உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று!

உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று

உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

பத்திரிகை சுதந்திரத்தை பரப்பும் நோக்கிலும், “மனித உரிமைகள் சாசனத்தின் 19 ஆம் பிரிவின் பிரகாரம் கருத்து சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தின் படி, ஆண்டுதோறும் மே மாதம் 3 ஆம் திகதி பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சிறந்த எதிர்காலத்திற்கான ஊடக சுதந்திரம் 2015 ஆம் ஆண்டிற்குப் பின்னராக அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை கூர்ப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் இம்முறை உலக ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

Posted on 03/05/2014, in சர்வதேச செய்திகள் and tagged . Bookmark the permalink. 2 பின்னூட்டங்கள்.

  1. உலக பத்திரிகைச் சுதந்திர தினத்திலாவது,

    இந்நாட்டில் காவியுடையுடன் முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து மதங்களுக்கெதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள காiடைத்தனத்தைக் கண்டியுங்கள். உலகறியச் செய்யுங்கள்.

    அரசின் அசமந்த போக்கை, அடாவடித்தனத்தைக் கண்டுகொள்ளாப் போக்கை, சட்டத்தையும் ஒழுங்கையும் பாழ்படுத்திக் கெண்டிருக்கும் பண்பை, சட்டத்தால் அனைத்து மக்களையும் காக்க வேண்டிய பொறுப்பைத் தட்டிக கழித்துள்ளதை வெளிக் கொணருங்கள்.

    ஹோட்டலுக்குள் பத்திரிகையாளர் மாநாடு நடத்துவதைக் கூட பொலிஸார் முன்னினலையிலேயே குழப்பியடித்த அராஜகப் போக்கை உலகறியச் செய்யுங்கள்!

  1. பிங்குபாக்: உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று! | truthintruth

பின்னூட்டமொன்றை இடுக