ரெஸ்டாரண்ட் கழிவு சமையல் எண்ணெயில் விமானம் இயக்கும் சீன நிறுவனம்!

image

சீனாவில் ரெஸ்டாரண்ட் கழிவு சமையல் எண்ணெயில் போயிங் ரகவிமானம் இயக்கப்பட்டு உள்ளது. 

சீனாவில் ஹைனன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயோஆயிலில் வெற்றிகரமாக வணிக விமானத்தை இயக்கி உள்ளது. விமான எரிபொருளுடன், மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் கழிவு சமையல் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. போயிங் 737-800 ரக விமானம் செங்காயில் இருந்து பெய்ஜிங் நகருக்கு வெற்றிகரமாக இயக்கப்பட்டு உள்ளது. உயிருக்கு பெரும் அச்சம் விளைவிக்க கூடிய கழிவு சமையல் எண்ணெயில் இருந்து, விமானத்தை இயக்கி சீனா ஆய்வாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர். பயோஎரிபொருள் உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என்பதை இது காட்டுகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. 

ரெஸ்டாரண்ட் கழிவு சமையல் எண்ணெயில் இருந்துதான் இந்த பயோஎரிபொருள் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது உண்மை. சீனாவில் பெருமளவில் கழிவு சமையல் எண்ணெய் வழங்கப்படுகிறது. சீனாவில் வடிகால் தடுப்பு மற்றும் சாக்கடை போன்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு வழிசெய்யும் கழிவு எண்ணெய் கொண்டு விமானம் இயக்கப்பட்டு உள்ளது. ஹைனன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயோஆயிலில் வெற்றிகரமாக வணிக விமானத்தை செங்காயில் இருந்து பெய்ஜிங் நகருக்கு இயக்கியது. விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியதும், விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் விமானம் பயோ எரிபொருளில் இயக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. 

விமானத்தில் பயணம் செய்த ஹைனன் ஏர்லைன்ஸ் துணை தலைவர் பு மிங் பேசுகையில், விமானம் மிகவும் சீராக இயங்கியது. எந்தஒரு மறுப்பட்ட அனுபவமும் எனக்கு இல்லை. நாடு முழுவதும் இந்த பயோ எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கப்படும் என்று நம்புகிறேன். என்று கூறினார். விமானம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும், மறுபுறம், குறைந்த கார்பன் பயோஎரிபொருள் கணிசமாக கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் குறைக்கிறது, சீனாவிற்கு உதவியாக இருக்கும், சீனா சினோபிக் செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். கழுவு எண்ணெய்யை மற்றொரு பொருளாக பயன்படுத்தவும், மோசமான கழிவு எண்ணெய்யை உணவு பொருட்களில் சேர்க்கப்படுவதையும் தவிர்க்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சீனாவின் ஆயில் மற்றும் கேஸ் நிறுவனமான சினோபிக், பயோஎரிபொருளுக்கு ரெஸ்டாரண்ட் கழிவு எண்ணெய் மூலப்பெருளாக பயன்படுத்தப்படுகிறது, என்று தெரிவித்து உள்ளது. சீனாவில் பல்வேறு தரப்பில் இருந்து கழிவு எண்ணெய் பெறப்பட்டு பயோ எரிபொருள் உருவாகப்படுகிறது. இருப்பினும் விலை அதிகம் காரணமாக புதிய பயோஎரிபொருளை வாங்க ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன என்று சீன செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இருப்பினும் கழிவு எண்ணெய் மீண்டும், உணவு பொருளுக்கு பயன்படுத்தப்படுவது தடுக்கப்படுகிறது. 

Posted on 27/03/2015, in சர்வதேச செய்திகள், வினோதம். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s