந்திய தவ்ஹீத்
ஜமாஅத

Posted on 28/03/2015, in சர்வதேச செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s