யுவன் சங்கர் ராஜா இயற்கை மார்கத்தை ஏற்ற ஒரு முஸ்லிம் !


مَنْ صَلَّى صلَوتَنَا واسْتَقْبَلَ قِبْلَتَنا وَاَكَلَ ذَبِيحَتَنا فَهُوَ مُسْلِمٌ
என்பது நபி மொழி:.. எவர் நமது தொழுகையை தொழுகிறாரோ
எமது கிபுலாவை முன்னோக்குகின்றாரோ எமது “ஸபீஹா”( அறுத்ததை) உண்ணுகிறாரோ அவரே முஸ்லிம் என கருதப்படுவார்.

ஒருவர் எந்த நாட்டை சேர்ந்தவராயிருந்தாலும் எந்த சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் , எந்த நிறத்தை உடையவராக இருந்தாலும் , எந்த மொழியை பேசினாலும் எல்லாம் வல்ல ரஹ்மான் நம்மைப் படைத்த ஏக இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவர் தான் முஸ்லிம் !!

எந்த ஒரு மனிதனும் பிறப்பால் முஸ்லிமாவதில்லை; இஸ்லாத்தை கடைப்பிடிப்பதன் மூலம்தான் ஒருவன் முஸ்லிமாகிறான், முஸ்லிம் வீட்டில் பிறந்த ஒருவன் இஸ்லாத்தை பின்பற்றுவதை விட்டுவிட்டால் அவன் முஸ்லிம் இல்லை

ஒரு முஸ்லிமுக்கும் ஒரு முஸ்லிமல்லாதவனுக்கும் இடையிலுள்ள அடிப்படை வேற்றுமை பெயர், உடை ரீதியானதல்ல!இவ்விருவருக்கும் இடையில் அடிப்படையான வேற்றுமை அறிவு ரீதியானதாகும்.எல்லாக் கொள்கைகளையும் புறக்கணித்துவிட்டு ஓரிறைக் கொள்கை மட்டுமே ஹக் என்று அடையாளங்கண்டு அல்லாஹ்வின் பக்கமே திரும்பி விட்டால், அதிலேயே நிலைத்திருக்க ஆசைப்பட்டால், அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்து வாழ விரும்பினால் அதற்கான வெளிப்பாடு தொழுகை மட்டுமே!

நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவே அன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை! (ஸாரியாத் – 56)

“நிராகரிப்புக்கும், நம்பிக்கைக்கும் இடையே தொழுகையை விடுவது எல்லைக் கோடாகும்!”(திர்மிதி)

தொழுகையை நிலைநிறுத்துவீராக! தொழுகை மானக்கேடான, மற்றும் தீய செயல்களை தடுக்கின்றது. (அன்கபூத் – 45)

முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)

தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி)

அருமை சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுக்கு அல்லாஹ் தவ்பீக் செய்துள்ளான் எனவே இவர் இஸ்லாத்தை படிப்படியாக சரியாக உணர்ந்து கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் நல்லதொரு முஸ்லிமாக , இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஆக்கிக்கொண்டு தொடர்ந்து நேர்வழியில் நிலைத்திருக்க எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் .. இந்த பதிவைப் படிப்பவர்களும் துஆ செய்யுங்கள் .. இன்ஷா அல்லாஹ் …

குறிப்பு : இந்த பதிவில் முஸ்லிம்களுக்கும் , முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஒரு சில படிப்பினைகளோ, செய்திகளோ, நினைவூட்டல்களோ உள்ளது .

– தக்கலை கவுஸ் முஹம்மத்

Posted on 11/02/2014, in ஆரோக்கியம், சர்வதேச செய்திகள் and tagged , . Bookmark the permalink. 1 பின்னூட்டம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s