உலகின் மிக விலையுயர்ந்த பர்கர்: துபாயில் ரூ.4 லட்சத்துக்கு விற்பனையாகி புதிய சாதனை!

image

உலகின் கோடிஸ்வர நாடாக அறியப்படும் துபாயில் ஒரேயொரு பர்கர் 25 ஆயிரம் திர்ஹம்களுக்கு விலைபோய் புதிய சாதனை படைத்துள்ளது.

‘பிங்க் கேரவன்’ என்னும் தொண்டு நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், இலவச பரிசோதனை முகாம்களையும் தொடர்ந்து நடத்தி வருகின்றது. ஆண்டுதோறும் 30 புற்று நோயாளிகளின் சிகிச்சைக்கான செலவுகளையும் இந்த அமைப்பு ஏற்றுக் கொள்கின்றது.

’பிங்க் கேரவன்’ குழுவினரின் தொண்டுகளுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த அமைப்பினரின் நல்லெண்ண தூதரும், ஷார்ஜா அரசின் புள்ளியியல் மற்றும் சமுதாய மேம்பாட்டுத்துறையின் தலைவருமான ஷேக் முஹம்மது பின் அப்துல்லா அல் தானி என்பவர் ஒரு விசேஷ பர்கரை தயாரித்தார். துபாயில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இந்த பர்கர் ஏலம் விடப்பட்டது. 

ஏராளமான செல்வந்தர்கள் நான், நீ என இந்த பர்கரை வாங்க போட்டிப் போட்டுக் கொண்டு ஏலம் கேட்டனர். இறுதியில் 25 ஆயிரத்து 690 திர்ஹம்களுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் நான்கு லட்சம் ரூபாய்) இந்த பர்கர் ஏலம் போனது. 

அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் ஒரு பர்கர் 18 ஆயிரம் திர்ஹம்களுக்கு விற்கப்பட்டதே இதற்கு முந்தைய உலக சாதனையாக கருதப்பட்டது. அந்த சாதனையை முறியடித்து உலகிலேயே மிக அதிகமான விலைக்கு விற்பனையான பர்கர் என்ற பெருமையை இந்த துபாய் பர்கர் பெற்றது.

Posted on 23/03/2015, in சர்வதேச செய்திகள், வினோதம். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s